PDA

View Full Version : ஒரு சிறுமியின் கதை பார்ட் ?chinnaponnu
08-02-2010, 03:50 AM
ஒரு சிறுமியின் கதை பார்ட் ? ( நான் இதை தொடரர்ந்து இன்னொன்று போட்டா இது பார்ட் 1 இல்ல இது, இது மட்டும் தான்)

நான் இப்போ என்னை கவர்ந்த சிறுமியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி சொல்லறேன்... இந்த பொண்ண பத்தி சொல்லனும்னா ரொம்ப வாலு.. எப்படினு நீங்களே பாருங்க.. இந்த பொண்ணு ஒரு 4th அல்லது 5th ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்ச்சி தான் இது.. இந்த பொண்ணோட அம்மா ரொம்ப Strict , ஆனா இது பண்ற குறும்புக்கு முன்னாடி அவங்க Strictness எல்லாம் வெத்து வேட்டு.. அவளுக்கு ஒரு அக்கா கூட இருந்தாங்க ஆனா வயசுல கொஞ்சம் இல்ல 7 வயசு பெரியவங்க அந்த பொண்ணோட... பாவம் வீட்ல விளையாட ஆள் இல்ல. ஆனா Qtrsல நிறைய பேர் இருப்பாங்க.. இருந்து என்ன பிரோஜனம் இவங்க அம்மா வீட்டவிட்டு வெளியவே போக கூடாதுனு சொல்லற ஆளு.. ஆனாலும் விளையாட போவாங்க இவங்க.. அப்படி என்ன தான் விளையாட போவாங்க இவங்க.பல்லாங்குழி??
இதுவும் குழில தான் போடுவாங்க.. அதானுங்கோ கோலிகுண்டு..
கோலிகுண்டு விளையாடறது தப்பா???

பொண்ணோட அம்மா : தப்பு இல்ல ஆனா 5th படிக்கிற புள்ள படிக்கிறத விட்டுட்டு ரோட்ல போய் குண்டு விளையாடுது..அதுக்கும் மேல சேரிக்கை எல்லாம் 11th 12th படிக்கிற பசங்களோட.கேட்டா என்னோட அண்ணனுங்கள திட்டாதீங்கனு சொல்லறது.அவங்க என்னோட புள்ளைய தோக்கடிச்சு குண்டு எல்லாத்தையும் வாங்கிகுவானுங்க. அப்புரம் வீட்ல வந்து அலும் பாக்கனும் ஓரே கேளு நாடே கேளுனு அடிச்ச மாதிரி. எவ்வளோ காசுக்கு தான் குண்டு வாங்கி தரது. நானும் எவ்வாளவோ மிரட்டி பார்த்துட்டேன் அடங்குதா..பேர சொல்லி கூப்டா பக்கத்து வீட்டுக்காரங்க, அதோ தெரு முனையில பசங்களோட குண்டு விளையாடரா உங்க பொண்ணு தான் சொல்லுவாங்க. நமக்கு மானமே போகும். ஆனா அவ அக்கா அப்படி இல்ல வீட்ல தான் இருப்பா. இது மட்டும் தான் இப்படி. இது எல்லாம் எங்க உருப்புட போகுது..

அக்காவோட பங்கு : நான் என்ன தான் கேலி செஞ்சாலும் குண்டு விளையாட மட்டும் போகாம இருக்க மாட்டாங்க மேடம். அதுவும் அப்பா கிட்ட குண்டு வாங்க பண்ற டிரிக் இருக்கே..என்னால தாங்கவே முடியாது.முடிஞ்ச அளவுக்கு மாட்டிவிடுவேன் இல்ல நானே போட்டு சாத்துவேன். யார்கிட்டயும் சொல்லாதீங்க அவளுக்கு நான் வச்ச பட்ட பேரு "குண்டாடி".

இப்போ அப்பாவோட பங்கு : என்ன பண்றது சின்ன புள்ளனு வீட்ல சப்போர்ட் பண்றதே நான் மட்டும் தான். அப்படி சப்போட்ர் பண்ணா கூட, நம்மலயே கால வாரி விட்றும் சில டைம். குண்டு விளையாட போறத மட்டும் மாத்தவே முடியல. பெருசானா எல்லாம் மாறிடும்னு ஒரு நம்பிக்கை தான்.

தாத்தா : சின்ன புள்ள தான விளையாடட்டும்னு சப்போர்ட் பண்ணலாம்னு நினைச்சாலும் விடாது.நம்ம எங்கயாவது சில்லரை வச்சா போதும் உடனே காணாம போய்டும். அதுவும் அவளுக்கு தேவையான அலவு மட்டும். ஒரு கோழி குண்டு எவ்வளவோ அவ்வளவு மட்டும் தான். அப்புறம் அப்போ அப்போ கடைக்கு போக சொன்னா லஞ்சம். அதுவும் வாங்கி சாப்பிடறதுக்கும் தனி Share கோலி குண்டு வாங்க தனி share. ஏற்கனவே மருமகளுக்கும் எனக்கும் ஆகாது அதும் அடிச்சா நான் தான் வாங்கிகுடுத்தேனு சொல்லி மாட்டி விட்டுடும்.

பாட்டி : அவங்க அம்மா அடி சாத்தும் போது தான் நம்ம கண்ணுக்கு தெரிவோம். விளையாடும் போது போய் கூப்பிட்டா, கண்டுக்கவே மாட்டா. மீறி நீ வர்லனா உங்க அம்மா அடி பிண்ணிடுவானு சொன்னா, அவ கூட விளையாடற பசங்க கூ போ போனு சொல்லுவாங்க ஆனா பெரியவங்க நம்மல " ஆத்தா போரியா இல்லானு?" கேட்டுட்டு அந்த பசங்கள " அண்ணா வாங்க விளையாடலாம்" நு சொல்லும் பாருங்க அப்ப தான் தோனும் இத அடிச்சா தான் திருந்தும்னு

சின்ன பொண்ணு: எல்லாரும் என்ன பத்தி சொல்லிட்டாங்க நானும் சொல்றேன். என்ன பண்றது எனக்கு கோலி குண்டுனா ரொம்ப பிடிக்கும் அதான் விளையாட போறேன்.எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லாத்துக்கும் பொறாமை அதுவும் என்னோட அக்கா இருக்காங்களே சொல்ல வார்த்தையே இல்ல.. எது எப்படியோ எனக்கு இருக்க கோவம் எல்லாம் அராசாங்க மேல தான்.
ஏன்னு யொசிக்கிறீங்களா பின்ன என்னங்க….
கோலிகுண்டுவிளையாட்டுக்கு ஒரு National Level atleast oru state level போட்டி இருக்கா. இருந்தா நானும் பெரிய பிளேயரா இருந்திருப்பேன்..
முற்றும்

பி.கு : அந்த பொண்ணு நான் இல்ல

அன்புரசிகன்
08-02-2010, 05:11 AM
கடைசியில ஆதங்கத்த பாரேன்............. :D :D

chinnaponnu
08-02-2010, 05:44 AM
அந்த பொண்ணு மனசுல அவ்வளவு துக்கம்

சிவா.ஜி
08-02-2010, 06:13 AM
கலகலப்பா பதிஞ்சிருக்கீங்க....குண்டு விளையாடறது ஒரு பெரிய குத்தமா....என்ன கொடுமைங்க சின்னப்பொண்ணு இது.....நீங்க கவலைப் படாதீங்க...அந்த குட்டிபொண்ணை மன்றத்துக்கு வரச்சொல்லி....ஒரு ஓரமா விளையாட்ச் சொல்லுங்க....யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.....

chinnaponnu
08-02-2010, 06:24 AM
கலகலப்பா பதிஞ்சிருக்கீங்க....குண்டு விளையாடறது ஒரு பெரிய குத்தமா....என்ன கொடுமைங்க சின்னப்பொண்ணு இது.....நீங்க கவலைப் படாதீங்க...அந்த குட்டிபொண்ணை மன்றத்துக்கு வரச்சொல்லி....ஒரு ஓரமா விளையாட்ச் சொல்லுங்க....யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.....

எவ்வளவு நல்ல மக்கள் இங்க.. ஆனந்த கண்ணீர்:traurig001:

அக்னி
08-02-2010, 06:42 AM
‘மடு’ என்பது, இலங்கையில் பிரசித்திபெற்ற ஒரு புனிதத் தலம்.
மேரி மாதா காட்டின் நடுவே வீற்றிருக்கும் ஓர் இடம்.

1990 களில் எமது நகரம் இலங்கை இராணுவத்தினரால் வன்வளைப்புச் செய்யப்பட்டபோது,
நகரமும் சுற்றுவட்டக் கிராமங்களும் இடம்பெயர்ந்து மடுத் தேவாலயத்தில் அகதிகளாத் தஞ்சமடைந்தனர்.
ஏறத்தாழ 50000 மக்கள் அங்குள்ள திருவிழாக்காலத் தங்கும் விடுதிகளிலும் கூடாரங்களை ஏற்படுத்தியும் வாழ்ந்திருந்தனர்.

அது ஒரு புனித தலமாகையால்,
மது, சூது (கார்ட்ஸ் விளையாட்டு) ஆகியவற்றைத் தவிர்க்குமாறு தேவாலய நிர்வாகத்தால் அன்புடன் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் இந்தக் கோலிக்குண்டு விளையாட்டுக்களையும் (போளை அடித்தல் என்பார்கள்) தடைசெய்திருந்தனர்.

அப்படியும்,
ஒளிவு மறைவாக கோலிக்குண்டு சிறுவர்மத்தியில் விளையாடப்பெற்றே வந்தது. பிடிபடுமிடத்து, அக்கோலிக்குண்டுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளிற்குள் போடப்பட்டுவிடும்.

ஆலய நிர்வாகத்தினரால் மக்களைக் கண்காணிக்க நிர்வாகிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் என் நினைவுகளில்...
கோலி விளையாடி அவரிடம் மாட்டிக்கொண்ட சிறுவர்கள் அநேகம்.
கோலிக்குண்டுகளைத் தந்துவிடுமாறு கேட்டால்,
‘தம்பி! கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
என்று மட்டுமே சொல்லுவார். கோலிக்குண்டுகளையும் கொண்டு சென்றுவிடுவார்.
நாளடைவில் அதுவே, அவரை அழைக்கும் பெயராகாப் போய்விட்டது.

ஒரு வருடத்தின் பின்னர்,
நாம் (எம் குடும்பம்) இலங்கை இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிவிட்ட எமது நகருக்குச் சென்றுவிட்டோம்.
ஆனாலும் அந்தத் தலம் பெரிதுபடும் ஒரு அகதிமுகாமாகவே இருந்து வந்தது.

இந்தக் காலகட்டத்திற்கு 7 அல்லது 8 வருடங்களின் பின்னர்,
தெருவில் ஒருவரைக் கண்டேன்.
அவர்தான், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
திடகாத்திரம் சற்றும் குறையாமல் இருந்த அந்த அருமையான மனிதர்,
மனநிலை பாதிக்கப்பட்டவராக நகரையே வலம் வந்துகொண்டிருந்தார்.
அழகான அவரின் குடும்பம் என்னவாயிற்று..., அவர் ஏன் இப்படி ஆனார்... என்ற கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.
அந்தத் தலத்தில் இருந்த பெரிய மனிதர்களைக் கண்டால், அடையாளம் தெரிந்துகொள்வார். சற்றே பேசவும் செய்வார்.
ஆனால், எந்த உதவியும் பெற்றுக்கொண்டதுமில்லை. எதனையும் சொன்னதுமில்லை. (என்றுதான் நினைக்கின்றேன்)

தினமும் நீராடித் தூய்மையாக ஆடையணிந்து வலம்வந்த அந்த மனிதர்,
காலில் கவனிக்கப்படாத காயத்துடன், பரட்டைத் தலையுடன், அழுக்கான ஆடையுடன் பேதலித்துப்போனவராகிடக் காரணம் என்ன...
இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

ஆனால்,
கோலிக்குண்டுகளைக் காணுபோதெல்லாம்,
அவரது வார்த்தைகளும் உருவமும் மனதுக்குள் வந்து செல்லும்.

அதுதான், பொருத்தமில்லாவிட்டாலும் இங்கே பகிரத் தூண்டியது.

மீண்டும் ஒருமுறை அவரைக் காண நேருமோ தெரியாது.
ஆனால், அவர் நல்நிலையிலிருந்தால், அவரிருக்கும் சூழலில்
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
எதிரொலித்துக்கொண்டிருக்கும்.

மனதைத் தட்டிவிட்டிவிட்டது சின்னப்பொண்ணுவின் கோலிக்குண்டுப் பதிவு...

சிவா.ஜி
08-02-2010, 07:51 AM
நெகிழவைத்த பதிவு அக்னி. இப்படி எத்தனையெத்தனை மனிதர்கள் புத்திபேதலித்து தெருக்களில் அலைகிறார்களோ...நினைக்கவே வெதனையாக இருக்கிறது.

chinnaponnu
08-02-2010, 08:07 AM
அருமை அக்னி, அப்படியே கொஞ்சம் மனதை பாதித்துவிட்டது. இதே போல் எல்லோர் மனதிலும் சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன

யவனிகா
08-02-2010, 08:22 AM
கலகலப்பா பதிஞ்சிருக்கீங்க....குண்டு விளையாடறது ஒரு பெரிய குத்தமா....என்ன கொடுமைங்க சின்னப்பொண்ணு இது.....நீங்க கவலைப் படாதீங்க...அந்த குட்டிபொண்ணை மன்றத்துக்கு வரச்சொல்லி....ஒரு ஓரமா விளையாட்ச் சொல்லுங்க....யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.....

ஆமாமா வரச்சொல்லுங்க...இங்க ஏற்கனவே கிட்டிபுல் பையன், கபடிக்கண்ணு,பச்சச்குதிர பச்சப்புள்ள எல்லாம் வெள்ளாண்டுட்டு தான் இருக்காங்க.

rajarajacholan
08-02-2010, 09:17 AM
நல்ல கதை.

aren
08-02-2010, 09:24 AM
அந்தச்சின்னப்பொன்னு நீங்கதான்னு சொல்லாம சொல்லிட்டீங்களே

aren
08-02-2010, 09:26 AM
அக்னியின் கதை என்னமோ எனது நெஞ்சை உறுத்துகிறது

யவனிகா
08-02-2010, 09:35 AM
அக்னியின் பதிவுகள் வலி நீங்கா வடுக்களாகவே. இனி எனக்கும் கோலிகுண்டைப்பார்த்தால் உங்கள் பதிவு தான் நினைவு வரும்.

சரண்யா
08-02-2010, 02:53 PM
அட சின்ன கோலிகுண்டுல இவ்வளவு இருக்கா...
நல்லா விளையாடுங்க..சின்னபொன்னு...
அக்னி அவர்க்ளே..தங்களின் பகிர்வுக்கும் நன்றி..வித்தியாசமாக உள்ளது..

ஜனகன்
08-02-2010, 03:29 PM
நல்லாய் கதை எழுதுறீர்கள் சின்னப்பொண்ணு. இன்னும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்.

ஜனகன்
08-02-2010, 03:56 PM
அக்னியின் பதிவு உண்மையில் கண்ணை குளமாக்கும் சம்பவம்.
இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சில மனிதரை நானும் பார்த்திருக்கின்றேன்.வேதனைக்குரிய விடயம்.

அமரன்
08-02-2010, 09:46 PM
நகைச்சுவையாகச் சொன்னாலும் இறுதியில் எட்டிப்பார்க்கும் ஆ!தங்கம் நாட்டு நடப்புச் சிலதை தட்டி உசுப்பும்.

அக்னியின் பதிவு என்றும் ஆறாத வடு.

அமரன்
08-02-2010, 09:46 PM
அக்னியின் பதிவு உண்மையில் கண்ணை குளமாக்கும் சம்பவம்.

பாத்துப்பா..மீனு, நாரை, கொக்குன்னு கண்ணு நிறைஞ்சிடப் போவுது:)

chinnaponnu
09-02-2010, 10:23 AM
நன்றி!!

aren
09-02-2010, 01:07 PM
பாத்துப்பா..மீனு, நாரை, கொக்குன்னு கண்ணு நிறைஞ்சிடப் போவுது:)

இதான் சாக்குன்னு நீங்க தூண்டிலை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்.

சுகந்தப்ரீதன்
09-02-2010, 01:15 PM
பேருல சின்ன ஆளா இருந்தாலும்... பேச்சுல பெரிய ஆளா இருப்பீங்க போலிருக்கு..!!

ஆமாம்... அடுத்த பார்ட் எப்ப ரிலீசாகும்..!! வர வெள்ளிக்கிழமை..?!

ஜனகன்
09-02-2010, 04:19 PM
பாத்துப்பா..மீனு, நாரை, கொக்குன்னு கண்ணு நிறைஞ்சிடப் போவுது:)

அடடா தப்புப் பண்ணீட்டேன், அமரன் என்று ஒருத்தர் கண்ணிலை விளக்கெண்ணையை ஊத்தி பேப்பர் கரைக்சன் பண்ணுவார் என்று மறந்திட்டேன்.