PDA

View Full Version : ஒரு நடிகையின் வேதனை



muthuvel
07-02-2010, 10:07 AM
நான் மூடி மறைத்தால் முக்காடு போடுவான் ,
முதலாளி,

கவர்ச்சி என்ற பெயரில் காம பொருளாக காட்டும் உலகம் ,
எங்களையும் கொஞ்சம் பாருங்கள் நாங்களும் பெண்தான்,

பன்னீரில் குளித்து ,
மணக்கும் பூ சூடி ,
புத்தாடை அணிந்து ,
தெரிந்தே விழுகின்றோம் சாக்கடையில்,

எத்தனையோ மரம் சுற்றி ,
கதாநாயகனை தழுவி ,
பாட்டு பாடியாச்சு ,
உண்மை காதல்தான் இன்னும் வரவில்லை ,
நிழலிலும் ,நிஜத்திலும் ,

என் இதழ்களை சுவை பார்த்து ,
சேலையை துட்சாதனன் போல இழுத்து ,
தாயின் தொப்புள் கொடியில் ஆம்ப்லேட் போட்டு ,
எதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா ,இக்காட்சி ,
மனம் திறக்கட்டும் உன் மனசாட்சி ,

கையில் பணம் என்னும் விளக்கை வைத்து ,
தெரிந்தே விழுகின்றோம் இருட்டு பாதாள குழியில் ,

இயற்கை கொடுத்த பரிசு இளமை என்னும் அழகு ,
அது போன பின்னே அத்தனையும் என்னை விட்டு விலகும் ,

வயிற்றை காட்டுகிறேன் என் வயிற்றை கழுவ ,

தும்மினாலும் ,
பால் குடித்தாலும் ,
பாயாசம் குடித்தாலும் ,
படுக்கையில் படுத்தாலும் ,
பாத் ரூமில் குளித்தாலும் ,
என் அங்கங்களை வைத்து ,
படம் எடுத்து வியாபாரம்தான் ,செய்கிறது இந்த உலகம் ,
என் சோகத்தை கூட மண்ணில் முகம் புதைத்து அழுகின்றேன் ,

இது யார் செய்த பிழை ,
என்னை படைதவனா
இல்லை பெற்றவனா ,
பதில் சொல்லுமா இந்த உலகம் ?,
ஏங்குகிறோம் உண்மையான பாசத்திற்கு எங்கும் ..

சிவா.ஜி
07-02-2010, 10:51 AM
இதுயார் செய்த பிழை. அவர்களே செய்யும் பிழை. தெரிந்தே சாக்கடையில் விழுவது பணத்தை தேடிக்கொண்டுவரத்தானே.


பணமோடு புகழும் கிடைக்கிறது.....பிறகெதற்கு புலம்பல்?

உடையைத்தாண்டி ஒரு உள்ளம் இருக்கிறது.....அதை உண்மையாய் யாரிடமாவது கொடுத்துவிட்டு, ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.

சாக்கடை வாருபவன், நாற்றமடிக்கிறதே என சொல்லலாமா?

g.ram
07-02-2010, 11:32 AM
நல்ல கவிதை



உடையைத்தாண்டி ஒரு உள்ளம் இருக்கிறது.....அதை உண்மையாய் யாரிடமாவது கொடுத்துவிட்டு, ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.


பணம் சேரும் வரை நம்மோடு பழகுபவர்களே பணம் சேர்ந்த பின் மாறுகிறார்கள்.

உள்ளதை ஒருவரிடம் கொடுப்பதில் உள்ள சிக்கல் இது ஒன்று தான். இந்த நிலையை மாற்றுவது தான் இன்றைய சமுதாயத்தின் தேவையான தலையான பணி.

சிவா.ஜி
07-02-2010, 11:57 AM
வாங்க ராம். நல்ல சிந்தனையோட வந்திருக்கீங்க...அப்படியே உங்களைப் பற்றின ஒரு அறிமுகத்தை அளித்துவிடுங்களேன்.

அருள்
09-02-2010, 12:51 AM
ஒரு சில மாதங்கள் விட்டு உள்ள வந்த உடனே படித்த கவிதை. கவிதைதான் ஆனாலும் ஏதோ ஒரு உண்மை உள்ளதுபோல் இருக்கிறது. நன்றி

muthuvel
09-02-2010, 07:12 AM
ஒரு சில மாதங்கள் விட்டு உள்ள வந்த உடனே படித்த கவிதை. கவிதைதான் ஆனாலும் ஏதோ ஒரு உண்மை உள்ளதுபோல் இருக்கிறது. நன்றி

அவர்களுக்கும் மனசு உண்டு என்பதை விளகிருந்தேன்

ஆர்.ஈஸ்வரன்
09-02-2010, 08:37 AM
இதுயார் செய்த பிழை. அவர்களே செய்யும் பிழை

கீதம்
09-02-2010, 08:47 AM
வாங்க ராம். நல்ல சிந்தனையோட வந்திருக்கீங்க...அப்படியே உங்களைப் பற்றின ஒரு அறிமுகத்தை அளித்துவிடுங்களேன்.


கணபதிராம் அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நமக்குக் கிடைத்துவிட்டதே! மறந்துவிட்டீர்களா, என்ன?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21924