PDA

View Full Version : ஆபாச நகைச்சுவை



ஆதி
04-02-2010, 07:26 AM
ஒரு பயணம்..

அனைவரையும் போலவே
ஆபாச நகைச்சுவை ஒன்றையும்
சுமந்து விரைந்தது ரயில்..

மற்றவர்கள் போல்
நானும் படித்தவுடன்
சிரித்துவிட்டேன் முதலில்..

பிறகொரு அருவருப்பு உண்டானது
அதை எழுதியவர் மேல்..

அதை எழுதியவர் யாராகவும் இருக்கலாம்
அதே ரயிலில் பயணம் செய்தவாறும் இருக்கலாம்..

இதே நகைச்சுவையை
வேறெங்கோ எழுதிக்கொண்டோ
பகிர்ந்து கொண்டோ இருக்கலாம்
இத்தருணத்தில்..

நாளை நானும் வேறொருவருடன்
இந்நகைசுவையை பகிர்ந்து கொண்டு
ஆபாச சிரிப்பொன்று சிரிக்க நேரலாம்..

இங்கு சிலரின் மனதில்
இது ஒத்த வேறு நகைச்சுவை ஊறலாம்..

என்னைப் போல் இங்கு வேறொருவரும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்..

இல்லை இந்த எதுவுமே நிகழாமலும் இருக்கலாம்..

ஊற்றெடுக்கும் எண்ணங்களில் ஊடே
என் நிறுத்தம் வர
இறங்க ஆயத்தமாகிறேன்..

அவரவர் நிறுத்தங்களில்
அவரவரும் இறங்கி சென்றவிட கூடும்
இந்த நகைச்சுவையை
ரயிலில் இருந்தும்..
மனதில் இருந்தும்..
இறக்கிவிடாமல் என்னை போல்.

rajarajacholan
04-02-2010, 07:28 AM
நான்கூட A ஜோக்குனு நெனச்சேன்

praveen
04-02-2010, 08:03 AM
நல்லவேளை அந்த ஜோக்கை சொல்லலை :).

ரயிலில் மட்டுமில்லாமல் கழிவறை சுவறும் சில இடங்களில் நகைச்சுவை? சுமந்திருக்கும். உலகில் எல்லோரும் ஒரே மாதிரி மனநிலையில் எப்போதும் இருப்பதில்லை என்பதை இவைகள் உணர்த்தும்.

அவரவர் என்பதற்குபதில் அரவரர் என்று எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Narathar
04-02-2010, 08:22 AM
வரவேற்கத்தக்க பயணம்
வாழ்த்துக்கள்...............

அடடா! ஒரு வேளை விதிமுறைகளை அறியாமல் பதிந்துவிட்டீர்களோ என்று பயந்தபடி இங்கு வந்த எனக்கு நல்ல மூக்கறுப்பு

சிவா.ஜி
04-02-2010, 08:40 AM
உண்மைதான் ஆதன். எல்லா இடங்களிலும் உலாவுகிறது இதைப்போல நகைச்சுவைகள். மனதுக்குள் இருக்கும் இன்னொரு மனம்....சிலவற்றை இறக்கிவிடாமல் வைத்துக்கொள்கிறது.


வாழ்த்துகள் ஆதன்.

ஆதி
04-02-2010, 09:36 AM
நான்கூட A ஜோக்குனு நெனச்சேன்

சோ ஏமார்ந்துடீங்க, இல்ல ?

ஹே.......ய் ஏமார்த்திட்டேன்.. ஏமார்த்திட்டேன்.. ஏமார்த்திட்டேன்..


வரவேற்கத்தக்க பயணம்
வாழ்த்துக்கள்...............

அடடா! ஒரு வேளை விதிமுறைகளை அறியாமல் பதிந்துவிட்டீர்களோ என்று பயந்தபடி இங்கு வந்த எனக்கு நல்ல மூக்கறுப்பு

ஹி.. ஹி.. நீங்களும் ஏமார்ந்துடீங்களா ?

பொறுப்பாளரா வேற இருந்திருக்கேன் அண்ணா.. விதி(1.சட்டம், 2.ஊழ்வினை) தெரியாமயா இருப்பேன்.. :)

ஆதி
04-02-2010, 09:43 AM
நல்லவேளை அந்த ஜோக்கை சொல்லலை :).

ரயிலில் மட்டுமில்லாமல் கழிவறை சுவறும் சில இடங்களில் நகைச்சுவை? சுமந்திருக்கும். உலகில் எல்லோரும் ஒரே மாதிரி மனநிலையில் எப்போதும் இருப்பதில்லை என்பதை இவைகள் உணர்த்தும்.

அவரவர் என்பதற்குபதில் அரவரர் என்று எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு படைப்புக்கு எதுவேண்டுமானாலும் காரணமாய் இருக்கலாம்.. இல்லையா பிரவீன் அண்ணா..

நகைச்சுவை னு நீங்க கேள்வி குறி போட்டது புரிகிறது.. எழுதப்பட்டிருந்தது நகைச்சுவைத்தான்.. ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு போல் போட்டிருந்தது.. கடைசி வரிதான் ஆபாசமாய்.. அதை படித்த போது முதலில் சிரிப்பு வந்தது..

இந்த கவிதை ஒரு சுய விமர்சன, பரிசோதனை கவிதை.. புறஞ்சார்ந்த அகத்தை விமர்சிக்கும் கவிதை.. நீங்க சுட்டிய பிழையையும் திருத்திவிட்டேன் அண்ணா..

பின்னூட்டத்திற்கு நன்றிங்கண்ணா..

ஆதி
04-02-2010, 09:51 AM
உண்மைதான் ஆதன். எல்லா இடங்களிலும் உலாவுகிறது இதைப்போல நகைச்சுவைகள். மனதுக்குள் இருக்கும் இன்னொரு மனம்....சிலவற்றை இறக்கிவிடாமல் வைத்துக்கொள்கிறது.


வாழ்த்துகள் ஆதன்.


உண்மையை சொல்லப் போனால் மனசால் எதையும் இறக்கவிட முடியாது.. நாம் நினைத்தால் மனசுக்கு தெரியாமல் மனசில் அதை ஒளிச்சு வைக்கலாம்..

என் தமிழையா நகைச்சுவையாய் சொல்வார்..
"ஒரு பொண்ண மறக்க இன்னொரு பொண்ண காதலி"

இதுதான் மனசுக்கு தெரியாம மனசுக்குள் ஒளிச்சுவைக்குறது..

இது சர்யலிசம், நவீனத்துவம், பின்னவீனத்துவம், ரியலிசம், இப்படி எல்லாத்தின் சாறுகளையும் எடுத்து எழுத முயற்சித்த கவிதை அண்ணா..

ஊக்கத்திற்கு நன்றிகள் அண்ணா..

சிறுபிள்ளை
04-02-2010, 09:53 AM
உங்களின் ஆதங்கம் சரிதான். ஆனால் அனைவரையும் ஒரே நேரத்தில் திருத்த முடியாதே என்ன செய்வது?

உங்களின் கையெழுத்து,
முன்னை இட்ட தீ முப்புறத்திலே - பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே - பெண்ணும் இட்ட தீ என்னுயிரினிலே - இன்னும் மூளுதே என்னை தின்னுதே

இது பட்டினத்தார் பாடிய பாடல்தானே? நான் மிகவும் ஆழ்ந்து யோசிச்ச வரிகள் இவை.

ஆதி
04-02-2010, 10:01 AM
உங்களின் ஆதங்கம் சரிதான். ஆனால் அனைவரையும் ஒரே நேரத்தில் திருத்த முடியாதே என்ன செய்வது?

உங்களின் கையெழுத்து,
முன்னை இட்ட தீ முப்புறத்திலே - பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே - பெண்ணும் இட்ட தீ என்னுயிரினிலே - இன்னும் மூளுதே என்னை தின்னுதே

இது பட்டினத்தார் பாடிய பாடல்தானே? நான் மிகவும் ஆழ்ந்து யோசிச்ச வரிகள் இவை.

ஹி.. ஹி..

பாதி தான் பட்டினத்தார் எழுதியது.. மீதி பாதி நான் எழுதினது..

உண்மையான பட்டு இதுதான்..

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே..

தன் அன்னையின் சிதைக்கு தீ வைத்த பிறகு அவர் எழுதிய பாட்டு.. நான் மாற்றிக் கிட்டேன் என் வசதிக்கு...

சுகந்தப்ரீதன்
04-02-2010, 11:45 AM
ஆபாச நகைச்சுவை... ரொம்பவே நல்லாயிருக்கு... கவிதையை சொன்னேன் ஆதன்..!!

பண்பாட்டு வளர்ச்சியில் இதை பார்வை கோளாறு என்றும் சொல்லலாம்... இல்லை வேர்விட்ட இடமென்றும் கொள்ளலாம்..!! எல்லாமே ஆழ்மனதின் அடக்கிவைக்கப்பட்ட ஆவல்கள்தான்..!!

உங்களின் அகமுக கவிதைகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..!! தொடருங்கள்...!!

கலையரசி
04-02-2010, 12:48 PM
ஆபாசம் என்று அருவெறுப்பு தோன்றிய பிறகு, மேற்கொண்டு யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்ளாவிடில், நாம் இறக்கிவிடாவிட்டாலும், தானாகவே அது நம் மனதை விட்டு நீங்கிவிடும்.
நல்ல கவிதை.

குணமதி
04-02-2010, 01:03 PM
நன்று.

அண்மையில் படித்த 'அது' -வை ஒருவகையில் நினைவுபடுத்துகிறது.

இன்பக்கவி
04-02-2010, 05:32 PM
நான் கூட இப்படி எல்லாம் இவரு எழுத மாட்டாரே?? என்ன ஆச்சு இவருக்கும் என்று வந்தேன்..
படித்தேன் சிரித்தேன்..
ஷப்பா, எப்படி எல்லாம் யோசிகின்றாங்க...
ரயிலில் ஒரு குடும்ப கதையே எழுதுறாங்கள்...
சில நேரங்களில் அழிக்க தோணும்...
அழிக்க கூடிய அளவிற்கு முன் கூட்டியே ஏதும் எடுத்தா போகமுடியும்??
நாம மனசுல இருந்து அழிச்சிட வேண்டியது தான்....

பரவாயில்லை அதை நீங்க படித்தால் எங்களுக்கு ஒரு கவிதை கிடைச்சு இருக்கு..இப்படி எல்லாம் எப்படி யோசிகிரீங்களோ

சிறுபிள்ளை
05-02-2010, 05:57 AM
ஹி.. ஹி..

பாதி தான் பட்டினத்தார் எழுதியது.. மீதி பாதி நான் எழுதினது..

உண்மையான பட்டு இதுதான்..

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே..
தன் அன்னையின் சிதைக்கு தீ வைத்த பிறகு அவர் எழுதிய பாட்டு.. நான் மாற்றிக் கிட்டேன் என் வசதிக்கு...

அப்பவே கொஞ்சம் தோனுச்சி ஏதோ பிரளுதேன்னு.... இப்ப புரிஞ்சிடிச்சி.. நன்றி உங்களின் தகவலுக்கு.

இளசு
05-02-2010, 06:03 AM
ஆற்றைக் கடக்க இயலாமல் இளம்பெண்..
தொட்டுத் தூக்கி அக்கரையில் விட்டார் துறவி..

குமைந்து நெடுநேரம் கழித்து வினவிய சீடன் -
'' துறவி நீங்கள் இப்படி..... ..... எப்படி?''

'' எப்போதோ நான் இறக்கிவிட்டேன்..
ஏன் நீ மட்டும் இன்னும் சுமந்தபடி?''


துறவி சொன்ன மறுமொழி..
ஆதன் சொல்லும் இறுதிவரி..


ஓடுநீர் ஒட்டாப் பளிங்குமனம் வாய்க்குமா
எல்லாருக்கும்... எப்பொழுதும்????


பாராட்டுகள் ஆதன்..

aren
05-02-2010, 06:09 AM
ஜோக்குகள் சொல்வது கேட்பது எல்லாம் அந்தந்த நேரத்தின் மனநிலயைப் பொறுத்தே அமையும். சில சமயம் நாமும் கூட சேர்ந்துகொண்டு சிரிப்போம் ஆனால் பல சமயங்களில் மூஞ்சியை சுழித்துக்கொள்வோம். எல்லாமே ஒரு டைமிங்க்தான்.

நல்ல கருத்துள்ள கவிதை. பாராட்டுக்கள்.

பா.ராஜேஷ்
10-02-2010, 02:44 PM
படித்ததை உடனே
மூடி வைக்காமல்
முடி கொட்டும் வரை
நெடிதே யோசித்து எழுதிய கவிதையோ ??

இருப்பினும் நன்று :D

பென்ஸ்
10-02-2010, 04:37 PM
கவிதையை வாசித்துவிட்டு ,
பதிலாய் என்றோ வசித்த கதையை கூறி விமர்சிக்கலாம் என்று வந்தால்...

மறுபக்கத்தில் இளசு அதை வழக்கம் போல் எனக்கு முந்தியே....

காலில் எச்சம் பட்டால் கழுவிவிட்டுதானே பயணத்தை தொடருவோம் ஆதன்... அதுபோலதானே இதுவும்...

கழிவறைக்கு வெளியே ரயிலில் இதுக்குதான் வாசிங் பேசின் வைக்கிறாங்களோ..???

இளசு
10-02-2010, 06:53 PM
இனிய பென்ஸ்

இப்படி நமக்குள் - ஒருவர் எண்ணியதை ஒருவர் ஏற்கனவே எழுதி வைப்பது..
புதுசல்லவே...


ஒத்த அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் நிகழ்வுகள் இனியும் இனிதே தொடரும்...