PDA

View Full Version : ஐயோ பாவம்!

குணமதி
05-02-2010, 03:13 AM
ஐயோ பாவம்!

இப்படியும்

ஒரு வாழ்க்கை!

இதற்கென்று

ஒரு பிறவி!

மற்ற உயிரின் குருதியை உறிஞ்சியே

உயிர்வாழ வேண்டும்!

எந்த நேரத்திலும்

கொல்லப்படலாம்!

விழுங்கும் வேட்டைக்கு என்றே

காத்திருக்கும் பகை உயிர்கள்!

ஐயோ பாவம்,

கொசு!

சிவா.ஜி
05-02-2010, 05:26 AM
டெங்குவும், சிக்குன் குனியாவும், மலேரியாவும் வந்து அவதிப்படுபவர்களைப் பார்த்து இந்தக் கொசுக்களும் சொல்லும் "அய்யோ பாவம்"

கொசுவுக்கும் பரிதாபப்பட்ட குணமதிக்கு வாழ்த்துகள்.

தாமரை
05-02-2010, 05:32 AM
வீரர்கள் ஏறிச
சவாரி செய்து
செய்யும் பாவத்தில்
வெட்டி வீழ்த்தப்பட்ட குதிரைகள்
கொசுக்கள்.

இரண்டும் ஒண்ணுதானே குணமதி

rajarajacholan
05-02-2010, 07:22 AM
கொசுவுக்கெல்லாமா கவிதை எழுதிவீங்க.

இன்பக்கவி
05-02-2010, 08:21 AM
ஐயோ,
கொசுவுக்கு ஒரு கவிதை..
முதன் முதலாக இப்படி ஒரு கவிதை..
இளகிய மனசு உங்களுக்கு..
ஆஹா ஹா...
நல்ல இருக்கு...:icon_b:

குணமதி
05-02-2010, 02:35 PM
டெங்குவும், சிக்குன் குனியாவும், மலேரியாவும் வந்து அவதிப்படுபவர்களைப் பார்த்து இந்தக் கொசுக்களும் சொல்லும் "அய்யோ பாவம்"

கொசுவுக்கும் பரிதாபப்பட்ட குணமதிக்கு வாழ்த்துகள்.

நன்றி சிவா.

குணமதி
05-02-2010, 02:36 PM
வீரர்கள் ஏறிச
சவாரி செய்து
செய்யும் பாவத்தில்
வெட்டி வீழ்த்தப்பட்ட குதிரைகள்
கொசுக்கள்.

இரண்டும் ஒண்ணுதானே குணமதி

ஒருவகையில் உண்மையே.

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
05-02-2010, 02:40 PM
கொசுவுக்கெல்லாமா கவிதை எழுதிவீங்க.

தூசுக்கு எழுதுகிறோம்; கொசுவுக்கு எழுதக்கூடாதா?

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
05-02-2010, 02:41 PM
ஐயோ,
கொசுவுக்கு ஒரு கவிதை..
முதன் முதலாக இப்படி ஒரு கவிதை..
இளகிய மனசு உங்களுக்கு..
ஆஹா ஹா...
நல்ல இருக்கு...:icon_b:

மிக்க நன்றி.

அக்னி
10-02-2010, 07:23 AM
இந்தக் கவிதையை மட்டும் கொசுக்கள் படித்தால்,
குணமதி அவர்களைக் கொசுக்கள் தீண்டவே மாட்டா...

*****
கொசு மனிதனின் காதில் வந்து கேட்டது...
நான் முத்தமிட்டது
உனக்குப் பிடிக்கவில்லையென்றால்,
அதற்காக உன்னை நீயே
ஏன் அடித்துக்கொள்கின்றாய்...?

கொசு தனக்குள் நினைத்தபடி சென்றது...
அட... என் பேச்சும் பிடிக்கவில்லைபோலும்.
என் பேச்சைக் கேட்டதால்
தன் காதையே அறைந்துவிட்டானே...

*****
கொசுக்களுக்குள் மட்டும்
ஒற்றுமையிருந்தால்,
கொசுவர்த்திச் சுருள்கள்
கொளுத்தப்பட்டதும்
கொசுக்களாற் கடத்தப்படும்.

ஆதி
10-02-2010, 07:40 AM
கொசுக்கள் நம்ம காதில் வந்து ரீங்காரம் இடுவது ஏன் தெரியுமா ?

நம்ம இரத்த அழுத்தத்தை உயர்த்த.. இரத்த அழுத்தம் உயர்ந்தா, அதனால் மிக சுலபமாய் நிறைய இரத்தத்தை உறிஞ்ச முடியும்.. சோ.. கொசு வந்து காதில் கத்தினா.. எரிச்சல் கொண்டு கோபப்படாதீங்க.. கோபப்பட்ட கொசுக்கள் ஜெய்ச்சுடும்..

---------------

ஐயோ பாவம்தான்
கடிப்பட்ட மனிதனும்
அடிப்பட்ட கொசுவும்..

வாழ்த்துக்கள் குணமதி..

அக்னி
10-02-2010, 10:17 AM

:eek: :eek: :eek:
நல்லாத்தான் குடுக்கிறாங்க டீடெய்யிலு... :icon_ush:

தாமரை
10-02-2010, 10:18 AM
மனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ?

இருக்கலாம். ஏன்னா

கொசுக்கள் உழைப்பாளிகள். :D :D :D

அக்னி
10-02-2010, 10:29 AM
மனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ?

இருக்கலாம். ஏன்னா

கொசுக்கள் உழைப்பாளிகள். :D :D :D

:innocent0002: :innocent0002: :innocent0002:
வழமையா முதலாளி வர்க்கம்தான் உறிஞ்சுவதாகச் சொல்வாங்க.
இங்க உழைப்பாளி வர்க்கம் உறிஞ்சுதோ...

தாமரை
10-02-2010, 10:35 AM
:innocent0002: :innocent0002: :innocent0002:
வழமையா முதலாளி வர்க்கம்தான் உறிஞ்சுவதாகச் சொல்வாங்க.
இங்க உழைப்பாளி வர்க்கம் உறிஞ்சுதோ...

அங்க முதலாளிகள் கிடையாதுங்க...

உழைப்பாளிகள் தானே தங்களுக்குத் தேவையானதை ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியில் எடுத்துக்கறாங்க. அக்காங்!

ஆதி
10-02-2010, 10:42 AM
:eek: :eek: :eek:
நல்லாத்தான் குடுக்கிறாங்க டீடெய்யிலு... :icon_ush:

ஹி.. ஹி..

இன்னொரு விஷயம் பெண் கொசுக்கள்தான் கடிக்குமாம்..

ஆண் கொசுக்கள் கடிக்காதாம் (ஆண்கள் எப்பவுமே வாயில்லா பூச்சிகள் தானே.. :) )

கொசுக்களை எந்த மருந்து கொண்டும் அழிக்க முடியாது என்று முடிவு செய்த விஞ்ஞானிகள்.. கடைசியா ஒரு முடிவு செய்திருக்காங்க.. என்னனா, ஆண் கொசுக்களை வைத்து கொசு வம்சத்தை அழிப்பதென.. அதாவது பிறக்கிற கொசி எல்லலம் ஆண் கொசுவா பிறந்தா கொசுவோட வம்சம் விருத்தியாகாதில்ல.. அப்பறம் எப்படி பெண் கொசுக்கள் பிறக்கும்.. கடிக்கும்.. எல்லா ஆராய்ச்சியும் ஒரு சந்தர்பத்தில் இடிக்கும் அப்ப என்ன சொல்றாங்க னு பார்ப்போம்..

கொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா ?

அக்னி
10-02-2010, 10:42 AM
அங்க முதலாளிகள் கிடையாதுங்க...

உழைப்பாளிகள் தானே தங்களுக்குத் தேவையானதை ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியில் எடுத்துக்கறாங்க. அக்காங்!
சிவா.ஜி...
உங்ககிட்ட கடன்வாங்க முடியாததக் கடன் வாங்குறன்...

முடி...ய்...யல...

அக்னி
10-02-2010, 10:48 AM
கொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா ?
இந்தப் பொய்த் தகவல அமரன் தான் கொடுத்திருக்கணும்.

ஒருவேளை,
குளிர்காலத்தில கொசுவெல்லாம் விறைச்சுபோயிருக்கேக்க கணக்கெடுத்தாங்களோ...

குணமதி
10-02-2010, 11:49 AM
இந்தக் கவிதையை மட்டும் கொசுக்கள் படித்தால்,
குணமதி அவர்களைக் கொசுக்கள் தீண்டவே மாட்டா...

*****
கொசு மனிதனின் காதில் வந்து கேட்டது...
நான் முத்தமிட்டது
உனக்குப் பிடிக்கவில்லையென்றால்,
அதற்காக உன்னை நீயே
ஏன் அடித்துக்கொள்கின்றாய்...?

கொசு தனக்குள் நினைத்தபடி சென்றது...
அட... என் பேச்சும் பிடிக்கவில்லைபோலும்.
என் பேச்சைக் கேட்டதால்
தன் காதையே அறைந்துவிட்டானே...

*****
கொசுக்களுக்குள் மட்டும்
ஒற்றுமையிருந்தால்,
கொசுவர்த்திச் சுருள்கள்
கொளுத்தப்பட்டதும்
கொசுக்களாற் கடத்தப்படும்.

அரிய விளக்கம் அளித்தார் அக்னி

பெரியவுரு மாந்தனே சின்னஞ் சிறியவுயிர்

குத்தி உறிஞ்சும் கொசுவிடம் ஏமாறும்

உத்தி உரைத்தார் உவந்து.

நன்றி நெருப்பாரே!

குணமதி
10-02-2010, 11:55 AM
கொசுக்கள் நம்ம காதில் வந்து ரீங்காரம் இடுவது ஏன் தெரியுமா ?

நம்ம இரத்த அழுத்தத்தை உயர்த்த.. இரத்த அழுத்தம் உயர்ந்தா, அதனால் மிக சுலபமாய் நிறைய இரத்தத்தை உறிஞ்ச முடியும்.. சோ.. கொசு வந்து காதில் கத்தினா.. எரிச்சல் கொண்டு கோபப்படாதீங்க.. கோபப்பட்ட கொசுக்கள் ஜெய்ச்சுடும்..

---------------

ஐயோ பாவம்தான்
கடிப்பட்ட மனிதனும்
அடிப்பட்ட கொசுவும்..

வாழ்த்துக்கள் குணமதி..

கொசுவின(து) உத்திக் குறிப்பறிந்(து) எண்ணி

உச்சுப்பினார் ஆதன் உரை.

நன்றி ஆதன்.

குணமதி
10-02-2010, 11:57 AM
மனுசனைக் கடிச்சு கொசுவுக்கு வியாதிகள் வர்ரதில்லையோ?

இருக்கலாம். ஏன்னா

கொசுக்கள் உழைப்பாளிகள். :D :D :D

அருமையான விளக்கம்.

நன்றி.

குணமதி
10-02-2010, 12:00 PM
***கொசு இல்லாத நாடு பிரான்ஸ் என்று படித்திருக்கேன், வேறெந்த நாடும் இருக்கா ? ***

உண்மைதான்!

பிரான்சில் கொசு கிடையாது.