PDA

View Full Version : என்ன துன்பமோ?

குணமதி
11-02-2010, 03:52 PM
என்ன துன்பமோ?

குழந்தை அழுகுரலாய்...

நீர்ப்பறவையின் ஒலி!

ஐயோ, ஏனோ?

என்ன துன்பமோ?

எப்படித் தீர்ப்பது?

யாரால் முடியும்?

தெரிந்தவர் இருந்தால்...

அழைத்து வந்து காட்டலாம்.

எப்படியாவது உதவ வேண்டுமே!

மனத்தை வருத்துகிறது!

அமைதியின்றி கலக்கமாக இருக்கின்றது.

என்ன செய்வது?

அப்பா சொன்னார்:

இந்தப் பறவை எப்போதும்...

அழுவது போல் தான் ஒலி எழுப்புமாம்!

இயல்பான ஒலியே அதுதானாம்!

அப்படியா...?

அப்பாடா!

ஜனகன்
11-02-2010, 05:58 PM
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்.
உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கோணம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.

குணமதி
12-02-2010, 02:07 AM
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள்.
உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கோணம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.

நன்றி நண்பரே.

கீதம்
13-02-2010, 10:52 PM
சில ஒலிகள் அழுகுரலாய், சில ஆக்ரோஷமாய், இன்னும் சிலவோ அமைதியைக் குலைக்கும் விதமாய் காட்டுக்கத்தலாய் இன்னும் எப்படி எப்படியெல்லாமோ இயற்கையில் அமைந்துள்ளன. அத்தனையும் அதனதன் தனித்துவமே. இயல்பான ஒலிக்கும் தவித்த, இளகிய மனங்கொண்ட உங்களைப் பாராட்டுகிறேன்.

கவிதை மிக நன்று, குணமதி அவர்களே.

குணமதி
14-02-2010, 02:32 AM

பாராட்டுக்கு மிக்க நன்றி.

கலையரசி
14-02-2010, 03:51 AM
சிறு பறவையின் அழுகுரல் உங்களைப் பாதித்ததை நினைக்கும் போது
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.
பாராட்டு.

குணமதி
14-02-2010, 06:36 AM
சிறு பறவையின் அழுகுரல் உங்களைப் பாதித்ததை நினைக்கும் போது
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.
பாராட்டு.

மிக்க நன்றி.

சிவா.ஜி
14-02-2010, 07:38 AM
அழுகுரலைக் கேட்டு அசைந்த உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு அருமை.

வாழ்த்துகள் குணமதி.

குணமதி
14-02-2010, 03:03 PM
அழுகுரலைக் கேட்டு அசைந்த உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு அருமை.

வாழ்த்துகள் குணமதி.

மிக்க நன்றி.