PDA

View Full Version : வசப்படுவாய் நீயடி!!!!



lenram80
08-02-2010, 03:13 PM
60 மைல் வேகத்தில் மோதினாலும்
அமுங்காத உலோகமாமே உன் இதயம்!

இடி கொண்டு இடம் பெயர்த்தால் கூட - இலேசான
அடி என்று மொழி பெயர்க்குமாமே உன் இதயம்!

சிவக்கும் செங்கல் சூளை!
நீ குளிர் காயும் அதிகாலை!

உருக்கும் வார்ப்பாலை
நீ முகம் கழுவும் நீர்ச்சோலை!

உன் இதயம் என்னவாக இருந்தாலும் கவலையில்லை!

அலையாக வந்து மோதமாட்டேன்!
உலை அணுவாக வந்து ஊடுருவுவேன்!

பெரிதாய் அடித்தால் அசைவாய்!
சிரிதாய் அடித்தால் அதிர்வாய்!

பாதிப்பு இல்லாமல் படை எடுப்பேன்!
உன் இதயப் பாதிப் பூவை சிறைப் பிடிப்பேன்!

உடல் கலைக்க அகழியில் நீச்சல்!
கோட்டை தாண்ட ஏணி தூக்கல்!
மாட்டேன்!
ஒரே உந்தில் உன் மதில் சுவர் தாண்டுவேன்!

ஒளியாய் மாறி உன் விழி புகுவேன்!
ஒலியாய் மாறி உன் செவி புகுவேன்!
உணவாய் மாறி உன் இதழ் புகுவேன்!
தூசியாய் மாறி உன் நாசி புகுவேன்!

வெல்லப்படாத தேசம் வெல்ல
கொள்ளப்படாத காதல் கொள்ள
சொல்லப்படாத வெற்றி சொல்ல
புறப் பட்டேன் நானடி!
வசப் படுவாய் நீயடி!!

சுகந்தப்ரீதன்
09-02-2010, 07:05 AM
வாழ்த்துக்கள் லெனின் அண்ணா... தங்களின் பயணம் வெற்றிகரமாய் அமைய..!!

gans5001
09-02-2010, 07:11 AM
தன்னம்பிக்கை நிறைந்த பயணம். வெற்றியாய் மாற வாழ்த்துக்கள்

சிவா.ஜி
09-02-2010, 07:16 AM
அருமையான வரிகள். ஆழ்ந்த தன்னம்பிக்கை தெரியும் கவிதை வரிகளைப் படிக்கும்போது...அந்தக் காதலனின் உறுதி தெரிகிறது.

அதிலும் இந்த வரிகள்..

"ஒளியாய் மாறி உன் விழி புகுவேன்!
ஒலியாய் மாறி உன் செவி புகுவேன்!
உணவாய் மாறி உன் இதழ் புகுவேன்!
தூசியாய் மாறி உன் நாசி புகுவேன்!

வெல்லப்படாத தேசம் வெல்ல
கொள்ளப்படாத காதல் கொள்ள
சொல்லப்படாத வெற்றி சொல்ல
புறப் பட்டேன் நானடி!
வசப் படுவாய் நீயடி!! "

மிக மிக அருமை. வாழ்த்துகள் லெனின்.

aren
09-02-2010, 08:44 AM
நீங்க நினைக்கிறபடி நடக்கட்டும். நம்பிக்கையே வாழ்க்கை

ஆர்.ஈஸ்வரன்
09-02-2010, 08:52 AM
அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்

lenram80
09-02-2010, 12:19 PM
கவிதையை அதிக உணர்வுடன் எப்போதும் ரசிக்கும் சிவாஜி, சுகந்த ப்ரீதன், கண்ஸ், ஆரென் & ஈஸ்வரன் - நன்றி ! நன்றி!!