PDA

View Full Version : இசை அமைப்பாளர் திரு .ரஹ்மானுக்கு பாராட்டு



muthuvel
03-02-2010, 07:05 AM
உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த என் இந்தியனே ,
இசையால் எங்களை கட்டிபோட்ட என் உயிரே ,
தமிழனை தலை நிமிர செய்த அழகிய தமிழ் மகனே ,
சதம் தொடும் கிழவனும் ரசிக்கும் உன் ரிதமே ,
உன் மெல்லிசையே ,எனக்கு என்றும் , என் சுவாச காற்றே ,
தமிழ் தாய் கண்டெடுத்த நன் முத்துவே ,
இந்துவாய் பிறந்து , இஸ்லாமியனாய் வளர்ந்து ,
மதங்களை இணைத்த சங்கமமே ..
படைத்தாய் புது "வரலாறு" ,
வாழ்த்துகிறோம் உன்னை பணிவோடு ...

ஆதி
03-02-2010, 07:11 AM
நல்லா இருக்கு முத்துவேல்..

தொடர்க நடை..

சிவா.ஜி
03-02-2010, 07:33 AM
இசையால் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட "திருடா திருடா"

எத்தனை புகழ் வந்தாலும் அடக்கம் காட்டும் "ஜென்டில்மேன்"

இசையின் "காதலன்"

ரஹ்மானுக்கு முத்துவேலின் பா வரிகள் நல்ல வரிகள். வாழ்த்துகள்.

Narathar
03-02-2010, 08:44 AM
ரஹ்மான் தமிழ் இசையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இளைஞ்சர்.

வாழ்த்துவொம் அவரை பல்லாண்டு
தொடரட்டும் அவர் இசைப்பணி.....
அப்பப்ப தமிழையும் கொஞம் எட்டிப்பாருங்க சார்

muthuvel
03-02-2010, 11:30 AM
அனைவருக்கும் நன்றி

govindh
06-03-2010, 08:59 AM
இசைப் புயலுக்கு...இனிய கவி வாழ்த்து...!
முத்துவேலுக்கு முத்தாய்ப்பான நன்றி..!