PDA

View Full Version : ஒரு நிமிடக்கதை - 'அதிர்ஷ்டம்'

கலையரசி
02-02-2010, 12:55 PM
அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகனுக்குத் தங்கையாக நடிக்க வேண்டிய நடிகை வராமல் போகவே, பத்தோடு பதினொன்றாக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த புவனாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் படத்தின் டைரக்டர் மாலன் ஏற்கெனவே ஏழெட்டுப் படங்கள் எடுத்துச் சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கியவர்.

"இந்த டைரக்டர் படத்துல, அதுவும் கதாநாயகனுக்குத் தங்கச்சி வேடம், அதிர்ஷ்டக்காரி தான்டி நீ" என்று சக நடிகைகள் வாழ்த்துத் தெரிவிக்கவே, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் புவனா.

எத்தனையோ நாள் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது, இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளது உள்மனது சொல்லவே, உயிரைக் கொடுத்து நடித்தாள்.

"ம். நல்லா நடிக்கிறியே, இவ்ளோ நல்லா நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்று டைரக்டர் பாராட்டியபோது, வசிஷ்டர் வாயிலிருந்து கிடைத்த பாராட்டு எனப் புளகாங்கிதமடைந்தாள் அவள்.

"இந்தப் படம் வெளிவந்தவுடனே பெரிய ஸ்டார் ஆயிடுவே, எங்களையெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கம்மா"
என்று தோழிகள் கிண்டல் செய்ய, கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலானாள்.

கதாநாயகியாக அவளிடம் கால்ஷீட் கேட்டு, முன்பணம் கொடுக்க அவள் வீட்டு ஹாலில், படத் தயாரிப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போல் அவளுக்கு அடிக்கடி கனவு வரத் துவங்கியது.

படம் வெளியான அன்று தம் தோழிகள் புடை சூழ, தியேட்டருக்குச் சென்று, தான் நடித்த காட்சிகள் எப்போது வரும் என ஆவலோடு காத்திருந்தாள். ஆனால் படம் முடியும் வரை அந்தக் காட்சிகள் வரவேயில்லை.

எடிட்டிங்கில் அவளது அந்தத் தங்கை பாத்திரமே, கத்தரிக்கோலுக்கு இரையாகி உயிரை விட்டிருந்தது.

பா.ராஜேஷ்
02-02-2010, 01:06 PM
அட பாவமே, அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டமாக மாறிவிட்டதே..வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என எண்ணி மேலும் முயற்சி செய்ய வேண்டியதுதான் ;)

பாராட்டுக்கள் கலையரசி அவர்களே !

சிவா.ஜி
02-02-2010, 01:12 PM
காமிராவுக்கு எட்டியது....திரைக்கு எட்டவில்லையே.....கனவை 'கட்' செய்த கத்திரி ஒழிக!

அதிர்ஷ்டத்துக்குக் கூட ஆயுள் வேணும் போலருக்கு.

நல்லாருக்குங்க கலையரசி அவர்களே.

சுகந்தப்ரீதன்
02-02-2010, 01:46 PM
சில நடிகைங்க பேட்டியில எனக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்காரு இயக்குனர் இந்த படத்துலன்னு சொல்லுவாங்க... ஆனா வந்தபிறகு பார்த்தா வழக்கம்போல் தொட்டுக்குற சட்னியாத்தான் அவர்களின் பங்களிப்பு திரையில் காட்சியளிக்கும்..!!

சினிமாதுறையின் அத்தனை தில்லுமுள்ளுகளும் தெள்ள தெளிவாக தெரிந்திருந்தும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் நாட்களை நகர்த்தும் உதவி இயக்குனர்களையும் குருப் டான்ஸர்களையும் நினைத்தால் வியப்பாக இருக்கிறது..!!

வாழ்த்துக்கள்... கலையரசி அவர்களே..!!

கலையரசி
02-02-2010, 03:53 PM
அட பாவமே, அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டமாக மாறிவிட்டதே..வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என எண்ணி மேலும் முயற்சி செய்ய வேண்டியதுதான் ;)

பாராட்டுக்கள் கலையரசி அவர்களே !

பலர் இப்படித்தான் திறமையிருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் சோபிக்க
முயன்று தோற்று விடுகின்றனர். வெகுச் சிலரே மன உறுதியுடன் திரும்பத் திரும்ப முயன்று வெற்றிக்கனியைச் சுவைக்கின்றனர்.
பாராட்டுக்கு நன்றி ராஜேஷ் அவர்களே!

கலையரசி
02-02-2010, 03:55 PM
காமிராவுக்கு எட்டியது....திரைக்கு எட்டவில்லையே.....கனவை 'கட்' செய்த கத்திரி ஒழிக!

அதிர்ஷ்டத்துக்குக் கூட ஆயுள் வேணும் போலருக்கு.

நல்லாருக்குங்க கலையரசி அவர்களே.

ஆமாம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல காமிராவுக்கு எட்டியது
திரைக்கு எட்டவில்லை.
பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி. அவர்களே!

கலையரசி
02-02-2010, 03:58 PM
சில நடிகைங்க பேட்டியில எனக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்காரு இயக்குனர் இந்த படத்துலன்னு சொல்லுவாங்க... ஆனா வந்தபிறகு பார்த்தா வழக்கம்போல் தொட்டுக்குற சட்னியாத்தான் அவர்களின் பங்களிப்பு திரையில் காட்சியளிக்கும்..!!

சினிமாதுறையின் அத்தனை தில்லுமுள்ளுகளும் தெள்ள தெளிவாக தெரிந்திருந்தும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் நாட்களை நகர்த்தும் உதவி இயக்குனர்களையும் குருப் டான்ஸர்களையும் நினைத்தால் வியப்பாக இருக்கிறது..!!

வாழ்த்துக்கள்... கலையரசி அவர்களே..!!

பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே!

அன்புரசிகன்
02-02-2010, 07:53 PM
இப்படி எத்தனை காய்கள் காய்களாகவே காய்ந்தனவோ... அவள் மனம் எவ்வாறு வெம்பியிருக்கும் என்று உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்.

ஜனகன்
02-02-2010, 08:32 PM
உண்மையில் கண்ணை குழமாக்கும் சம்பவம்.
அதை வடித்த உங்கள் வரிகள் பாராட்டுக்குரியது.

கலையரசி
03-02-2010, 12:37 PM
இப்படி எத்தனை காய்கள் காய்களாகவே காய்ந்தனவோ... அவள் மனம் எவ்வாறு வெம்பியிருக்கும் என்று உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி அன்பு ரசிகன் அவர்களே!

கலையரசி
03-02-2010, 12:37 PM
உண்மையில் கண்ணை குழமாக்கும் சம்பவம்.
அதை வடித்த உங்கள் வரிகள் பாராட்டுக்குரியது.

பாராட்டுக்கு நன்றி ஜனகன் அவர்களே!

aren
09-02-2010, 03:23 AM
சினிமாவில் இதுமாதிரியான விஷயங்கள் ரொம்பவும் சகஜமாகச் செய்வார்கள்.

இதுதான் திரைவாழ்க்கையின் அவலம். என்ன செய்வது.

கலையரசி
14-02-2010, 12:26 PM
ஆம் ஆரென் அவர்களே! சிலர் உயிரைக் கொடுத்து நடிப்பார்கள். கடைசியில் படமே
வெளி வராது. சினிமா ஒரு கனவு தொழிற்சாலை தான்!