PDA

View Full Version : வண்ணத்துப் பூச்சி!!!



lenram80
04-02-2010, 03:34 PM
எத்தனை முறை தேடினாலும்
வாக்காளர் பட்டியலில் எப்படி
உனது பெயர்இருக்கும்?
வண்ணத்துப் பூச்சிகளுக்கெல்லாம்
வாக்குரிமை கிடையாது
என்பது உனக்குத் தெரியாதா?

வண்ணத்துப் பூச்சியின் அவதாரமா நீ?
காப்பியை விடுத்து
தே(ன்)நீரை மட்டுமே நீ திரும்பத் திரும்ப
குடிக்கும் போதே எனக்கு சந்தேகம்!

உனக்கு மட்டும் எப்படி பஞ்சுக் கைகள்?
இறக்கையாய் இருந்திருக்க வேண்டியவை
இரு கையாய் இருப்பதால் தானோ?

உன்னை வண்ணத்துப் பூச்சியாக்கியதில்
எனக்கு ஒரு சந்தோஷம்!
பூவாக என்னை இந்த ஒரு கவிதையிலேனும்
உருவகப் படுத்த முடிந்ததால்!

வண்ணத்து பூச்சி நீ ஆனது அவதாரம்!
உன்னிடம் நான் மாட்டியது அபராதம்!
இப்படி நீ முறைகாதே! அப்பப்பா... செம காரம்!

உன் விரல் தொட இந்தப்பூ ஏங்க....
எப்போது கேட்பாய் என்னிடம் ஏகப்பட்ட "ஏங்க....?"*

---- x ------

* - மனைவி கணவனை அழைப்பது.."ஏங்க...! இங்க வாங்களேன்...". அந்த ஏங்க தான் இந்த இரண்டாவது ஏங்க.... :-)

சிவா.ஜி
04-02-2010, 03:38 PM
அசத்தல் லெனின்.

தே(னீ)நீரைக் குடிக்கும் வண்ணத்துப்பூச்சி, இரு கைகளான இறக்கை சூப்பர்.

கடைசி வரி இளமைக் குறும்பு.

கலக்கலான காதல் கவிதை. வாழ்த்துகள் லெனின்.

lenram80
04-02-2010, 03:48 PM
நன்றி சொல்வதை கேட்பதற்கு முன்பே சிவாஜி சென்று விட்டாரே!! ஓ...வண்ணத்துப் பூச்சி பிடிக்கவா?

சிவா.ஜி
04-02-2010, 03:51 PM
ஆஹா.....பூச்சிபிடிக்கவா போனேன்...?

அதுவும் ஒரே நிறத்து பூச்சியை எப்படி வண்ணத்துப்பூச்சி எனச் சொல்லமுடியும் லெனின்?

(நான் இருப்பது நைஜீரியா....இங்கு எல்லாமே ஒரே நிறம்...கறுப்புதான் எனக்கு தெரியும் கலரு...)

lenram80
04-02-2010, 04:13 PM
வருத்தமாக உள்ளது சிவாஜி.
ஒரு தமிழ் கற்புப் பெண்களைப், அங்கே உள்ள கறுப்புப் பெண்களின் வழியே நீங்களே கற்பனை செய்து பார்க்கவும்.


குறிப்பு: Butterfly என்று ஆங்கிலத்தில் மாற்றினாலும், பட்டர் வெள்ளையாகத் தானே இருக்கும்

சுகந்தப்ரீதன்
07-02-2010, 08:05 AM
வண்ணத்து பூச்சியில் உங்கள் எண்ணத்தை பூச்சி ஏங்க வைக்கிறீங்களே எங்களையும் உங்களோட சேர்ந்து... இதெல்லாம் நியாயமாண்ணா..?!

வாழ்த்துக்கள் லெனின் அண்ணா..!!

சிவா.ஜி
07-02-2010, 08:14 AM
வண்ணத்து பூச்சியில் உங்கள் எண்ணத்தை பூச்சி ஏங்க வைக்கிறீங்களே எங்களையும் உங்களோட சேர்ந்து... இதெல்லாம் நியாயமாண்ணா..?!

வாழ்த்துக்கள் லெனின் அண்ணா..!!

வயசு...வயசு...எல்லாம் வயசு பண்ற வேலை.....!!!

யவனிகா
07-02-2010, 08:54 AM
கற்பனை வளம்
சிறகடிக்கிறது
சிறைபடாமல்
பறக்க வாழ்த்துகள்
கவிஞரே...

ஆர்.ஈஸ்வரன்
07-02-2010, 09:05 AM
வண்ணத்துப்பூச்சி தலைப்பைப் பார்த்ததும் படிக்கத் தூண்டியது. நல்ல சிந்தனைக் கவிதை. வாழ்த்துக்கள்

lenram80
08-02-2010, 12:39 PM
நன்றி சுகந்த ப்ரீதன், சிவாஜி, யவனிகா & ஈஸ்வரன்

gans5001
09-02-2010, 07:24 AM
வண்ணத்து பூச்சி நீ ஆனது அவதாரம்!
உன்னிடம் நான் மாட்டியது அபராதம்!
இப்படி நீ முறைகாதே! அப்பப்பா... செம காரம்!

உன் விரல் தொட இந்தப்பூ ஏங்க....
எப்போது கேட்பாய் என்னிடம் ஏகப்பட்ட "ஏங்க....?"*


இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. கவிதையின் அழகு நடை சிறிது பாதை விலகியதாய் தோன்றுகிறது

lenram80
09-02-2010, 12:27 PM
நீங்கள் சொல்வது சரி தான் கண்ஸ். கடைசியாக அந்த வரிகளைச் சும்மா லந்துக்காகச் சேர்த்தேன்...! :-)

ஷீ-நிசி
12-02-2010, 11:55 AM
தேனீர் பயன்பாடு வித்தியாசம்... லெனின் கவிதைகள் எப்பொழுதுமே ரசனையாய் இருக்கும். வாழ்த்துக்கள் நண்பா!

lenram80
16-02-2010, 12:20 PM
ரசித்த கவிஞர் ஷீ-நிசி க்கு நன்றி...!!!