PDA

View Full Version : தூய தமிழில் ஒரு கவிதை...!கலைவேந்தன்
04-02-2010, 03:05 PM
http://islamgreatreligion.files.wordpress.com/2009/07/repentance.jpg

மன்னித்தருள்வாயா தேவி...?


செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

சிவா.ஜி
04-02-2010, 03:46 PM
அருமை....மிக அருமை...

உங்கள் கவிதையில் சதிராடும் தமிழைப் படித்து பரவசமாகிறது. ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்துவிழுகிறது சொல்ல வந்த கருத்து.

அன்னை சரஸ்வதியை, அள்ளி அனைத்து அரவணைப்பாயா என மன்றாடும் வரிகளில் தெரியும் சுத்திகரிக்கப்பட்ட உள்ளம் மனதில் பாரமேற்றுகிறது.

அற்புதமான கவிதை கலை. உங்கள் தமிழுக்கு நான் பரம ரசிகன். வாழ்த்துகள் நண்பா.

இன்பக்கவி
04-02-2010, 05:17 PM
இப்படி எல்லாம் எழுத எல்லோராலும் முடியாது..
என்னால் முடியவே முடியாது...
தூய தமிழும் அருமை..
நான் ஓவ்வொரு வரியையும் இரண்டு, மூன்று முறை படித்தே புரிந்து கொண்டேன்.
நன்றிகள்

mannar amuthan
05-02-2010, 06:14 AM
மிகவும் அருமை ஐயா... சொல்ல வார்த்தைகள் இல்லை.. வரி வரியாக பொங்குகிறது கவிதை

இளசு
05-02-2010, 06:24 AM
உணர்வுப்பெருக்கும் தமிழ்ச்செருக்கும் ஒருங்கே அமைந்த மனம் மட்டுமே
இத்தகைய கவிதை வடிக்க வல்லது..

தேவியின் அருள் முழுதாய்க் கிட்டும் கலை..

வாழ்த்துகள்..


( மார்பணைத்து என வந்திருக்க வேண்டுமா????)

கலைவேந்தன்
07-11-2010, 11:03 AM
சிவாஜி, இன்பக்கவி, மன்னார் அமுதன், இளசு... அனைவருக்கும் நன்றி நண்பர்களே..!

வசீகரன்
11-11-2010, 11:41 AM
தமிழுக்கு அமுதென்று பேர்...
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
உயிருக்கு நேர்...!

தூய தமிழில் கவி படி(டை)த்த ஆசிரியருக்கு..
என் மனமார்ந்த வணக்கத்தையும்.. நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..!

govindh
11-11-2010, 12:59 PM
அருமையான கவி விருந்து படைத்திட்ட
கலை வேந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி...
பாராட்டுக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 01:25 PM
தூய தமிழ் கவிதை மிக அருமை .இந்த கவியில் "கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்" இதில் "உனகழல்" எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.இந்த கவிதையில் "சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்" இவரிகள் மிகவும் அருமை நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .ஆக இறுதியாக மனிதனின் செய்யும் தவறுகள் அனைத்தையும் கவிதை வடிவில் மிக அருமையாக தந்துளிளீர்.
உள்ளன்புடன்
த.க.ஜெய்

Ravee
11-11-2010, 02:23 PM
கவி காளிதாசன் அன்னை சரஸ்வதியிடம் இப்படித்தான் வேண்டி இருப்பானோ ?http://www.artoflegendindia.com/images/images_big/plaa004_goddess_saraswati.jpg


உன்னை அண்டி பணிவது என் வேலை
பணிந்த எனக்கு அருள்வது உன் வேலை
என் எண்ணத்தில் அள்ளித்தா ஆயிரம் ஆயிரம்
நான் தொடுத்து தருவேன் பா நூறாயிரம்

என்னையும் சிறிய முயற்சி செய்ய வைத்தது உங்கள் எழுத்தாற்றல் .

கீதம்
12-11-2010, 01:56 AM
கவி காளிதாசன் அன்னை சரஸ்வதியிடம் இப்படித்தான் வேண்டி இருப்பானோ ?http://www.artoflegendindia.com/images/images_big/plaa004_goddess_saraswati.jpg


உன்னை அண்டி பணிவது என் வேலை
பணிந்த எனக்கு அருள்வது உன் வேலை
என் எண்ணத்தில் அள்ளித்தா ஆயிரம் ஆயிரம்
நான் தொடுத்து தருவேன் பா நூறாயிரம்

என்னையும் சிறிய முயற்சி செய்ய வைத்தது உங்கள் எழுத்தாற்றல் .


படம் பிரமாதம் ரவி. இவள் எந்த நாட்டு கலைவாணியோ?

கலைவேந்தன்
14-04-2012, 06:37 AM
தமிழுக்கு அமுதென்று பேர்...
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
உயிருக்கு நேர்...!

தூய தமிழில் கவி படி(டை)த்த ஆசிரியருக்கு..
என் மனமார்ந்த வணக்கத்தையும்.. நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..!

மிக்க நன்றி வசீகரன்..!

கலைவேந்தன்
14-04-2012, 06:38 AM
அருமையான கவி விருந்து படைத்திட்ட
கலை வேந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி...
பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி கோவிந்த்..!

கலைவேந்தன்
14-04-2012, 06:48 AM
தூய தமிழ் கவிதை மிக அருமை .இந்த கவியில் "கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்" இதில் "உனகழல்" எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை.இந்த கவிதையில் "சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்" இவரிகள் மிகவும் அருமை நானும் பலமுறை கண்டிருக்கிறேன் .ஆக இறுதியாக மனிதனின் செய்யும் தவறுகள் அனைத்தையும் கவிதை வடிவில் மிக அருமையாக தந்துளிளீர்.
உள்ளன்புடன்
த.க.ஜெய்

அழகான அலசலுக்கு மிக்க நன்றி ஜெய்..!

கழல் = கால் பாதம் ( கணுக்கால் பகுதி ) இங்கே அணியப்படும் கொலுசு தண்டை போன்றவற்றுக்கும் கழல் எனப் பெயர் குறிக்கப்படும்.

கலைவேந்தன்
14-04-2012, 06:52 AM
கவி காளிதாசன் அன்னை சரஸ்வதியிடம் இப்படித்தான் வேண்டி இருப்பானோ ?
http://www.artoflegendindia.com/images/images_big/plaa004_goddess_saraswati.jpg
உன்னை அண்டி பணிவது என் வேலை
பணிந்த எனக்கு அருள்வது உன் வேலை
என் எண்ணத்தில் அள்ளித்தா ஆயிரம் ஆயிரம்
நான் தொடுத்து தருவேன் பா நூறாயிரம்

என்னையும் சிறிய முயற்சி செய்ய வைத்தது உங்கள் எழுத்தாற்றல் .


அருமையான முயற்சி நண்பரே.. சீனத்து கலைமகளின் அழகிய படம்மிக அழகு.

நன்றி ரவி..!

vasikaran.g
15-04-2012, 10:58 AM
கவிதை அருமை .என்ன என்ன சொல்லி பாராட்ட ..வார்த்தை தேடலில் நான் .

கலைவேந்தன்
16-04-2012, 03:21 PM
மிக்க நன்றி வசிகரன்..!!

அக்னி
28-04-2012, 04:39 PM
எத்தேவி இத்தேவி...

இறைத்தேவியா மனைத்தேவியா...

இரு தேவியர்க்கும் பொருந்துமாற் போலிருக்கே...

பார்க்க வெருட்டும் தமிழ், வாசிக்கத் தன்னாலே தாளம் போடுதே...

பாராட்டுக்கள் கலைவேந்தரே...

நாகரா
05-05-2012, 07:07 AM
பாவியின் இருண்ட பக்கம்
தேவியின் ஒளிப்பக்கம் திரும்ப சுத்த
ஆவியின் இற(ர)க்கம் இல்லாது போகுமோ
நீவிர் தூய தமிழைத்
தூவிச் செய்த அருங்(ட்)கவி
நாவில் ஆட ஆட ஆனந்தமே

வாழ்த்துக்கள் கலைவேந்தரே

thamizhkkaadhalan
05-08-2012, 03:41 AM
மிகவும் அருமையான பொருற்செறிந்த வரிகள்... செய்யுள் நடையில்...

கலைவேந்தன்
05-08-2012, 04:30 AM
எத்தேவி இத்தேவி...

இறைத்தேவியா மனைத்தேவியா...

இரு தேவியர்க்கும் பொருந்துமாற் போலிருக்கே...

பார்க்க வெருட்டும் தமிழ், வாசிக்கத் தன்னாலே தாளம் போடுதே...

பாராட்டுக்கள் கலைவேந்தரே...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்னி..!

கலைவேந்தன்
05-08-2012, 04:30 AM
பாவியின் இருண்ட பக்கம்
தேவியின் ஒளிப்பக்கம் திரும்ப சுத்த
ஆவியின் இற(ர)க்கம் இல்லாது போகுமோ
நீவிர் தூய தமிழைத்
தூவிச் செய்த அருங்(ட்)கவி
நாவில் ஆட ஆட ஆனந்தமே

வாழ்த்துக்கள் கலைவேந்தரே

அழகான வரிகளில் பாராட்டுகள். மிக்க நன்றி நாகரா..!

கலைவேந்தன்
05-08-2012, 04:31 AM
மிகவும் அருமையான பொருற்செறிந்த வரிகள்... செய்யுள் நடையில்...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கவிக்காதலன்.

M.Jagadeesan
05-08-2012, 06:26 AM
இத்தனை நாளும் இக்கவிதை என் கண்ணில் படவில்லையே! கலைவேந்தன் அல்ல நீர் கவிவேந்தன்தான்!
பாடலில் அவன் சொன்ன ஒருசொல்லைக் குறிப்பிடவில்லையே!

கலைவேந்தன்
05-08-2012, 08:01 AM
மிக்க நன்றி ஐயா... எத்தனையோ என் கவிதைகள் இது போல் புதையுண்டு கிடக்கின்றன. :)

அவன் சொன்ன சொல் கடுமையானது என்பது மட்டும் நிஜம். அதை ஏன் சொல்லவேண்டும் என விட்டுவிட்டேன். :)

தங்கள் போன்ற தமிழறிஞரின் பாராட்டு மகிழவைக்கிறது.

கீதம்
05-08-2012, 08:39 AM
வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?
செந்தமிழ்க் கவியில் அன்றும் அசந்து நின்றேன், கருத்துரை எழுத இயலாது மயங்கி. இன்றும் அசந்துபோகிறேன், என்ன எழுதுவதென்று புரியாமல் தயங்கி.

தவறை உணர்ந்தவன் தாள் பணிந்து நிற்கும்போது, அவனை உதாசீனப்படுத்துவதை விடவும் கொடிய தண்டனை வேறேதும் உண்டோ?

அவன் பரிதவிப்பைப் போக்க, நாமும் சேர்ந்து அவனுக்காய் அவளிடம் பரிந்துரைக்கத் தோன்றுகிறது.

இத்தனை அற்புதமாய் அழகுத் தமிழில் அசத்தும் கவிஞனை அலட்சியப் படுத்துதல் தகுமோ தேவி என்று அவளைக் கேட்கவும் மனம் துணிகிறது.

வலியாடும் சொல்லூடும் பொலிவோடு சதிராடும் தமிழ்பாடும் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுகள் கலைவேந்தன்.

கலைவேந்தன்
06-08-2012, 03:11 PM
தங்களின் பாராட்டுதல்களுக்கும் ஊக்குவித்தல்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் கீதம்..!