PDA

View Full Version : அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….



அகத்தியன்
08-02-2010, 05:20 PM
நீ எதிர்பார்த்த
ஆனால்
நான் எதிர்பார்க்கா,
அது நிகழ்ந்தே போனது….

நீ சென்றே விட்டாய்…
என்னையும் உன் நினைவுகளினையும் விட்டு..
நீ சென்றே விட்டாய்…

இனியும் நீ என்னருகில் இல்லை..
என்றாவது
ஓர் மழைக்காலத்தில்
நீ உன் கணவனையும், நான் என் மனைவியையும்-
அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கியம்
“ இவர் என் கிளாஸ்மேட்” எனும் விழுங்கலுடன்-
ஆரம்பிக்கலாம்.

பிரார்த்தித்துக்கொள் பெண்ணே
அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….

அக்னி
09-02-2010, 06:45 AM
அம்மழைக்காலம் வந்தால்,
தனியே அறிமுகமாக நேர்ந்தால்,
வலிகள் மட்டுமே,
மிச்சமாய்விடும்...

பரவாயில்லை...
சிறு பொறாமையோ எரிச்சலோ
என் துணையைப்பார்த்து
உனக்கு வந்துவிட்டுப் போகட்டும்.
என் வலிகளும், என்னால் வலிகளும்
உனக்கு வேண்டாம்.

உன்னைப் பார்க்க நேர்ந்தால்
நன்றி சொல்லவேண்டும்...
உன் நினைவுகளோடு என் மனதைத்
தாங்கும் என் துணையைத் தந்ததற்காக...

உண்மையான காதல் கிடைக்கவில்லை
என்பதற்காக,
பொய்யாகவே வாழ்ந்து முடிப்பதில்
எனக்குச் சம்மதமில்லை.

ஒரு பொய்யான அறிமுகத்தோடு,
அந்த மழைக்காலம் வரவேண்டாம்...

உன் துணையும் என் துணையும்
நம்மை பெற்றுக்கொண்டதற்காக
மகிழ்வுடன் அறிமுகமாகத்தக்கதாக
அந்த மழைக்காலம் வரட்டும்...

என்ன அகத்தியரே ஒரே சோகமயம்...???
இந்நிலைகொண்டவர்களின் மனதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்...

பூமகளின் உறைந்த நிமிடம்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13339) கவியை, மீண்டும் ஒருமுறை வாசிக்கத்தூண்டுகின்றது இக்கவிதை...

*****
அந்த மழைக்காலம்
ஒரு நாள் வந்தது...

‘கிளாஸ் மேட்’ என
அறிமுகப்படுத்தினாய்...

எவ்வாறு அறிந்தாய்,
உன்னைப்பிரிந்தபின்,
நான் ‘கிளாஸ் மேட்’ ஆனதை...

(சும்மா லூலூவாயியிக்கு...)

சிவா.ஜி
09-02-2010, 06:57 AM
அகத்தியனின் அருமையான கவிக்கு...அக்னியின் பின்னூட்டக்கவி அசத்தல்.

அதிலும் 'கிளாஸ்மேட்'....கலக்கல்...

வாழ்த்துகள் இருவருக்கும்.

gans5001
09-02-2010, 07:08 AM
அக்னியின் பின்னூட்டம் மிக அருமை.

ஆனால் சில காதலை இழந்தவர்கள் கதை "அழகி"யதாகி விடுவதுதான் வேதனை.

சுகந்தப்ரீதன்
09-02-2010, 07:32 AM
வாழ்வில் எதிர்பாராத ஒன்று எதிர்பாராமல் நிகழுமானால் எதிர்பார்த்த ஒன்று
எதிர்வராமல் போகக்கூடிய சாத்தியங்களும் உண்டுதானே அகத்தியரே..!!

உள்ளக்காதலை மறக்கமுடியாமல் மருகும் மனதை கவிதையில் காணமுடிகிறது..!!


உண்மையான காதல் கிடைக்கவில்லை
என்பதற்காக,
பொய்யாகவே வாழ்ந்து முடிப்பதில்
எனக்குச் சம்மதமில்லை.

அக்னியண்ணாவின் இந்த வரிகள் சொல்லும் உங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள்..!!

lenram80
09-02-2010, 12:42 PM
இதயம் - காதல் வெற்றியின் பூங்காவனமா? இல்லை... காதல் தோல்வியின் புதைகுழியா??

வாழ்த்துகள் அகத்தியன்!

அமரன்
09-02-2010, 09:39 PM
glass made ஆகத் துவங்கி
class mate ஆக முடித்ததுவும்
class made ஆக்கியதுவும்..

கிளாஸ்,

பாராட்டுகள் அகத்தியன், அக்னி!