PDA

View Full Version : புவி வெப்பமயமாதலைத் தடுக்க எரிமலை???



தாமரை
02-02-2010, 12:23 PM
http://www.dnaindia.com/scitech/report_simulating-volcanic-eruptions-can-save-earth-from-global-warming_1340393

அறிவியலாளர்கள், மனித முயற்சியால் எரிமலைகளை வெடிக்கச் செய்வதன் மூலமாக புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும் என அறிக்கை விட்டிருக்கிறார்கள்

எரிமலை வெடிப்பதன் மூலமாக பெரிய அளவில் கந்தக ஆக்ஸைடு வளிமண்டலத்தின் உயரப்பகுதிகளில் பரவுகிறது. இது சூரிய ஒளியை விண்வெளிக்கு திருப்பி விடுவதால் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் சூரிய ஒளியின் அளவு குறைகிறது.

நமது கரியமில வாய்க்களின் வெளியீடு குறையும் வரையில் புவி வெப்பமயமாதல் அபாய அளவை கடக்காமலிருக்க இப்படி தூண்டப்பட்ட எரிமலை வெடிப்புகளை பயன்படுத்தலாம் என அறிவியலார் கருத்து சொல்லி இருக்கிறார்கள்

இதற்கான சோதனை முயற்சிகளை "புவியமைப்பு பொறியியல்" சோதனைகள் மூலம் காலத்தை வீணாக்காமல் ஆரம்பிக்க வேண்டும் என இலண்டனைச் சேர்ந்த மூன்று அறிவியலாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கனடாவின் கல்கெரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கீத் என்பவரோ, இயற்கையோடு விளையாட வேண்டாம். இப்படி மனித முயற்சியால் இயற்கையோடு விளையாடினால் அது பல வித பின் விளைவுகளை உண்டாக்கி விடும் என எச்சரித்து இருக்கிறார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எட்வர்ட் பார்ஸன் என்பவரும், கார்னெஜி மெலான் பலகலைக் கழகத்தைச் சார்ந்த கிரேங்ஙர் மோர்கன் என்பவரும், இந்த ஆராய்ட்சி, அரசியல் ரீதியாகவே பல நாடுகள் கரியமில வாயு வெளிப்பாட்டை கட்டுப்படுத்தாமல் பொறுப்பற்றத் தனமாக நடந்து கொள்ள வழி வகுத்து விடும் என்கிறார்கள்

இதற்கு ஆகும் செலவுதான் உதைக்கிறது. செய்திப்படி வருடத்திற்கு 1 கோடி டாலர்கள் என ஆரம்பித்து 2020 ல் 100 கோடி டாலர்கள் வருடத்திற்கு என உயர்த்தப் பட வேண்டும் என்கிறது. (ரொம்ப சீப்பா இருக்கே என அரசியல்வாதிகள் சொல்லலாம்.)

இது எதுக்குன்னா இப்படி எரிமலை வெடிச்சா அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதாங்க பருவகால மாற்றங்கள், நீரில் அமிலத் தன்மை உயர்தல் இது மாதிரியான பின்விளைவுகளால் உள்ள பாதிப்புகளையும் அதை தாங்கும் முறைகளையும் ஆராய மட்டுமே..


பிலிப்பைன்ஸில் 1991 -ல் மவுண்ட் பினாடுபோ என்ற எரிமலை வெடித்தபோது உலக வெப்ப நிலை குறைந்தது, அதௌ போன்ற சில எரிமலை வெடிப்புகளின் விளைவினால் புவி வெப்பம் குறைந்ததை அடிப்படையாகக் கொண்டே இந்த கோட்பாடு உருவாகி இருக்கிறது. (நான் கூட ஏற்கன்வே மெகா சைஸ் எரிமலைகள் வெடித்ததால் பனியுகங்கள் தோன்றியதைப் பற்றி எழுதி இருக்கேன் படிச்சீங்களா??)


இன்னொரு கருத்தும் சொல்றாங்க.. கடல் நீரை வானத்தில் தூவுவதால், தாழ் நிலை மேகங்கள் உண்டாகும். இதனால் அந்தப் பகுதியில் பகல்நேர வெப்ப நிலை குறையும். அப்படின்னு சொல்றாங்க..

கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால விஞ்ஞானிகள் இப்படிப் பட்ட வெளிப்படையா பேசுவதையே எதிர்த்தாங்க. ஆனால் இப்போது மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் அப்படின்னு பேச ஆரம்பிச்சி இருக்காங்க.

இதற்கு எதிர்ப்புச் சொல்றவங்க சொல்லும் காரணம், நியாயமா புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப் படுத்தாம, நமது தவறுகளுக்கு பொறுப்பேத்துக்காம அவ்வளதான இப்பத்திக்கி ஒரு சின்ன எரிமலையை வெடிச்சிடலாம் அப்புறம் பாத்துக்கலாம் அப்படி என்கிற பொறுப்பில்லாத தன்மையை வளர்த்து விடும் அப்படின்னு பயப்படறாங்க...


(தக்ஸ் வந்து படிச்சிட்டு வெடிங்கடா வெடிங்க.. இன்னும் எத்தனை நாளைக்கு.. 2012 அதா வராட்டியும் நீங்களே தேடிப் போய் எல்லாத்தையும் அழிச்சிடுங்க.. எனப் பின்னூட்டம் இடுவார்)

சிவா.ஜி
02-02-2010, 12:45 PM
அதாவது....காவிரித் தண்ணீருக்கு நிரந்தர தீர்வு காணாம...ஒவ்வொரு வார்டுக்கும், மாண்ய விலையில மினரல் வாட்டர் குடுக்கற மாதிரி. தற்காலிகமா மக்கள் சூடாகாம இருப்பாங்க.

இதுக்கு பதிலா....எல்லா இலவசத்தோட பட்டாசையும் இலவசமா கொடுத்தா...வருஷம் பூரா வெடிச்சி, கந்தகத்தை வெளியேத்திக்கிட்டே இருக்கலாமே...!!

நிஜம்மாவே ரெண்டு இடத்துல என்னையும் மீறி சிரிப்பு வந்துடிச்சி.(அரசியல்வாதிங்களுக்கு சீப்பான கோடிகள், தக்ஸின் பின்னூட்டம்)

கலக்குறீங்க தாமரை.

தாமரை
02-02-2010, 02:11 PM
ஓரு வேளை நாட்டுக்கு நாடு வெடித் திருவிழா கொண்டாடுவது இதுக்குத்தான்னு நினைக்க வச்சிட்டீங்களே...

இந்த வருஷம் மன உறுத்தல் இல்லாம சிவா.ஜி சந்தோஷமா பட்டாசு வெடிப்பாராம். அதுவும் இராக்கெட்டு வகை வெடிகளா வெடிக்கப் போறாராம்..