PDA

View Full Version : சுடச் சுடக் கவிதைக் கவளங்கள்நாகரா
09-02-2010, 10:37 AM
த*மிழ் ம*ன்ற வானில் வலம் வரும்
வெள்ளை உள்ளக் காக்கைகளே!
கொத்த வாருங்கள் கருநாகம் படைக்கும்
கவிச் சோற்றுக் கவளங்கள்!

1. இயற்கை *வகுத்த* விஞ்ஞை

*கூட்டுப்* புழுவில்
கம்பளிப் புழுவின் நெளிதல் *கழிய*
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கும்
வேகப் *பெருக்கல்*!

2. அமோக வியாபாரம்

"நான்" என்னும் முதலாளி
நாகராத் தொழிலாளி
ஆதாயம் அன்பை
யாவருமே துய்க்க
ஆகாகா இன்பம்!

3. அமைதி நுண்ணலை வரிசை!

நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!

4. காக்கை

நீல வானில்
கரு மை பாயப்
பறக்கும் உயிரோவியம்!

சிவா.ஜி
09-02-2010, 10:58 AM
பிரமாதம் நாகரா அவர்களே. சொக்க வைக்கும் வார்த்தைகள். நிச்சயமான பசிதீர்க்கும் கவளங்கள். கவிதார்வப் பசி தீர்க்கும் கவளங்கள்.

காக்கைக்குச் சொன்ன கருநீல மை உதாரணம்...வெகு அருமை.

உச்சத்திலிருந்து, அமைதியை அலை பரப்பும் அழகுப்புறாவும் அருமை.

மனமார்ந்த வாழ்த்துகள்.

நாகரா
09-02-2010, 02:00 PM
உம் ஊக்க வரிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு. சிவா

நாகரா
09-02-2010, 02:08 PM
5. பாரதியாரிடம் ஒரு கேள்வி

காக்கை _________ எங்கள் சாதி
காணாமல் போனக் குருவியால்
மாளுமோ மனித சாதி!

6. முரண்பாடு

தென்னைத் தலைகளின்றி
முண்டமான மண்ணில்
தலையிருந்தும் முண்டமாய்
நான்!

7. தன் வினை தன்னைச் சுடும்!

மரங்களைத் தின்னும்
மனிதப் பூச்சிகள்
கான்க்ரீட்டுக்கு இரையாகும்

இளசு
09-02-2010, 07:17 PM
வாருங்கள் நாகரா...


கா,,,கா....கா...

பாரதியார் முதல் கலைஞர் வரை
பாவலர் பலர் பாடுபொருளாய்க் கொண்ட பறவை...


மசூதிமேலே , மாதாகோயில் மேலே அமர்ந்து
பின்னர் அம்மன்கோயிலில் அமர்ந்த காகம் பற்றிய
நவகவி எழுதிய பாடல் கேட்டிருக்கிறீர்களா?


இங்கே நுண்ணலைக் கோபுர உச்சி புறா -
உச்சமான கவிதைக் காட்சி..


அத்தனை கவளங்களும் உயிர் உரம்..

பாராட்டுகள் நாகரா..

உற்சாகமாய்த் தொடருங்கள்..

aren
10-02-2010, 04:29 AM
காணாமல் போன குருவி

நினைத்தாலே நெஞ்சு ஏனோ பதை பதைக்கிறது.

கவளங்கள் நன்றாக உள்ளன. தொடருங்கள் நண்பரே

நாகரா
10-02-2010, 04:32 AM
தொடரச் சொல்லும் உம் உற்சாக வரிகளுக்கு நன்றி திரு. இளசு மற்றும் திரு. ஆரென்

சிவா.ஜி
10-02-2010, 04:39 AM
தன் வினை தன்னச் சுடும்....

பொட்டிலறைகிற கவிதை....பட்டும் திருந்துமா மனிதஜாதி.....?

சுவையான கவளங்கள். வாழ்த்துகள் நாகரா அய்யா.

நாகரா
10-02-2010, 05:10 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி திரு. சிவா

நாகரா
10-02-2010, 05:30 AM
8. காக்கையார் அருள் வாக்கு

எவ்வுயிருங் காக்கச் சொல்லிக்
கத்துங் 'கா' 'கா' 'கா' என்றே
கொத்தித் தின்னுங் காக்கை!

9. இரவின் வெளிச்சம்

விழியிலிருந்து நீளும்
புலப்படா விரல்கள்
விண் மீன்களைத் தொட
என்னுள் பரவும்
இரவின் வெளிச்சம்!

10. கொத்தல்கள்

சோற்றைக் கொத்துங் காக்கை
காக்கையைக் கொத்தும் என் பார்வை
என் பார்வையைக் கொத்தும் நான்
என்னைக் கொத்துவார் யாரோ?!

நாகரா
11-02-2010, 03:46 AM
11. ஞாபகங் கொள்!

தும்பியைப் பிடிக்கத்
துள்ளும் நெஞ்சே!
அண்டமே அடங்கும்
விஞ்ஞை நீயே!

கீதம்
13-02-2010, 11:01 PM
அத்தனையும் அமுத வரிகள். படிக்கப் படிக்க நாவில் சுவையூறும் கவிக்கவளங்கள். நாகரா அவர்களின் அரிய சிந்தனைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்தியாவில் காணக்கிடைக்காத சிட்டுக்குருவி இனத்தை ஆஸ்திரேலியாவில் கண்டபோது நான் அடைந்த மகிழ்வுக்குதான் அளவேது? நம் மூதாதையரைப் பார்த்ததுபோல் பரவசப்பட்ட நாள் அது.

கலையரசி
14-02-2010, 03:40 AM
நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!

இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
நான் சிறு வயதில் பார்த்த குருவிகளில் பெரும்பாலானவற்றை இப்போது காணோம்.
மரக்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளானதால் வந்த வினை!

நாகரா
18-02-2010, 06:11 AM
ஊக்குவிக்கும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதம் மற்றும் கலையரசி

அக்னி
18-02-2010, 07:23 AM
1. இயற்கை *வகுத்த* விஞ்ஞை

*கூட்டுப்* புழுவில்
கம்பளிப் புழுவின் நெளிதல் *கழிய*
வண்ணத்துப் பூச்சியாய்ப் பறக்கும்
வேகப் *பெருக்கல்*!

அவலட்சணத்துக்குள் அழகு.
அழகுக்குள் அவலட்சணம்.
வண்ணத்துப்பூச்சி,
மனித மனதுக்கு அழகான உவமானம்...


3. அமைதி நுண்ணலை வரிசை!

நுண்ணலைக் கோபுர உச்சியில்(வயர்லெஸ் டவர்)
வெண்புறாப் போதகர் குந்தியே
எத்திக்கும் கற்பிக்கும் அற்புதம்!

மனிதன் கையில் அகப்பட்டால்
சமாதி என்று,
அமைதிப்புறாக்களுக்கும்
தெரிந்தே இருக்கின்றது...

கவிக்கவளங்கள் அற்புதமாய்ச் சுவைக்கின்றன.
பாராட்டுக்கள் நாகரா அவர்களே...

நாகரா
19-02-2010, 01:58 PM
ஊக்குவிக்கும் உம் பின்னூட்டத்துக்கு நன்றி திரு. அக்னி

நாகரா
13-03-2010, 09:32 AM
12. தா! வரம்

தயாபரத் தரத்தைத்
தராதலத் திறக்கத்
"தா! வரம்" என்றே
மோனமாய்த் தவஞ்செயுந்
தாவரம்!

govindh
13-03-2010, 10:20 AM
சுடச் சுடக் கவிதைக் கவளங்கள்...
உண்ட பின்னும் பசி கூடுகிறது...
இன்னும் படையுங்கள்..ஐயா..

நாகரா
14-03-2010, 09:23 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி திரு. கோவிந்த்