PDA

View Full Version : வேலை வாய்ப்பு அலுவலகம்



muthuvel
04-02-2010, 12:13 PM
மணம் இல்லாத மல்லிகை ,
வாசனை இல்லாத ஊதுவத்தி ,
வெப்பம் இல்லாத சூரியன் ,
கற்பனை கலக்காத கவிதை,
அலை இல்லாத கடல்,
மழை இல்லாத கரும்மேகங்கள்,
உரிமை இருந்தும் ஒட்டு போடாத குடிமகன் ,
கொள்கைகள் இல்லாத கட்சிகள் ,
பறவைகள் இல்லாத வேடந்தாங்கல் ,
பனி இல்லாத மார்கழி,
குரு இல்லாத குருகுலம்,
இவற்றை போல ,
பதிந்தும் ,பணி கொடுக்காத வேலை வாய்ப்பு அலுவலகம் ,

சிவா.ஜி
04-02-2010, 12:25 PM
அடடா...அடுக்கிட்டீங்களே....முத்துவேல்....
சிம்பிளா சொன்னா...வேலைதரா அலுவலகம்ன்னு சொல்லுங்க.

நல்லாருக்கு. வாழ்த்துகள்.

ஆதி
04-02-2010, 12:31 PM
கவிதை இன்னும் கொஞ்சம் தீட்டலாம் முத்துவேல்..

கவிதையோ சில வரிகள் ஒட்டவில்லை..