PDA

View Full Version : தமிழ் தோட்டம் இணையதளம் நடத்திய கவிதை போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசு



muthuvel
04-02-2010, 03:19 AM
வணக்கம்


http://tamilparks.50webs.com/tamil_prize/index.html

praveen
04-02-2010, 03:31 AM
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை, நீங்கள் சுட்டிக்காட்டிய சுட்டியும் உயிர்ப்புடன் இல்லை.

எத்தனை பேர் போட்டியில் கலந்து கொண்டனர்?. என்ன கவிதை அது என்றெல்லாம் விவரம் தராமல் ஏன் இந்த போகிற போக்கில் திரி ஆரம்பித்திருக்கிறீர்கள்.

அடுத்த பதிவில் விளக்குங்கள் நண்பரே

rajarajacholan
04-02-2010, 04:04 AM
அந்த தளத்தை நான் பார்த்தேன். வாழ்த்துக்கள் முத்துவேல். கொஞ்சம் விபரமாக கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆதி
04-02-2010, 04:04 AM
http://tamilparks.50webs.com/tamil_prize/index.html

சுட்டி வேலை செய்கிறது பிரவீன் அண்ணா...

சிவா.ஜி
04-02-2010, 04:11 AM
வாழ்த்துகள் முத்துவேல். எழுதுவதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால், என்ன சொல்ல வருகிறீர்கள் என எல்லோருக்கும் விளங்கும்.

aren
04-02-2010, 04:12 AM
பாராட்டுக்கள் முத்துவேல்.

praveen
04-02-2010, 04:31 AM
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு

முதல் பரிசு - தமிழநம்பி, (ரூபாய் 500/-)


மேன்மைக் கருத்துமலர் மின்னும் தமிழ்த்தோட்டம்
தேன்போல் இனிக்கும் திகட்டாதே! – நோன்மையொடு
ஆற்றல் மிகுவெழுத்தால் அன்புரையால் நந்தமிழர்
ஏற்றமுறச் செய்யுமெனச் சாற்று.





இரண்டாம் பரிசு - விஜயராணி (ரூபாய் 400/-)


"பிரபஞ்ச ஆக்கம்-பரிணாம மாற்றம்- எழுச்சியின்-விதைநிலம்!
எம் அகராதியில் தேட வேண்டாம்..அழிவென்ற வார்த்தையை!
காலங்கள் கடந்து போயினும் கவலையில்லை!
தமிழென்ற நான் - தமிழ் தோட்டத்தில் இருக்கும் வரை!!!"




மூன்றாம் பரிசு - ஆ.முத்துவேல் (ரூபாய் 300/-)


கடவுளை கேட்டேன் தாயை காட்டினார்கள்,
அறிவை கேட்டேன் தந்தையை காட்டினார்கள்,
என் திறமையை வெளிப்படுத்த சந்தர்பம் கேட்டேன்,
"தமிழ் தோட்ட" இணைய தளத்தை காட்டினார்கள்...



மேலே உள்ளது தான் பரிசு பெற்ற கவிதையா நண்பரே. நன்றாக இருக்கிறது, அந்த தளத்தை பாராட்டி கவிதை எழுதியதற்கு பரிசா அது. அதுவும் நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்.

ஆதி
04-02-2010, 04:34 AM
முத்துவேல் தமிழ்தோட்டம் தனக்கு அனுப்பிய மெயிலை அப்படியே இங்கு பதித்திருக்கிறார்..

வாழ்த்துக்கள் முத்துவேல்... தொடர்க நடை...

ஆதி
04-02-2010, 04:35 AM
முத்துவேல் நம் மன்றத்தில் உங்க அறிமுக திரியிலும் இதே கவிதை இருக்கே.. ஹி.. ஹி..


இந்த கவிதையில் உள்ள வசதி, தளத்தை, கால்லூரியை, நிறுவனத்தை, மனசை, மெண்ணை என்று யார் பேர் வேணாலும் போட்டுக்களாம்..

praveen
04-02-2010, 04:51 AM
நாம பரிசு தரவில்லை, இன்னொரு தளம் தந்திருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார் போல, முத்துவேல் உங்களுக்கு நான் தருகிறேன் பரிசு, முதலில் நம் தளத்தில் அதே கவிதையை எழுதியதற்கு 500 இபணம் பரிசு. இதனை மறக்காமல் அந்த தளத்திலே குறிப்பிடுங்கள்.

muthuvel
04-02-2010, 05:18 AM
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு

முதல் பரிசு - தமிழநம்பி, (ரூபாய் 500/-)


மேன்மைக் கருத்துமலர் மின்னும் தமிழ்த்தோட்டம்
தேன்போல் இனிக்கும் திகட்டாதே! – நோன்மையொடு
ஆற்றல் மிகுவெழுத்தால் அன்புரையால் நந்தமிழர்
ஏற்றமுறச் செய்யுமெனச் சாற்று.




இரண்டாம் பரிசு - விஜயராணி (ரூபாய் 400/-)


"பிரபஞ்ச ஆக்கம்-பரிணாம மாற்றம்- எழுச்சியின்-விதைநிலம்!
எம் அகராதியில் தேட வேண்டாம்..அழிவென்ற வார்த்தையை!
காலங்கள் கடந்து போயினும் கவலையில்லை!
தமிழென்ற நான் - தமிழ் தோட்டத்தில் இருக்கும் வரை!!!"




மூன்றாம் பரிசு - ஆ.முத்துவேல் (ரூபாய் 300/-)


கடவுளை கேட்டேன் தாயை காட்டினார்கள்,
அறிவை கேட்டேன் தந்தையை காட்டினார்கள்,
என் திறமையை வெளிப்படுத்த சந்தர்பம் கேட்டேன்,
"தமிழ் தோட்ட" இணைய தளத்தை காட்டினார்கள்...



மேலே உள்ளது தான் பரிசு பெற்ற கவிதையா நண்பரே. நன்றாக இருக்கிறது, அந்த தளத்தை பாராட்டி கவிதை எழுதியதற்கு பரிசா அது. அதுவும் நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்.

நான் ஏதும் உங்கள் மனதை புன்படுதிருந்தால் மன்னிக்கவும் ,
என்னை கேலி செய்வது போல உள்ளது உங்கள் வரிகள்

rajarajacholan
04-02-2010, 06:19 AM
நான் ஏதும் உங்கள் மனதை புன்படுதிருந்தால் மன்னிக்கவும் ,
என்னை கேலி செய்வது போல உள்ளது உங்கள் வரிகள்

என்னங்க இப்படி சொல்லிடீங்க. பிரவீன் சார் அதுதானான்னு சந்தேகத்திலதான கேட்டாரு. ம்ம். கவிதை நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம்னு தோணுது அவ்வளவுதான்.

இன்னும் நிரைய போட்டிகளில் பங்குஎடுத்து நிறைய பரிசுகள் வாங்க என் வாழ்த்துக்கள்.

rajarajacholan
04-02-2010, 06:21 AM
முதல் கவிதைதான் புரியலை.

praveen
04-02-2010, 08:06 AM
நான் ஏதும் உங்கள் மனதை புன்படுதிருந்தால் மன்னிக்கவும் ,
என்னை கேலி செய்வது போல உள்ளது உங்கள் வரிகள்

என்ன நண்பரே இப்படி பதிந்து விட்டீர்கள், உங்களைப்போன்ற மனநிலையிலே நான் ஆரம்பத்தில் இங்கே இருந்தேன்.

செய்வன திருந்தச்செய் என்று என்னை சரி செய்தவர் நம் தள நிர்வாகியாக அறிஞர் தான்.

நான் புண்படுத்த வேண்டும் என்றால் எதற்கு 500 இபணம் பரிசு தந்திருக்க வேண்டும்?.

இனி செய்வன எங்கும் எந்நாளும் திருந்தச்செய்யுங்கள்.

muthuvel
04-02-2010, 08:59 AM
ஐயோ அண்ணா ரொம்ப நன்றி ,

lenram80
05-02-2010, 01:55 PM
வாழ்த்துகள் முத்துவேல்.

ஜனகன்
05-02-2010, 02:44 PM
நல்ல கவிஞர் பட்டம் விரைவில் பெற வாழ்த்துகிறேன் முத்துவேல்.

மன்மதன்
06-02-2010, 11:50 AM
வாழ்த்துகளும் பாராட்டுகளும் முத்துவேல்..

சரண்யா
07-02-2010, 02:40 AM
வாழ்த்துகள் முத்துவேல்..

muthuvel
07-02-2010, 03:54 AM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி