PDA

View Full Version : பாவங்களின் கூலி



ஆதி
05-02-2010, 12:04 PM
யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

என் பாவத்தை உணர்ந்து
சரி செய்ய முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவடை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய முடியாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

யவனிகா
05-02-2010, 12:11 PM
நல்ல கவிதை.

ஏற்றி அல்ல....ஏமாற்றி பிழை திருத்துங்கள் தம்பி.

பிரசித்தம் செய்ய இயலாப்பாவங்கள்
கரையானாய் அரித்தெடுக்கும்...
கழுவித்துடைக்க இயலா கரைகள் அவை..
அவை இல்லா முகங்கள் அரிதே இங்கே...
எல்லோரும் உலா வருகிறோம் கரைகளோடு...
அழகான அரிதாரம்கொண்டு அவற்றை மறைக்கசெய்து...
எப்போதாவது உண்மை அவற்றை
கழுவ எத்தனிக்கும்....
அப்போது கவிதைகள் செய்துவிட்டு
மீண்டும் அரிதாரம் பூசிக்கொள்கிறோம்

வாழ்த்துக்கள் தம்பி

ஆதி
05-02-2010, 12:20 PM
நல்ல கவிதை.

ஏற்றி அல்ல....ஏமாற்றி பிழை திருத்துங்கள் தம்பி.

பிரசித்தம் செய்ய இயலாப்பாவங்கள்
கரையானாய் அரித்தெடுக்கும்...
கழுவித்துடைக்க இயலா கரைகள் அவை..
அவை இல்லா முகங்கள் அரிதே இங்கே...
எல்லோரும் உலா வருகிறோம் கரைகளோடு...
அழகான அரிதாரம்கொண்டு அவற்றை மறைக்கசெய்து...
எப்போதாவது உண்மை அவற்றை
கழுவ எத்தனிக்கும்....
அப்போது கவிதைகள் செய்துவிட்டு
மீண்டும் அரிதாரம் பூசிக்கொள்கிறோம்

வாழ்த்துக்கள் தம்பி

பிழையை திருத்திட்டேன் அக்கா..

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பின்னூட்டம் என் கவிதை திரியில் கிடைத்தது எண்ணி அலாதியான ஆனந்தம்( மன்றம் தொடர்ந்து வருவீங்கங்கற நம்பிக்கையும் முக்கிய காரணம்)..

உங்க கவிதை சும்மா சூப்பர் அக்கா.. கடைசி வரி சுளீர் என்று இருந்தது..

உங்களின் அழகிய கவிதைக்கு வாழ்த்துக்களும்..

உங்கள் வாழ்த்துக்கு நன்றியும் அக்கா..

இளசு
22-02-2010, 06:43 PM
மீண்டும் ஓர் இரட்டை விருந்து!


அசத்தும் ஆதனுக்கும், யவனிகாவுக்கும்
இரட்டைப் பாராட்டுகள்!


சிரித்துவாழ வேண்டும் படத்தில் ஒரு பாடலின் சில வரிகள் :

மண்ணில் மறைவாக எந்த விதை போட்டாலும்
போட்ட விதை என்னவென்று
மரம் வளர்ந்து காட்டாதோ...?


கண்ணை மறைத்து எந்தக் காரியத்தைச் செய்தாலும்
காலக் கணக்கனவன்
காட்டிவைக்க மாட்டானோ????

------------------------

ஆதன் அடுத்த கட்டமாய்
நிவர்த்திக்க இயலாமையின் வெதும்பலைச் சொல்ல

யவனிகா மேலே ஒருபடி போய்
பூசி மறைத்து, மாற்று நிவாரணம் தேடும் யதார்த்தம் சொல்ல...


இவ்விரு கவிகளின் மனவளம், சொல்வளம் பற்றி என்ன சொல்ல?


வியக்கிறேன்.


பாராட்டுகள் பலப்பல....

இன்பக்கவி
23-02-2010, 12:55 AM
இருகவிதைகளும் அருமை...
வார்த்தைகள் ஜாலம் புரிகிறது...
வாழ்த்துக்கள் :)