PDA

View Full Version : என்ன நடக்குமோ?



lenram80
08-02-2010, 01:39 PM
இனிமேல்....என்ன நடக்குமோ!!

காரம் இனிக்குமாமே ?!
நாள் நொடியாகுமாமே..?!
கிருக்கல் கவிதையாகுமாமே...?!
உதடுகள் எப்போதும் சிரிக்குமாமே...?!
பூ ரசித்தல்,
தேன் குடித்தல்,
உயரப் பறத்தல்,
பறவை செயல் செய்வேனாமே...?!

உள்ளவை உள்ளவையாக இருக்கும்போதே
உருப்படியாய் எதுவும் செய்ய முடியவில்லை!
இப்படி உருமாற்றம் கொண்டு தெரிந்தால்...
என்ன நடக்குமோ??

முகம் கழுவினாலாவது இந்தக் கலக்கம் குறையுமா?

அய்யோ...
கொதிநீரை குளிர்ந்த நீரெனக் கருதி
முகம் கழுவி விட்டேனே!!!!

சிவா.ஜி
08-02-2010, 02:04 PM
இங்கே பட்டியலிட்ட எல்லாமும் நடக்கும் இனிய அவஸ்தைதான்...இந்தக் காதல் வந்துவிட்டாலே....

கொதிநீரும் குளிருமே...அவள் முகத்தை மனதில் சுமக்கும்போது....

கலக்குறீங்க லெனின். காதல்தேவதையின் வாழ்த்து உங்களுக்கு பரிபூரணமாய் கிட்டட்டும்.....

பாராட்டுக்கள்.

lenram80
08-02-2010, 02:14 PM
நன்றி சிவா.ஜி

சுகந்தப்ரீதன்
09-02-2010, 07:12 AM
காதல் ஜோதியில் விட்டில் பூச்சியாய் விழுந்துவிட்டீர்கள் போலிருக்கே லெனின் அண்ணா..!!

வாழ்த்துக்கள்..!!

gans5001
09-02-2010, 07:16 AM
மதுவுண்டு மயக்கத்தில் தாமரையிலேயே சிறையாகி விட்ட வண்டு போலத்தான் காதலனும்.

மயக்கம் தெளிதல் சிறிது சிரமமே.

ஆர்.ஈஸ்வரன்
09-02-2010, 08:44 AM
பாராட்டுக்கள்.கொதிநீரும் குளிர்ந்தநீராகும் பொறுமையுடன் இருந்தால்

lenram80
09-02-2010, 12:30 PM
நன்றி சுந்கத ப்தரீன், கஸ்ண் & ஈவரஸ்ன்
(காதல் போதையில் உள்ளதால் எழுத்துப் பிழை வந்து விட்டது. மன்னியுங்கள்) :-)

அமரன்
09-02-2010, 09:35 PM
தென்றல் சுடுவதும் ஆதவன் குளிர்வதும் காதலின் விளையாட்டே!

வழக்கமாக உங்கள் கவிதைகளில் நெளிந்தோடும் அழகைக் காணலையே லெனின்.

lenram80
10-02-2010, 12:36 AM
நன்றி அமரன்...ரொம்ப நாள்களுக்குப் பிறகு எழுத வேண்டும் என்று வழுக்கட்டாயமாக இந்த இரு கவிதைகளை எழுதினேன். கொஞ்சம் பொறுங்கள். உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்