PDA

View Full Version : ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது



தூயவன்
09-02-2010, 02:15 AM
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச் சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இராணுவ பொலிஸாரினால் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷியவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும், அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.

அடிப்படை உரிமைகளை மீறும் செயல்

இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது என்று கூறும் ரணில் அவர்கள் நடு இரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல் எனவும் கூறுகிறார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது எனவும் ரணில் விக்ரமசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சரத் பொன்சோ கைது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் வெளியிட்ட தகவல்

"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.

"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைதுசெய்வதானால் சிவில் பொலிஸ் மூலம் கைதுசெய்யும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் செல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.

"அவரைத் தரதரவென இழுத்துச் சென்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.

இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.

ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்க்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.

அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இராணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர். பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.


நன்றி : தமிழ்வின்

தூயவன்
09-02-2010, 02:18 AM
தொடர்பு பட்ட செய்திகள்

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.

சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது - "உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்" - என்று பதிலளித்துள்ளார்.

நன்றி : தமிழ்வின்

தூயவன்
09-02-2010, 02:24 AM
தொடர்பு பட்ட செய்திகள்

அரசியல் எதிர்க்கட்சியை உடைப்பதே சரத் பொன்சேகாவின் கைதுக்கான நோக்கம்: சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்று இரவு கைதுசெய்யப்பட்டமையை கண்டித்துள்ள லண்டனை மையமாகக்கொண்ட சர்வதேச மன்னி;ப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

-----------------------------------------------------

சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன்

இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-------------------------------------------------


சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்கு பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி, அமெரிக்கா நிலைமையை அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ள அவர், தேர்தலின் போது இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா, அமெரிக்க கிரீன் காட் வதிவிட அனுமதியை கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி : தமிழ்வின்

aren
09-02-2010, 02:33 AM
இது வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவது.

மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

இது இன்னொரு உள்நாட்டுப்போரை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது.

அமரன்
09-02-2010, 05:37 AM
ஒரு சில தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று எதுவும் நடவாது என்பதே என் நினைப்பு.

Narathar
09-02-2010, 06:03 AM
ஜனநாயகம் எந்த அளவில் இலங்கையில் இருக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு........

கருத்து சுதந்திரமா? அது கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் மக்கள் ஏன் ஊடகவியலாளர்களும் கூட......

நாராயணா!!!!!!


ஒரு சில தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று எதுவும் நடவாது என்பதே என் நினைப்பு.

தமிழர்களும் எதிர்க்கக்கூடாது என்பது என் கருத்து!

இவர் என்ன தமிழர்களை காக்க வந்த காவல்; தெய்வமா?

தமிழர்கள் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பியிருந்தவர் இவர்.

நல்ல வேளை வெற்றி பெறவில்லை.... பெற்றிருந்தால் தமிழன் தலையில் இவர் எப்படி மிளகாய் அரைப்பார் என்பதை இவருக்கு வாக்களித்த தமிழர்கள் அடுத்த தேர்தல் வரும்வரை வேடிக்கை பார்க்க நேர்ந்திருக்கும்.

என்னைப்பொருத்தவரை விறகுக்கட்டையைவிட வேகும் அடுப்பே மேல்.

தமிழர்கள் இவருக்காக பரிந்து பேசியோ போராட்டம் நடத்தியோ இருக்கும் பெயரையும்/இந்த சுமுக நிலையையும் கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.

ராஜபக்ஷவை தோற்கடிக்க இவரை ஆதரித்தீர்கள்! சரி அது அவரால் முடியவில்லை.... தொடர்ந்து இவரை ஏன் தூக்கிப்பிடிக்கின்றீர்கள்?

என்ன நடந்தது நமது தமிழ் செய்தி ஊடகங்களுக்கு? இவர் தமிழினத்தை காவுகொண்டதையும் தமிழனை "கள்ளத்தோணி" என்றதியும் மறந்து விட்டனரா? இல்லை ராஜபக்ஷவை அழிக்க இவர்தான் சரியான ஆயுதம் என்ற சுயநலாமா? ராஜபக்ஷவை அழித்தாலும் இவரை அழிப்பதற்கு மீண்டும் தமிழர்கள் போராட வேண்டி வரும்............

பழிவாங்கும் அரசியலை விடச்சொல்லி ராஜபக்ஷவை கேட்பதற்கு முன்னால் நாம் நம் மனச்சாட்சிக்கு சொல்லிக்கொள்வோம் பழிவாங்கும் அரசியலை விட்டுவிடும்படி.....

தமிழர்கள் சரத்பொன்ஸேகாவை ஆதரிப்பது பழிவாங்கும் அரசியல் நோகம் தவிர வேரென்ன என்று சிந்தித்துப்ப்பார்க்கட்டும்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு நாட்டின் உண்மை நிலவரம் புரியாது இன்னொரு போராட்டத்துக்கு எமது அப்பாவி மக்களை இட்டுச்செல்ல நினைப்பவர்கள் வேண்டுமானல் அவரை ஆதரிக்கட்டும்.

ஆதி
09-02-2010, 06:32 AM
பொன்சேகாவுக்கு கிடைக்க வேண்டியது தான் கிடைத்திருக்கிறது..

ராஜபக்ஷவுக்கும் இவருக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது..

அவர் அமர்ந்து கொண்டு சொன்னார் இவர் களத்தில் இருந்து கொண்டு அதை செய்தார், சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் தான்..

கொஞ்சம் மனசாட்சி இருந்திருந்தால் மனிதாபிமானத்தோடு இருந்திருக்க இயலும், அப்படி எதுவுமே இல்லாத இவருக்கு ஏன் இத்தனை ஆதரவு... இவரை ஆதரிப்பதனாலோ, ஆதரிக்காமல் இருப்பதானாலோ நமக்கொரு நல்லது நிகழப்போவதில்லை....

அக்னி
09-02-2010, 06:56 AM
முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
என்னதான் நடந்தாலும், அறிக்கை விடேக்க தெளிவாத்தான்யா இருக்கிறாங்க...

நாராயணா...

*****
அதுதான் நாரா,
இந்த ஜனாதிபதித் தேர்தலையும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் மன்றத் தேர்தலில் வாக்களித்தேன்.
இந்தத் தேர்தலும் தமிழர் தரப்பால் ஒதுக்கப்பட்டிருந்தால்,
சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக வருபவர்,
தமிழ் மக்கள் மனங்களை வெல்ல, எதையேனும் செய்திருக்கலாம். அல்லது, செய்ய முற்படலாம்.

சிவா.ஜி
09-02-2010, 07:08 AM
எதிர்பார்த்ததுதான்...ஆனால் இந்தளவுக்கு கேவலமான முறையில் நடந்திருக்க வேண்டாம்.

நாரதர் சொல்லும் கருத்துக்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டியவை.

praveen
09-02-2010, 11:39 AM
இன்று சரத் பொன்சேகா, நாளை மகிந்தா ராஜபக்சே (அவருக்கொருத்தர் ஆப்படிக்க இனி தான் பிறக்கனுமா என்ன?).

அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சுகந்தப்ரீதன்
09-02-2010, 12:04 PM
இடம் மாறி அமைந்திருந்தாலும் இது நிகழ்ந்திருக்கும்..!! அதனால் யாருக்கு என்ன பயன்..?!

ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களில் எப்போதுமே மக்கள் பார்வையாளர்களாக அல்லது பலியாடுகளாக மட்டுமே இருக்கிறார்கள்.. ஒருபோதும் பயனாளிகளாக அல்ல..!!

விகடன்
09-02-2010, 12:19 PM
பொன்சேகாவின் மனைவிக்கே பொன்சேகாவை எங்கு வைத்திருக்கிறார்கள் என்றோ? யாரிடம் முறையிடுவதென்றோ தெரியாது என்று புலம்புகின்றாரே? அப்போ தமிழ் இளைஞர் யுவதிகளை பிடித்து வைத்திருந்த வேளைகளில் அவர்கள் எவ்வளவிற்கு அல்லல்ப் பட்டிருப்பார்கள்?

மேலும் ஓர் சிங்களக் கிழவனிற்கே இந்த நிலையெனில் தமிழ் இளைய சமுதாயத்திற்கு எந்த நிலையிலிருந்திருப்பர்?

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு சிந்திக்கத்தெரியாத சர்வதேசம்..... பெயரளவில் மட்டும்.

தூயவன்
09-02-2010, 01:58 PM
தொடர்பு பட்ட செய்திகள்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா, நேற்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

இந்தநிலையில் அவர் மீது இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரியாக இருந்துகொண்டே எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தமை, இராணுவத்தின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமை மற்றும் இராணுவத்தில் தப்பி வந்தவர்களை தம்முடன் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே இராணுவ நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரை நிறுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலையில் சரத் பொன்சேகாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க இராணுவ நீதிமன்ற சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி என்ற பதவிகளில் இருக்கும் போது சரத் பொன்சேகா, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி : தமிழ்வின்