PDA

View Full Version : உன்னில் கண்டேன்



இன்பக்கவி
06-02-2010, 01:23 PM
என்னோடே இருக்கிறாய்
உன்னை காணமல் செல்ல
இயலவில்லை..
என் சந்தோசம், துக்கம்
எல்லாம் உன்னில் கண்டேன்..
புதிதாய் ஆடை வாங்கி
அணிந்து கொண்டு
உன்னிடம் காண்பித்து,
நீ முகம் சுளித்தால்
ஆடையின் ஆயுள் முடிந்து விடும்
சில நொடியில்..
என்னை நான் நம்பாமல்
உன்னை நம்புபவளாணேன்..
எப்போதும் உன்னை பார்ப்பது ஏனோ
பிடிக்கவில்லை அம்மாவிற்கு...
தினமும் உன்னை கண்டு
சிறு சிரிப்பையாவது உதிர்க்காமல்
கடக்க முடியவில்லை...
என்னை நிஜமாய் பதியவைப்பது
நீ தான்...
எல்லாம் செய்யும் நீ
மனிதனின் மனதின்
நிஜத்தை காண்பிப்பாயா???

சிவா.ஜி
06-02-2010, 01:30 PM
தெரிவதை மட்டுமே பிரதிபலிக்கத்தெரிந்த அதற்கு....மறைக்கப்பட்ட மனதைக் காட்டும் வித்தை தெரியாது.

அப்படி ஒன்று இருந்தால்....உலகில் உறவுகளே இருக்காது.

நல்லாருக்குங்க இன்பக்கவி. வாழ்த்துகள்.

இளசு
19-02-2010, 06:33 PM
அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக்கூடாதோ?

பழகும்போதே நன்மைதீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ?


-- கவியரசர் வரிகள் இவை..


முகம் சுளித்து புத்தாடை ஒதுக்கும் பழியை
ஆடிமேல் சுமத்திய பாங்கை மெச்சினேன்..


பாராட்டுகள் இன்பக்கவி!

குணமதி
24-02-2010, 03:50 PM
உள்ளத்தின் உண்மை நிலையை உணராமல்...

நம்பி ஏமாறிப் போகிறவர்கள் எண்ணற்றோர்!

தன்னைமீறி முழுவதும் நம்பிய பிறகு...

எச்சரிக்கை தலைகாட்டுகிறது.

தப்பிக்க முடியுமா?

இன்பக்கவி
25-02-2010, 04:37 AM
தெரிவதை மட்டுமே பிரதிபலிக்கத்தெரிந்த அதற்கு....மறைக்கப்பட்ட மனதைக் காட்டும் வித்தை தெரியாது.

அப்படி ஒன்று இருந்தால்....உலகில் உறவுகளே இருக்காது.

நல்லாருக்குங்க இன்பக்கவி. வாழ்த்துகள்.


அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக்கூடாதோ?

பழகும்போதே நன்மைதீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ?


-- கவியரசர் வரிகள் இவை..


முகம் சுளித்து புத்தாடை ஒதுக்கும் பழியை
ஆடிமேல் சுமத்திய பாங்கை மெச்சினேன்..


பாராட்டுகள் இன்பக்கவி!


உள்ளத்தின் உண்மை நிலையை உணராமல்...

நம்பி ஏமாறிப் போகிறவர்கள் எண்ணற்றோர்!

தன்னைமீறி முழுவதும் நம்பிய பிறகு...

எச்சரிக்கை தலைகாட்டுகிறது.

தப்பிக்க முடியுமா?
நன்றிகள்...
தாமதமாய் ஒரு நன்றி...
கண்ணாடி காணும் போது எல்லாம் என் மனதில் தோன்றும் சில விஷயங்கள் தான் இந்த கவிதை...
நன்றிகள்:icon_b:

அக்னி
25-02-2010, 07:12 AM
எங்கோ இருக்கும் சூரியனையும்
பார்க்கும் நம் கண்களால்,
நம்மைப் பார்க்க முடியாது...

என்னை நான் நன்கறிவேன்.
என் உருவை நானறிவேனா...

சாத்தியப்படுத்தியதுதான் இந்த ஆடி...

நீரில் தன் விம்பம் முதலிற் காண்கையில்,
முதல் மனிதனுக்கு
ஏற்பட்டிருக்கக்கூடிய திகைப்பு,
ஆடியைக் காண்கையில்
எப்போதும் எனக்கு ஏற்படுவதுண்டு.

சக்தி ஏதுமில்லாமல்,
எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதும்
அதிசயம்தான்.

எதையும் மறைக்கத் தெரியாத
மனதுக்கு,
ஆடி மனம் என்பதுதான்
சாலப் பொருந்துமோ...

பாராட்டுக்கள் கவிதா அவர்களே...

தளவாடிக்கு முன்னாலேயே, முழுப்பொழுதும் இருந்தால்,
அம்மா திட்டாம என்ன செய்வாங்க... :rolleyes:

இன்பக்கவி
25-02-2010, 08:10 AM
நன்றி அக்னி அவர்களே..
கவிதைக்கு கவியால் பதில்...
நன்றி...
என் அம்மாக்கு கண்ணாடி , கணினி இரெண்டின் முன்பும் நான் இருந்தால் பிடிக்காது என்ன செய்ய??:traurig001::traurig001: