PDA

View Full Version : லினக்ஸுக்கு மாறலாமா..?



பாரதி
31-01-2010, 02:29 PM
அன்பு நண்பர்களே,

எனக்குள் கடந்த சில வருடங்களாகவே நாம் ஏன் லினக்ஸுக்கு மாறக்கூடாது என்ற எண்ணம் இருந்து வருகிறது. இப்போது விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் பலரும் முறையான உரிமம் பெற்றவர்களா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. ஆரம்பத்தில் சற்று சிரமத்திற்குள்ளானாலும் நீண்ட கால நோக்கில் விண்டோஸில் இருந்து லினக்ஸுக்கு மாறுவது நல்லதாக தோன்றுகிறது.

முழுக்க முழுக்க இலவசமான லினக்ஸ் இயங்குதளம் இப்போது விண்டோஸுக்கு இணையான வசதியை வழங்குவதாக செய்திகள் வருகின்றன. அத்துடன் மைக்ரோசாஃப்ட் ஆபிஸைப் போன்ற ஓபன் ஆபிஸ் முதற்கொண்டு, வரைகலை, ஊடகங்களை பயன்படுத்த தேவையான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக கிடைக்கின்றன. இவற்றை நமது வசதிக்கேற்ப மாற்ற, நண்பர்களுக்கு நகலெடுத்துக் கொடுக்க எந்த தடையும் இல்லை. இலவசமாக தொடர்ந்து இற்றைப்படுத்திக்கொள்ளலாம். லினக்ஸிலும் பயனாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, சோதனை செய்ய, மாற்றங்களை -வழிகளை வழங்க பல குழுமங்களும் செயல்பட்டு வருகின்றன.

நம்மில் சிலரும் லினக்ஸ் உபயோகிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். நாம் ஏன் முழுமையாக லினக்ஸுக்கு மாறக்கூடாது? லினக்ஸில் எந்த முறையிலான இயங்குதளம் பயனாளர்கள் பயன்படுத்த எளிதாக இருக்கிறது என்பதை பகிரலாமா...?

லினக்ஸ் பயன்படுத்துவோரும் பயன்படுத்த விளைவோரும் தங்கள் கருத்துகளைத் தாருங்கள்.

மிக்க நன்றி.

மன்மதன்
31-01-2010, 04:35 PM
நான் ஓப்பன் ஆபிஸ் உபயோகித்து பார்த்தேன்.

2007 வேர்டிலிருந்து ஒரு டாக்குமெண்டை தயாரித்து அதை ஓப்பன் ஆபிஸில் திறந்தால் சில ஃபார்மேட்கள் மாறிவிடுகின்றன. மற்றபடி ஆபிஸில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருக்கிறது.

லினக்ஸ் பற்றி அறிய எனக்கும் ஆவல்.

praveen
01-02-2010, 03:35 AM
லினக்ஸ்-ல் பல பிளேவர்கள் :) இருந்தாலும் நான் அதிகம் நம்புவது விரும்புவது சூசி லினக்ஸ் 11 தான். இதிலே அநேக மென்பொருட்கள் மொத்தமாக உள்ளமைந்து விடுவதால் பிரச்சினை இல்லை. நிறைய வன்பொருட்களுக்குமான டிவைஸ் டிரைவர்களும் இதில் உள்ளன.

நான் எனது வாடிக்கையாளர்கள்/நண்பர்களுக்கு பதிந்து தருவதோடு சரி. நான் எப்போதும் உபயோகிப்பது விண்டோஸ் 2000 தான் (அதற்கு தான் லைசென்ஸ் உள்ளது), மற்றவை எல்லாம் பயன்பாட்டுமுறையை அறிந்து கொள்ள ஒருவாரம் பதிவதோடு சரி.

பாரதி
01-02-2010, 01:25 PM
கருத்துகளுக்கு நன்றி மன்மதன், பிரவீண்.

பிரவீண், சமீபத்தில் சில வலைத்தளங்களில் படித்ததில் உபுண்டு லினக்ஸ் நன்றாக இருக்கிறது என்றும் சில வலைத்தளங்களில் உபுண்டுவை அடிப்படையாக கொண்ட லினக்ஸ்மிண்ட் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கிறது என்றும் படித்தேன்.

அடுத்து வரும் மாதங்களில் லினக்ஸில் சோதனை செய்வதை வழக்கமாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்; பார்க்கலாம்.

rajarajacholan
01-02-2010, 01:37 PM
ஒருமுறை லினக்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன். அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது. ஆனால் பயன்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அமரன்
01-02-2010, 08:13 PM
லினஸ் பற்றிய தமிழ்ப் புத்தகம் நிறுவனர் இராசகுமாரன் அவர்களால் பதிவேற்றப்பட்டுள்ளது.

http://tamilmantram.com/vb/downloads.php?do=file&id=504

இளசு
01-02-2010, 08:35 PM
பாரதி

Thinking outside the box, Thinking ahead -

தலைமைப்பண்புகள் இவை..

உன்னிடம் காண்கிறேன்....
இப்பதிவு ஓர் எடுத்துக்காட்டு..


ப்ரவீண்,

நமக்காக இதை பயன்படுத்தி, பின் கருத்தளியுங்கள்.


அமரா
சுட்டிக்கு நன்றி...


-------------------------------------

சின்ன தம்பி : என்னண்ணே.... லினக்ஸ் பத்தி அப்படியே உங்க கருத்தையும் சொல்லலாமில்ல...:cool:

பெரிய தம்பி : கணினி என்னும் தேங்காயை உருட்டி விளையாடும் நான்......:)
பாரதி, ப்ரவீண் போன்றவர்கள் உடைத்துச் சொன்னால் கேட்டுப் பயனடைவேன்..
அவ்வளவுதான்..

Mano.G.
02-02-2010, 04:08 AM
லினக்ஸ்-ல் பல பிளேவர்கள் :) இருந்தாலும் நான் அதிகம் நம்புவது விரும்புவது சூசி லினக்ஸ் 11 தான். இதிலே அநேக மென்பொருட்கள் மொத்தமாக உள்ளமைந்து விடுவதால் பிரச்சினை இல்லை. நிறைய வன்பொருட்களுக்குமான டிவைஸ் டிரைவர்களும் இதில் உள்ளன.

நான் எனது வாடிக்கையாளர்கள்/நண்பர்களுக்கு பதிந்து தருவதோடு சரி. நான் எப்போதும் உபயோகிப்பது விண்டோஸ் 2000 தான் (அதற்கு தான் லைசென்ஸ் உள்ளது), மற்றவை எல்லாம் பயன்பாட்டுமுறையை அறிந்து கொள்ள ஒருவாரம் பதிவதோடு சரி.

நான் கடந்த 2006ம் ஆண்டு , ஒரே வாரத்தில் மும்முறை வைரஸால் எனது கணனி பாதிக்கபட்டு விண்டோசின் மேல் கோபம் கொண்டு , மாற்று இயங்கு தளம் தேடிய பொழுது கிடைத்தது தான் சூசி லீனக்ஸ் 9.2 வெர்ஸன்.
இதை கணனியில் நிறுவுவதற்கு பொருமை மிக மிக அவசியம். நிறுவிய பிறகு அதன் பயன் பாடு அபாரம். வைரஸ் தொல்லை இல்லை ( இதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ளது) . ஆனால்
கணனியின் வன்பொருட்கள் இதனோடு ஒத்து போக வேண்டும். இப்பொழுது ஏசர் மடிக்கணனிகள் இதற்கு ஏற்றார்போல உற்பத்தி செய்கிரார்கள். தமிழில் இணைய தளங்களை பார்க்கலாம், வாசிக்கலாம்,
ஆனால் தட்டச்சு செய்ய முடியுமா என தெரியவில்லை.

அதோடு லீனக்சை பற்றி தெரிந்தவர்கள் அதிகமில்லை சந்தேகங்களை நிவர்த்தி செய்வது காலதாமதமாகும். செய்த பிறகு இடையூறுகள் இருக்கது.

பொருமை மிக அவசியம்.

மனோ.ஜி

praveen
02-02-2010, 04:40 AM
லினக்ஸ் பற்றி நாம் அதிகம் உபயோகப்படுத்தாதல் அதன் நிறைகுறை தெரிய மாட்டேன்கிறது.

நிறைகள் பலர் பட்டியலிட்டாலும் விண்டோஸோடு ஒத்துப்பார்க்கும் போது தெரியும் குறைகள்.

புது டிவைஸ் டிரைவர்கள் தரும் நிறுவனங்கள் லினக்ஸை பொருட்டாக மதிப்பதில்லை. எனவே டிவைஸ் டிரைவர் தேடி அலைய வேண்டும், அல்லது அப்படியே விட்டு வைத்து விட வேண்டும்.

லினக்ஸ்-ல் வைரஸ் இல்லை/அல்லது குறைவு என்ற கருத்து தவறு. விண்டோஸில் இயங்கும் வைரஸ்கள் லினக்ஸில் எப்படி இயங்கும்?!. ஆனால் லினக்ஸ் ஒ.எஸ் ல் இருந்து அதில் உள்ள வைரஸ் நீக்கி மென்பொருள் மூலம்(லினக்ஸில் வைரஸ் இல்லை என்றால் ஏன் லினக்ஸிற்கான வைரஸ் நீக்கி மென்பொருள் விற்பனை எப்படி நடக்கிறது என்று யோசிக்கவும்) விண்டோஸ் பார்டீசனையும் அதில் உள்ள வைரஸ்களையும் ஒரளவு நீக்கலாம். டாக்டர்வெப் என்ற மென்பொருள் இந்த வேலை செய்ய தகுந்தது.

லினக்ஸ் பாதி பதிக்கும் போது சிடியில்/டிவிடி யில் பிழை என்றால் மொத்தமும் திரும்ப முதல் இருந்து தான், அந்த பைலை ரீட்ரை இக்நோர் செய்து பின்னர் சேர்க்க இயலாது. விண்டோஸில் மிக முக்கியமாக சிஸ்டம் பைல் தவிர மற்றவைகளுக்கு இந்த பிரச்சினை கிடையாது.

லினக்ஸ் பதிந்திருந்து அதில் நாம் உருவாக்கிய பைல்கள் உள்ளே இருக்கும் போது ஏதாவது வண்தட்டு பிரச்சினை வந்தால் அந்த பைல்களை மீட்டெடுப்பது மிகவும் சிரமம் என்றே நினைக்கிறேன். ஆனால் விண்டோஸில் அந்த ஹார்ட் டிஸ்க்கை இன்னொரு கம்ப்யூட்டரில் இனைத்தோ அல்லது பூட்டபிள் விண்டோஸ் ஒ.எஸ் சிடி மூலமாகவோ எடுத்து பத்திரப்படுத்தி விடலாம்

லினக்ஸில் ஏற்படும் பிழைச்செய்தி, வசதிஏற்பாடுகளை செய்வது என்பது லினக்ஸ் படித்தவரிடையே அதுவும் குறிப்பிட்ட அந்த நிறுவன லினக்ஸ் படித்தவரே செய்ய இயலும்.

நானறிந்தவரை மதுரையிலே ஏற்கெனவே விண்டோஸ் வைத்திருப்பவரே கூடுதலாக லினக்ஸ் உபயோகிக்கிறார்களே அன்றி தனியாக இல்லை. சில அரசு நிறுவணங்கள் மற்றும் தொண்டு நிறுவணங்களே முற்றிலும் லினக்ஸ் ஒ.எஸ் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.

தமிழில் தட்டச்சுவது சிரமம் தான் ஆனால் இதற்கு மாற்று வழிகள் சில உள்ளன. எந்த லினக்ஸ் ஒ.எஸ் உபயோகிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் மாற்று வழி சொல்கிறேன்.

பிரபல மென்பொருள்கள் பல லினக்ஸில் தங்கள் வெளியீடுகளை வெளியிடுவது இல்லை. அடோப், டேலி, மற்றும் மைக்ரோசாப்ட் இவைகளின் பதிப்புகள் இல்லவே இல்லை. சிடி பதிவதற்கு பரவலாக அனைவரும் பயன்படுத்தும் நீரோ போனால் போகிறது என்று லினக்ஸிற்கு ஒன்று வெளியிட்டுள்ளது.

முதன்முதலில் லினக்ஸ் பயன்படுத்தியவரை பின்னர் விண்டோஸ்லில் இயக்க அனுமதித்தாலும், முதன் முதலில் விண்டோஸ் பயன்படுத்தியவரை பின்னர் லினக்ஸில் இயக்க அனுமதித்தாலும், இருவருக் கடைசியில் விண்டோஸை தான் நாடுவார்கள் :).

ஆதி
02-02-2010, 06:19 AM
லினக்ஸ் எனக்கு பிடித்தமான இயங்கு தளம் என்பதால் நான் உபண்டு தான் உபயோகிக்கிறேன்.. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விண்டோஸே பிடிக்கும் , காரணம் அது நமக்கு ஏற்ப, நம் மனநிலைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட இயங்கு தளம், விண்டோஸின் வடிவமைப்பில் பெரும்பங்கு இந்தியர்களுடையதே, அதனால் அதனை நம் மனநிலைக்கு ஏற்ப கட்டமைத்தார்கள்..

லினக்ஸின் கர்ணலை முதலில் வடிவமைத்தது linus torvalds, இவர் தனது முதுகலைப் படிப்பிற்கு செய்த புரோஜக்ட் இந்த லினக்ஸ் கர்னல்..
ஒரு கல்லூரி மாணவனின் எழுதிய கர்னல் இன்று உலகையே புரட்டி போட்டிருக்கிறது.. வடிவமைத்த கர்னலை இணையத்தில் வெளியிட்டு யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம், என ஓபன் சோர்ஸ் புரோஜக்டாக லினக்ஸை வெளியிட்டார் லினஸ்.. பல நிறுவணங்கள் அதை எடுத்து இயங்கு தளங்கள் தயாரித்தன, அதில் முதன்மையானது ரெட் ஹட்.. லினஸ் இதில் தான் பணியாற்றுகிறார்..

ஆரம்பகாலங்களில் லினக்ஸ் பயன்பாட்டில் பல தடைக்கற்கள் இருந்தன, பிரவீன் அண்ணா சொல்வது மாதிரி ரிரைவர்ஸ் பிரச்சனை என்று பல.. இப்போது அந்த தடைக்கற்களை எல்லாம் தர்த்தாயிற்று.. மிக சுலபமாய் லினக்ஸ் பயன் படுத்த முடியும்..

மைக்ரோசாப்ட்டே, ஸ்கோ யுனிக்ஸ் எனும் புரோஜக்ட்டை செய்தது, அதவாது விண்டோஸ் இனி கதைக்காவது என்பது மைக்ரோசாப்ட்டுக்கு தெரியும்.. உதாரணம் சொல்கிறேன் எம்.எஸ்.டாஸ் மைக்ரோசாப்ட்டின் தயாரிப்பே அல்ல, அது பி.சி.டாஸின் தயாரிப்பு, மைக்ரோசாப்ட்டு அதை வாங்கி எம்.எஸ்.டாஸ் என்று மாற்றிவிட்டது..

விண்டோஸ் உருவான கதையும் இப்படித்தான், மைக்ரோசாப்ட் சொந்தமாக இதுவரை எதையும் யோசித்தது இல்லை.. மௌஸ் ஆப்பிளின் கண்டு பிடிப்பு, இன்று விண்டோஸில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் மற்ற இயங்குதலத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.. கிராப்பிக்ஸ் முதற்கொண்டு..

லினக்ஸ் இப்போது எளிமையாகிவிட்டது, உபண்டு பயன்படுத்தி பாருங்கள்.. பிறகு டிரைவஸ் பிரச்சனை, விண்டோஸ் டிரைவரையே லினக்ஸில் நிறுவ முடியுமே.. பின்னென்ன டிரைவ பிரச்சனை..

யார் யார் லினக்ஸ், பயன்படுத்துகிறார்கள்.. டிஸ்னி வேல்ட், ராணுவம், யாகூ, கூகுள், அப்பறம் மைக்ரோசாப்ட் ஹி.. ஹி..

சிதிலம் அடைந்த கோப்புக்களை, மீட்பது லினக்ஸிலும் சாத்தியமே.. இன்ஸ்டால் செய்யும் போது பைல் கரப்ஷன் இருந்தால் இன்ஸ்டால் ஆகாது என்பது உண்மையே, மினிமம் இன்ஸ்டால் செய்து கொண்டும் மீண்டும் தேவையானதை இன்ஸ்டால் செய்து கொள்ள லினக்ஸில் வசதி உண்டு...

விண்டோஸில் சிஸ்டம் பைல் கரப்டானால் அதை மீட்பது சத்தியம் என்றாலும், அதற்கான வாய்ப்பு மிக குறைவு, லினக்ஸில் அது மிக எழுதி.. காண்பிகுரேசன் பைல்கள் இன்ஸ்டால் ஆகி இருக்கும் டைரக்டரியை டெலிட் செய்துவிட்ட பிறகு லினக்ஸை சரி செய்யலாம்.. விண்டோஸில் சிஸ்டம்32 பைலை டெலிட் செய்துவிட்டு ரிகவர் செய்ய முடியுமா ?

விண்டோஸை விட லினக்ஸ் சிற*ந்தது என்று சொல்ல நிறைய விசயம் இருக்கு, இன்னும் உங்க சந்தேகங்களையும் குறைகளையும் சொல்லுங்க, எனக்கு தெரிந்த விசயங்களை, பதில்களை சொல்கிறேன்..

பாரதி
02-02-2010, 11:40 AM
ஒருமுறை லினக்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன். அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது. ஆனால் பயன்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது.
நண்பரே, நானும் ஐந்து வருடங்களுக்கு முன்னரே சிலவகை லினக்ஸை நிறுவி சோதித்திருக்கிறேன். அப்போதிருந்த நிலைமை வேறு; இப்போதைய நிலைமை வேறு. இப்போது பயன்படுத்திதான் பார்ப்போமே.. சரியா..?


லினஸ் பற்றிய தமிழ்ப் புத்தகம் நிறுவனர் இராசகுமாரன் அவர்களால் பதிவேற்றப்பட்டுள்ளது.
http://tamilmantram.com/vb/downloads.php?do=file&id=504
சுட்டிக்கு மிக்க நன்றி அமரன்.


பாரதி

Thinking outside the box, Thinking ahead -

தலைமைப்பண்புகள் இவை..

உன்னிடம் காண்கிறேன்....
இப்பதிவு ஓர் எடுத்துக்காட்டு..

ப்ரவீண்,
நமக்காக இதை பயன்படுத்தி, பின் கருத்தளியுங்கள்.
-------------------------------------
சின்ன தம்பி : என்னண்ணே.... லினக்ஸ் பத்தி அப்படியே உங்க கருத்தையும் சொல்லலாமில்ல...:cool:

பெரிய தம்பி : கணினி என்னும் தேங்காயை உருட்டி விளையாடும் நான்......:)
பாரதி, ப்ரவீண் போன்றவர்கள் உடைத்துச் சொன்னால் கேட்டுப் பயனடைவேன்.. அவ்வளவுதான்..

நன்றி அண்ணா.

மன்றம் திஸ்கியில் இயங்கி வந்த போது ஒருங்குறிக்கு மாற வேண்டிய அவசியத்தை வலியுறுத்த நேர்ந்ததையும், ஆரம்பத்தில் சற்றே சிரமத்திற்குள்ளானாலும் மன்றம் இன்றிருக்கும் நல்ல நிலைமைக்கு ஒருங்குறிக்கு மாறியதும் ஒரு காரணம் என்பதையும் நினைவு கூற விரும்புகிறேன்.

பொதுவாகவே லினக்ஸ் என்றால் சிரமம் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதும் ஒரு காரணம். நீங்கள் கேட்டு மட்டுமில்லை, பயன்படுத்தியும் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வாருங்கள் அண்ணா, இணைந்தே கற்போம்.


நான் கடந்த 2006ம் ஆண்டு , ஒரே வாரத்தில் மும்முறை வைரஸால் எனது கணனி பாதிக்கபட்டு விண்டோசின் மேல் கோபம் கொண்டு , மாற்று இயங்கு தளம் தேடிய பொழுது கிடைத்தது தான் சூசி லீனக்ஸ் 9.2 வெர்ஸன்.
இதை கணனியில் நிறுவுவதற்கு பொறுமை மிக மிக அவசியம். நிறுவிய பிறகு அதன் பயன்பாடு அபாரம். வைரஸ் தொல்லை இல்லை ( இதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ளது) . ஆனால்
கணனியின் வன்பொருட்கள் இதனோடு ஒத்து போக வேண்டும். இப்பொழுது ஏசர் மடிக்கணனிகள் இதற்கு ஏற்றாற்போல உற்பத்தி செய்கிறார்கள். தமிழில் இணைய தளங்களை பார்க்கலாம், வாசிக்கலாம்,
ஆனால் தட்டச்சு செய்ய முடியுமா என தெரியவில்லை.

அதோடு லினக்சை பற்றித் தெரிந்தவர்கள் அதிகமில்லை. சந்தேகங்களை நிவர்த்தி செய்வது காலதாமதமாகும். செய்த பிறகு இடையூறுகள் இருக்காது.

பொறுமை மிக அவசியம்.

மனோ.ஜி

அண்ணா... அந்த சமயத்தில் நீங்களும் மன்றத்தில் தமிழ் தட்டச்சு, எழுத்துரு குறித்து உதவி கேட்டதும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. அன்றிருந்த நிலைமையை விட இன்று லினக்ஸ் மிக நல்ல நிலையை அடைந்திருக்கிறது.

தமிழில் தட்டச்ச, எழுத்துருக்களை நிறுவ வழிகள் இருக்கின்றன! அதையெல்லாம் அறிந்த பின்னரே இத்திரியை துவக்கினேன் அண்ணா.

சிறந்ததை அடைய சற்று பொறுமையுடன் கற்பதில் சிரமம் இல்லைதானே அண்ணா? அனைவரும் இணைந்து கற்போம், வரும் இன்னல்களை களைவோம் அண்ணா.


லினக்ஸ் பற்றி நாம் அதிகம் உபயோகப்படுத்தாததால் அதன் நிறைகுறை தெரிய மாட்டேன்கிறது.

நிறைகள் பலர் பட்டியலிட்டாலும் விண்டோஸோடு ஒத்துப்பார்க்கும் போது தெரியும் குறைகள்.

புது டிவைஸ் டிரைவர்கள் தரும் நிறுவனங்கள் லினக்ஸை பொருட்டாக மதிப்பதில்லை. எனவே டிவைஸ் டிரைவர் தேடி அலைய வேண்டும், அல்லது அப்படியே விட்டு வைத்து விட வேண்டும்.

லினக்ஸ்-ல் வைரஸ் இல்லை/அல்லது குறைவு என்ற கருத்து தவறு. விண்டோஸில் இயங்கும் வைரஸ்கள் லினக்ஸில் எப்படி இயங்கும்?!. ஆனால் லினக்ஸ் ஒ.எஸ் ல் இருந்து அதில் உள்ள வைரஸ் நீக்கி மென்பொருள் மூலம்(லினக்ஸில் வைரஸ் இல்லை என்றால் ஏன் லினக்ஸிற்கான வைரஸ் நீக்கி மென்பொருள் விற்பனை எப்படி நடக்கிறது என்று யோசிக்கவும்) விண்டோஸ் பார்டீசனையும் அதில் உள்ள வைரஸ்களையும் ஒரளவு நீக்கலாம். டாக்டர்வெப் என்ற மென்பொருள் இந்த வேலை செய்ய தகுந்தது.

லினக்ஸ் பாதி பதிக்கும் போது சிடியில்/டிவிடி யில் பிழை என்றால் மொத்தமும் திரும்ப முதல் இருந்து தான், அந்த பைலை ரீட்ரை இக்நோர் செய்து பின்னர் சேர்க்க இயலாது. விண்டோஸில் மிக முக்கியமாக சிஸ்டம் பைல் தவிர மற்றவைகளுக்கு இந்த பிரச்சினை கிடையாது.

லினக்ஸ் பதிந்திருந்து அதில் நாம் உருவாக்கிய பைல்கள் உள்ளே இருக்கும் போது ஏதாவது வன்தட்டு பிரச்சினை வந்தால் அந்த பைல்களை மீட்டெடுப்பது மிகவும் சிரமம் என்றே நினைக்கிறேன். ஆனால் விண்டோஸில் அந்த ஹார்ட் டிஸ்க்கை இன்னொரு கம்ப்யூட்டரில் இனைத்தோ அல்லது பூட்டபிள் விண்டோஸ் ஒ.எஸ் சிடி மூலமாகவோ எடுத்து பத்திரப்படுத்தி விடலாம்

லினக்ஸில் ஏற்படும் பிழைச்செய்தி, வசதி ஏற்பாடுகளை செய்வது என்பது லினக்ஸ் படித்தவரிடையே அதுவும் குறிப்பிட்ட அந்த நிறுவன லினக்ஸ் படித்தவரே செய்ய இயலும்.

நானறிந்தவரை மதுரையிலே ஏற்கெனவே விண்டோஸ் வைத்திருப்பவரே கூடுதலாக லினக்ஸ் உபயோகிக்கிறார்களே அன்றி தனியாக இல்லை. சில அரசு நிறுவணங்கள் மற்றும் தொண்டு நிறுவணங்களே முற்றிலும் லினக்ஸ் ஒ.எஸ் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.

தமிழில் தட்டச்சுவது சிரமம்தான் ஆனால் இதற்கு மாற்று வழிகள் சில உள்ளன. எந்த லினக்ஸ் ஒ.எஸ் உபயோகிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் மாற்றுவழி சொல்கிறேன்.

பிரபல மென்பொருள்கள் பல லினக்ஸில் தங்கள் வெளியீடுகளை வெளியிடுவது இல்லை. அடோப், டேலி, மற்றும் மைக்ரோசாப்ட் இவைகளின் பதிப்புகள் இல்லவே இல்லை. சிடி பதிவதற்கு பரவலாக அனைவரும் பயன்படுத்தும் நீரோ போனால் போகிறது என்று லினக்ஸிற்கு ஒன்று வெளியிட்டுள்ளது.

முதன்முதலில் லினக்ஸ் பயன்படுத்தியவரை பின்னர் விண்டோஸில் இயக்க அனுமதித்தாலும், முதன் முதலில் விண்டோஸ் பயன்படுத்தியவரை பின்னர் லினக்ஸில் இயக்க அனுமதித்தாலும், இருவரும் கடைசியில் விண்டோஸைதான் நாடுவார்கள் :).

கருத்துக்கு நன்றி பிரவீண்.

நீங்கள் கூறியது போல நாம் லினக்ஸை அறியாததால்தான் பயப்படுகிறோம். எனவே நாம் அனைவரும் லினக்ஸை ஏன் கற்கக்கூடாது? விண்டோஸை கற்றது போல கொஞ்சம் கொஞ்சமாக லினக்ஸை கற்போம். நிறைகளையும், குறைகளையும் சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து அலசிப்பார்ப்போம். நீங்களும் உடன் வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

பிரபல நிறுவனங்கள் தங்களது வெளியீடுகளை லினக்ஸில் வெளியிடுவதில்லை என்பது உண்மைதான். காரணம் லாபநோக்கோடு மட்டுமே இயங்கும் நிறுவனங்கள் லினக்ஸில் தரவேண்டுமானால் இலவசமாக தரவேண்டியதிருக்குமே! ஆனாலும் பிரபல நிறுவனங்களின் வெளியீடுகளுக்கு இணையான மென்பொருட்கள் லினக்ஸில் இருக்கின்றன என்பதையும் நாம் மறக்கலாகாது.

லினக்ஸில் என்னதான் இருக்கிறது என்பதை சற்று ஆழமாக அலச, அதை நிறுவி நம்முள் ஐய்யங்களை வினவி, தீர்வை காண முயற்சிப்போம்.


லினக்ஸ் எனக்கு பிடித்தமான இயங்கு தளம் என்பதால் நான் உபண்டுதான் உபயோகிக்கிறேன்.. ..

லினக்ஸின் கர்னலை முதலில் வடிவமைத்தது linus torvalds, இவர் தனது முதுகலைப் படிப்பிற்கு செய்த புரோஜக்ட் இந்த லினக்ஸ் கர்னல்..
ஒரு கல்லூரி மாணவனின் எழுதிய கர்னல் இன்று உலகையே புரட்டி போட்டிருக்கிறது. வடிவமைத்த கர்னலை இணையத்தில் வெளியிட்டு யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம், என ஓபன் சோர்ஸ் புரோஜக்டாக லினக்ஸை வெளியிட்டார் லினஸ்.. பல நிறுவனங்கள் அதை எடுத்து இயங்கு தளங்கள் தயாரித்தன, அதில் முதன்மையானது ரெட் ஹட்.. லினஸ் இதில் தான் பணியாற்றுகிறார்..

ஆரம்பகாலங்களில் லினக்ஸ் பயன்பாட்டில் பல தடைக்கற்கள் இருந்தன, பிரவீன் அண்ணா சொல்வது மாதிரி டிரைவர்ஸ் பிரச்சனை என்று பல.. இப்போது அந்த தடைக்கற்களை எல்லாம் தர்த்தாயிற்று.. மிக சுலபமாய் லினக்ஸ் பயன் படுத்த முடியும்..

லினக்ஸ் இப்போது எளிமையாகிவிட்டது, உபண்டு பயன்படுத்தி பாருங்கள்.. பிறகு டிரைவஸ் பிரச்சனை, விண்டோஸ் டிரைவரையே லினக்ஸில் நிறுவ முடியுமே.. பின்னென்ன டிரைவ பிரச்சனை..

சிதிலம் அடைந்த கோப்புக்களை, மீட்பது லினக்ஸிலும் சாத்தியமே.. இன்ஸ்டால் செய்யும் போது பைல் கரப்ஷன் இருந்தால் இன்ஸ்டால் ஆகாது என்பது உண்மையே, மினிமம் இன்ஸ்டால் செய்து கொண்டும் மீண்டும் தேவையானதை இன்ஸ்டால் செய்து கொள்ள லினக்ஸில் வசதி உண்டு...

விண்டோஸில் சிஸ்டம் பைல் கரப்டானால் அதை மீட்பது சத்தியம் என்றாலும், அதற்கான வாய்ப்பு மிக குறைவு, லினக்ஸில் அது மிக எழுதி.. காண்பிகுரேசன் பைல்கள் இன்ஸ்டால் ஆகி இருக்கும் டைரக்டரியை டெலிட் செய்துவிட்ட பிறகு லினக்ஸை சரி செய்யலாம்.. விண்டோஸில் சிஸ்டம்32 பைலை டெலிட் செய்துவிட்டு ரிகவர் செய்ய முடியுமா ?

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது என்று சொல்ல நிறைய விசயம் இருக்கு, இன்னும் உங்க சந்தேகங்களையும் குறைகளையும் சொல்லுங்க, எனக்கு தெரிந்த விசயங்களை, பதில்களை சொல்கிறேன்..

நீண்ட கருத்திற்கு நன்றி ஆதன்.

உங்களைப் போன்ற லினக்ஸ் பயனாளர்களின் உதவியுடன் எளிதாக தடைகளைத் தாண்டி கற்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

இந்தத்திரி நாம் லினக்ஸை கற்க வேண்டிய அவசியம், அதில் இருக்கும் நல்ல பயன்பாடுகள் போன்றவற்றை மன்ற உறவுகளிடையே கொண்டு செல்லட்டும்.

உபுண்டு, லினக்ஸ் மிண்ட் இரண்டில் பயன்பாட்டிற்கு எது சிறந்தது, எது பயனாளர்களுக்கு எளிதானது என கூறுங்களேன்.
படிப்படியாக லினக்ஸை கற்போமே. சரிதானே..?

வியாசன்
02-02-2010, 09:19 PM
ஆகா என்னுடைய நீண்டநாள் ஆசையைi தீர்த்துவைக்க நண்பர் பாரதி இந்த பகுதியை தொடங்கியுள்ளார் போலும்
நன்றிகள். லினக்சை கணனியில் பதிவு செய்துவிட்டு ஒன்றும் புரியாததால் அழித்துவிட்Nடுன். உபுண்டு பதிவு செய்தேன் டிரைவர் பிரச்சனை வரிவல்லை. ஆனால் தமிழில் எழுதமுடியாமையால் தான் அதை அகற்றினேன். அதற்கு வல்லுனர்கள் வழிசென்னால் இன்னொரு கணனியில் லினக்சை உடனடியாக பதிவு செய்துகொண்டு உங்களுடன் கற்பதற்கு நானும் தயார்.

ஆதி
03-02-2010, 06:35 AM
உபண்டுக்கும், லினக்ஸ் மிண்ட்கும் வித்யாசம் என்று எதுவுமில்லை அல்ல..

The Administration and Preferences menus contain a few options not installed by default in Ubuntu:

MintAssistant – allows the user to set a root password and specify whether or not quotations appear in the Terminal window
MintBackup – backs up the home directory to a single file
MintDesktop (under Preferences) – allows the user to select desktop icons, specify the Nautilus mode and determine whether or not to show splash screens for major applications
MintInstall – described in detail below
MintNanny – provides for child protection by blocking specified domains from the Web browser
MintUpdate – the update system as described above

Backup and ‘Nanny’ applications are of course available for Ubuntu outside the default installation package.

மிண்ட்டிலில் சில மென்பொருட்கள் இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்யும் போதே இன்ஸ்டால் ஆகிவிடும், உபண்டுவில் அவற்றை இன்ஸ்டால் செய்த பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்..

என்னை பொருத்தமட்டில் தானாக இன்ஸ்டால் ஆவதைவிட நாமே கஸ்டமைஸிங் செய்தால் இன்னும் திருப்தியாக இருக்கும், நம் இயங்கு தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று கொஞ்சம் தைரியம் கூடும்..

லினக்ஸுடன் software firewall வரிவதால் நம் சிஸ்டத்தை இன்னும் கொஞ்சம் பாதுகாக்க முடியும்.. மற்றும் Selinux மென்பொருளை பயன்படுத்தி, அட்மினுக்கே சில கட்டுப்பாடுகளை விதிக்க இயலும், இதனால் நம் சிஸ்டத்தை யாராவது ஹக் செய்துவிட்டாலும் கூட, அவர்களால் முழு அனுமதியுடன் இயங்க முடியாது..

இயங்குதளத்தின் பாதுக்காப்பை எப்படி கூட்டுவது, ஹக்கர்களுக்கு நம் இயங்கு தளத்தை எப்படி சவால் நிறைந்ததாக மாற்றுவது என்று எல்லாம் இதில் பொறுமையாக கற்களாம்..

லினக்ஸை நிறுவிவிட்டு இன்னும் உங்கள் சந்தேகங்கள் கேள்விகளை கேளுங்கள் பதில் சொல்கிறேன்..

என் மெயில் ஐடி கூட லினக்ஸ்தாஸ்ன் என்றுதான் வைத்திருக்கேன், அந்த அளவுக்கு லினக்ஸ் எனக்கு பிடிக்கும்..

praveen
03-02-2010, 08:07 AM
தமிழில் இணைய தளங்களை பார்க்கலாம், வாசிக்கலாம்,
ஆனால் தட்டச்சு செய்ய முடியுமா என தெரியவில்லை.



ஆனால் தமிழில் எழுதமுடியாமையால் தான் அதை அகற்றினேன். அதற்கு வல்லுனர்கள் வழிசென்னால் இன்னொரு கணனியில் லினக்சை உடனடியாக பதிவு செய்துகொண்டு உங்களுடன் கற்பதற்கு நானும் தயார்.

1) லினக்ஸிற்கான பயர்பாக்ஸை கீழே கண்ட சுட்டியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த சுட்டியின் கடைசியிலே தமிழ் இடைமுகத்துடன் இருக்கும் லினக்ஸ்கிற்கானதை கூட பதிவிறக்கிஉபயோகிக்கலாம்.

http://www.mozilla.com/en-US/firefox/all.html

1.1) எப்படி அதனை லினக்ஸில் பதிவது என்பது பற்றிய விளக்கம் பெற இங்கே செல்லுங்கள்.
http://support.mozilla.com/ta/kb/Installing+Firefox+on+Linux

1.2) உபண்டு பயன்பாட்டாளர்கள் இந்த லிங்க் சென்றால் இன்னும் உபயோகரமான தகவல் கிடைக்கப்பெறலாம்.
http://ubuntuforums.org/showthread.php?t=577119


2) முன்னரே பயர்பாக்ஸ் லினக்ஸில் வைத்திருப்பவர் கீழே கண்ட பக்கம் சென்று தமிழ்விசை என்ற பயர்பாக்ஸிற்கான நீட்சியை பதிவதன் மூலம் லினக்ஸ் தட்டச்சு செய்ய இயலும்.


நான் லினக்ஸ் பயன்பாட்டாளர் இல்லை என்பதால் மேலே கண்ட சுட்டி மட்டுமே தர இயலும், பயன்படுத்துகையில் ஏற்படும் சந்தேகம் பிழை\ இருந்தால் இங்கே பதியுங்கள், ஆதன் அவர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க கூடும்.

விரைவில் லினக்ஸ் சம்பந்தமாக அதிக திரிகள் தோன்றினால், அறிஞர் அவர்களை தனி உபபாரம் தொடங்க வைத்து, அதில் லினக்ஸில் உள்ள பல்வேறு பதிப்புகள் மற்றும் அப்ளிகேசன்கள் பற்றி பதிந்து ஒப்பன் சோர்ஸ் மென்பொருளை எல்லலரும் கைகொள்வோமாக.

இதற்கு நம் மன்றத்தவர்களிடம் விருப்பம் + ஆர்வம் இருக்க வேண்டும்.

வியாசன்
03-02-2010, 08:13 AM
நன்றி பிரவீன் உங்கள் தகவல்களுக்கு நானும் இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்

http://technosrix.blogspot.com/2009/04/how-to-type-in-tamil-using-linux_9646.html

பாரதி
03-02-2010, 12:50 PM
அருமையான விளக்கத்திற்கு நன்றி ஆதன். தொடர்ந்து உங்களின் உதவி தேவைப்படும்.

லினக்ஸில் தமிழ் தட்டச்சு குறித்த உங்களின் சுட்டிகள் இங்கே லினக்ஸ் கற்க விரும்புவோரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐய்யமில்லை. மிக்க நன்றி பிரவீண்.

பார்த்தீர்களா வியாசன்! தேடினீர்கள் கிடைத்து விட்டதல்லவா...? இனி என்ன தடை லினக்ஸை கற்க..? சுட்டிக்கு நன்றி.

விண்டோஸில் ஒரே ஒரு டெஸ்க்டாப் மட்டுமே இருக்கும்; அதில் பின்னணிப்படங்களை மட்டுமே நாம் மாற்றிக்கொள்ளலாம்; அவ்வாறன்றி லினக்ஸில் நாம் நிறுவி இருக்கும் வகையைப்பொறுத்து சில வகை டெஸ்க்டாப் வகைகளை நாம் அமைத்துக்கொள்ளலாம்! பிடிக்கவில்லையெனில் வேறு வகைக்கு மாற்றிக்கொள்ளலாம். நாம் வைத்திருக்கும் டெஸ்க்டாப் என்விரான்மெண்டைப் பொறுத்து (உதாரணமாக KDE, GNOME, XFCE போன்றவை)தமிழ் தட்டச்சு நிரல்களை அமைத்துக்கொள்ளலாம்.

லினக்ஸை நிறுவிய பின்னர் இதைக்குறித்து நாம் பார்ப்போம். உதவ ஆதன், பிரவீண் ஆகியோர் இருக்கிறார்கள். நண்பர் மயூரன் அவர்களும் தமிழ்தட்டச்சு குறித்து மிகவும் முன்பே வலையுலகிற்கு உதவி இருக்கிறார்.

எந்த வகை லினக்ஸை நிறுவலாம் என்பதை இறுதி செய்தால், அதை மட்டுமே நாம் அனைவரும் நிறுவலாம். வரும் இடர்களை எதிர்கொள்ளலாம். லினக்ஸ்மிண்ட் பயன்பாட்டிற்கு எளிதானது; உபுண்டுவில் ஒவ்வொன்றாக நாம் நிறுவ வேண்டியதிருக்கும். எனவே எதை இறுதி செய்யலாம் என்பதை சிந்திப்போம்.

பாரதி
05-02-2010, 01:21 PM
நண்பர் ஆதனின் வழிகாட்டுதல்படி உபுண்டுவை நிறுவலாம் என்றாலும், புதிய பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக லினக்ஸ்மிண்ட் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. கடைசியாக வெளிவந்த உபுண்டு அல்லது லினக்ஸ்மிண்டை பதிவிறக்கி நிறுவலாமா நண்பர்களே? நிறுவுவோம், கற்போம், ஐயம் தீர்வோம்.

வியாசன்
05-02-2010, 09:27 PM
நன்றி பாரதி இதில் சில தரவுகள் இருக்கின்றது நீங்களும் பாருங்கள்

http://distrowatch.com/

செல்வா
06-02-2010, 08:30 AM
http://apcmag.com/how_to_dual_boot_windows_xp_and_linux_xp_installed_first.htm

இங்கே லினக்ஸ் எப்படி நிறுவுவது என்ற விளக்கம் இருக்கிறது.

praveen
07-02-2010, 07:29 AM
லினக்ஸ் மின்ட் க்கு மாறிய பின் இந்த தட்டச்சை நம் தளத்தில் ஒருங்கிணைந்த கூகிள் தட்டச்சு முலம் செய்கிறேன். நான் முழுமையாக பதிக்காமல் லைவ் சிடி போல கம்ப்யுட்டரில் பூட் செய்தே இந்த லினக்ஸ் மின்ட்-ல் உள்ள பயர்பாக்ஸ் உலவியினால் தளம் வந்திருக்கிறேன்.

இன்னும் பார்த்து பின் பதிக்கிறேன் , நன்றி பாரதி அண்ணா .

பின்னர் விண்டோஸ்-ல் வந்து பதிந்தது :)

அந்த பதிவிறக்க சிடி வேண்டுவோர் கீழே உள்ள சுட்டியை அழுத்தினால் போதும்.

http://ftp.heanet.ie/pub/linuxmint.com/stable/8/LinuxMint-8.iso

முழுதும் பதிக்காமல், அந்த சீடியை பூட் செய்தும் லினக்ஸ் மிண்ட்ல் உலா வரலாம்.

பாரதி
07-02-2010, 12:35 PM
சுட்டிகளுக்கு நன்றி வியாசன், செல்வா.

நல்ல சேதிக்கு நன்றி பிரவீண். தொடர்ந்து சோதனை செய்யுங்கள்.
என்னால் பணி இடத்தில் எதுவும் செய்ய இயலாது. தாயகம் சென்ற பின்னர் நானும் லினக்ஸ்மிண்டை நிறுவுவேன். உங்கள் சோதனையில் நானும் பங்கெடுத்துக்கொள்வேன்.

உபுண்டுவுக்கு தேவையான பல விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருக்கிறேன். லினக்ஸ் நிறுவிய பின்னர் நடைமுறையில் பார்த்து விட்டு அறியத்தருகிறேன்.

லினக்ஸ் நிச்சயமாக இணைய உலாவுதலுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

sekar98425
07-02-2010, 05:35 PM
நண்பர்களுக்கு வணக்கம். நான் செல் சர்விஸ் செய்து வருகின்றேன் .என்னுடைய எல்லா hardware டிரைவரும் விண்டோஸ் ல் இயங்குமாறு உள்ளது அதனை லினிக்ஸ் ல் பயன்படுத்துவது எப்படி அல்லது.exe file run பண்ணுவது எப்படி என்று அறிஞர்கள் விளைக்கினால் நன்றாக இருக்கும்

praveen
08-02-2010, 12:04 PM
முதலில் தயங்கி தயங்கி உபயோகிப்பவர்கள் கீழே உள்ள தளம் சென்று பப்பி லினக்ஸை பதிவிறக்கி ஒரு சிடியில் பதிந்து பின் அதன் மூலம் பூட் செய்து இயக்கி பார்க்கலாம்.

இந்த பப்பிலினக்ஸில் என்ன விசேசம் என்றால் கம்ப்யூட்டரில் பதிந்து பின் இயக்க வேண்டியதில்லை, சிடியிலே நேரடியாக ஓடவிட்டு உபயோகப்படுத்தலாம். பிடித்திருந்தால் பதிந்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் 100 எம்பி அளவில் இருந்து 200 எம்பி அளவிற்குள்ளே (பப்பி லினக்ஸிற்குள் நிறைய வகைகள் உள்ளன). எனவே இவை நேரடியாக உங்கள் கம்ப்யூட்டர் ராமிலே (தற்போது 512க்கு குறைவில்லாத ராம் எல்லோரும் கொண்டிருப்பதால்) இயங்குவதால் லோடகும் நேரம் மட்டுமே 1 நிமிடம் சிடி ஒடும். பின்னர் அந்த சிடியையும் எடுத்து விட்டு இயங்கும் போதே வேறு சிடி போட்டுக்கொள்ளலாம். நல்ல வேகம் இருக்கும்.

பார்த்துட்டு பதில் போடுங்கள்.

http://puppylinux.org/news/

இதில் பாருங்கள் ஒரு லினக்ஸ் விண்டோஸ் போலவே தோற்றம் மற்றும் விண்டோஸில் இயங்கும் பைல்களை இதில் (அவ்வளவுமில்லை சில) இயக்க வைன் என்ற மென்பொருளையும் ஒருங்கினைத்திருக்கிறார்கள். பாருங்கள் அதன் டெஸ்க்டாப்பை.

http://skami.homelinux.org/images/rsgallery/display/xp-like01.jpg.jpg

ஆதி
08-02-2010, 12:12 PM
knoppix, ubuntu கூட இது போல் குறுவட்டில் இருந்தே வேலைசெய்யும்..

ஆனால் லினக்ஸை நிறுவி சோதிப்பது போல் இருக்காது..

விண்டோஸை நீக்க மனமில்லாதவர்கள்..

விஎம்வேர் மென்பொருளை உங்களின் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.. விஎம்வேரில் மற்ற இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.. ஒரு நேரத்தில் நீங்கள் இரு இயங்கு தளத்தையும் இயக்க முடியும், உங்கள் கணினி இரண்டு கணினி போல் வேலை செய்யும்..

இதனால் என்ன உண்டாகிற பயன், லினக்ஸை நீங்கள் சோதித்து பார்க்கும் போது, விண்டோஸின் அதற்கான டாக்கு மெண்டை வைத்து கொள்ளலாம், லினக்ஸ் பரிட்சயம் ஆகும் வரை நீங்கள் விண்டோஸ் வழியாகவே இணையத்தில் உலவலாம்.. விண்டோஸில் உங்க கோப்புக்களை நீக்க வேண்டிய அவசியமில்லை.. முழுமையாக லினக்ஸ் கற்ற பிறகு, தங்களின் கணினியில் லினக்ஸை நிறுவி, விண்டோஸில் உள்ள உங்கள் கோப்புக்களையும் லினக்ஸுக்கு நகர்த்திக் கொள்ளலாம்..

பாரதி
08-02-2010, 01:05 PM
லினக்ஸ் என்றால் என்ன என்பதை கண்ணுற விரும்புபவர்கள் பிரவீண் கூறியபடி செய்து பார்க்கலாம்.

லினக்ஸில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் பல பதிப்புகள் வந்திருக்கின்றன. எனவே பொதுவாக லினக்ஸ் என்று தேடிப்பார்ப்பவர்களுக்கு, எந்த வகை லினக்ஸ் நல்லது என்ற குழப்பம் ஏற்படக்கூடும். லினக்ஸ் நன்கு தெரிந்தவர்களுக்கு வேண்டுமென்றால் அந்த குழப்பத்திற்கு விடை தெரியலாம்.

எனவே எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், லினக்ஸ் கற்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான லினக்ஸை கற்பதன் மூலம், நம்மிடையே வரும் ஐயங்களை தீர்ப்பது எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

நிறுவுவதை ஆதன் கூறிய வழிமுறையில் செய்வது பலருக்கும் லினக்ஸ் ஓரளவுக்கு தெரியும் வரை கற்க உதவியாக இருக்கும்.

நன்றி பிரவீண்; நன்றி ஆதன்.

வியாசன்
08-02-2010, 01:13 PM
நன்றிகள் பிரவீன் ஆதன் பாரதி. அநேகமாக எல்லா லினக்சிலும் சீடியில் இருந்து இயங்கும் வசதி இருக்கின்றதுபொல் தெரிகின்றது. நான் தரவிறக்கம் செய்துவிட்டேன். அதில் பல மென்பொருட்கள் உள்ளதாக தெரிகின்றது. மல்டிமீடியாவசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னமும் பதிவு செய்வில்லை. நாளை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளேன்.

அதன்பிறகு கஷ்ட நஷ்ட்டங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பல கைகள் தட்டினால் ஓசை பெரிதாகும்.

ஆதி
08-02-2010, 02:17 PM
என்ன லினக்ஸ் தரவிறகம் செய்திருக்குறீர்கள் வியாசன் ?

partitioning போது Auto partition, user defined partition(Manual defined) என்று இரு option வரும் user defined(Manual Partition)**யை தேர்வு செய்யவும்..

/boot ------> 100MB

/ -----------> 10GB

swap --------> Double size of Ram

என்று மூன்று பார்டிசன்கள் செய்யுது கொள்ள்வும்....

/boot for boot files

/ ------> root of the file system tree..

swap for swap files (virtual Memory)

/ ************** இது பற்றி இன்னும் தெளிவான ஒரு விளக்கம் தருகிறேன்........

ஆதி
08-02-2010, 02:59 PM
ஒவ்வொரு இயங்கு தளத்துக்கு தனித்தனி file system structure உண்டு..

உதாரணமாக விண்டோஸ்க்கு..

A-z drive

A & B drive---> floppy drive

c drive ------> பெரும்பாலும் இயங்குதளம் நிறுவும் டிரைவ்

கடைசி டிரைவ் சீடி அல்லது டீவீடியாக இருக்கும்..

லினக்ஸை பொருத்தவரை எல்லாமே file*-கள் தான்..

உதாரணமாக keyboard, Mouse எல்லாம் character files

CD, DVD, Hard Drive எல்லம் Block files

இது போல் ஒவ்வொரு பார்டிச*னையும் யுனிக்ஸ் ஒரு பைலாகவே கருதும்...

/ இதுதான் பார்டிசன்களின் வேர், இந்த வேரின் கீழ்தான் மற்ற பார்டிசன்கள் எல்லாம் வரும்...

இந்த வேரின் கீழ் மற்ற பார்டிசன்கள் எல்லாம் வருவதால், எல்லா பார்டிசன்களின் பெயரும் /ஐ முதலாக கொண்டே வரும்..

உதார்னமாக...

/boot, /bin,/etc,/dev,/sbin,/lib,/usr,/opt,mnt,/var,/root,/home,/proc,/tmp

மற்ற பைல் சிஸ்டம் பற்றி விளக்கும் முன், / மற்றும் /root பற்றி மட்டும் சொல்லிடுறேன்.. இதன் வேறுபாடுகள் மிக முக்கியமான ஒன்று...

விண்டோஸில் administrator மாதிரி யுனிக்ஸில் root

root யூசர் தான் யுனிக்ஸில் அட்மின்..

/root அட்மின் யூசரின் ஹோம் டெரக்ட்ரி

அதாவது யுனிக்ஸில் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனி ஹோம் டெரக்ட்ரி உண்டு..

தொடரும்...

வியாசன்
08-02-2010, 04:30 PM
நன்றி ஆதன் நான் Suse linux 11 தரவிறக்கியுள்ளேன் அதனுடைய அளவு 4.4 GB தனியாக ஒரு கணனியில் நிறுவ போகின்றேன். ஒரு வசதி விரும்பிய மொழியில் கணனியில் பதிவு செய்ய முடியும். இதில் தமிழில் பதிவு செய்ய முடியாது போல் இருக்கின்றது. ரெட்காட் லினக்சில் தமிழில் பதிவு செய்ய முடியும்.

பாரதி
10-02-2010, 01:40 PM
நல்ல விளக்கத்திற்கு நன்றி ஆதன். தொடர்ந்து தாருங்கள்.

அன்பு வியாசன், உங்களுக்கு சிரமம் இல்லை என்றால் ஒரு வேண்டுகோள்; மன்றத்தில் லினக்ஸ் கற்க விரும்பும் அனைவரும் உபுண்டு அல்லது லினக்ஸ்மிண்ட்டை நிறுவுவது கற்கும் ஏற்படும் ஐயங்களை தீர்க்க உதவியாக இருக்கும் என்பதால் நீங்களும் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா..? நன்றி.

உபுண்டுவிலும் தமிழில் தட்டச்ச வசதிகள் இருக்கின்ற வியாசன்.

வியாசன்
11-02-2010, 09:33 AM
நன்றி பாரதி


http://img697.imageshack.us/img697/4706/snapshot1to.png (http://img697.imageshack.us/i/snapshot1to.png/)

வியாசன்
12-02-2010, 03:52 PM
நன்றி பாரதி நான் இணைத்துள்ள படம் SUSE லினக்ஸ் பதிவுசெய்தபோது இணையங்களை பார்வையிட முடியவில்லை. பலதேடல்களின் பின் படத்தில் தெரிகின்றபடி வந்தது. உங்கள் பதிவை பார்த்ததும் உபுண்டுவுக்கு மாறிவிட்டேன். ஆனால் தமிழை தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. பாமுனிக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுஉள்ளது. தட்டச்சு பலகை அமைப்புவேறு இந்தியா அதனால் நிறைய சிரமமாக உள்ளது. நான் தயாரித்துள்ள ஒரு எழுத்துருவாக்கி சுட்டியை பயன்படுத்திதான் இப்போது எழுதுகின்றேன்.

நீங்களும் லினக்சை பதிவு செய்துவிட்டு கற்றுக்கொடுங்கள் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

பாரதி
14-02-2010, 01:00 PM
உங்களின் தேடலுக்கும் விடாமுயற்சிக்கும் மிக்க நன்றி வியாசன். உபுண்டு 9.10 லினக்ஸைத்தானே நிறுவி இருக்கிறீர்கள்..? நானும் விரைவில் அதைப் பதிவிறக்கி நிறுவி விடுவேன். நாம் அனைவரும் இணைந்தே கற்போம். லினக்ஸ் நிறுவுதலின் போது நீங்கள் பிரச்சினை ஏதேனும் எதிர்கொண்டீர்கள் எனில் அறியத்தாருங்கள்.

வியாசன்
14-02-2010, 02:21 PM
பாரதி எந்தவித பிரச்சனையும் எழவில்லை. தானாகவே எல்லாவற்றையும் (பார்ட்டிசன்)செய்து கொள்கிறது. டிரைவர்களையும் தானாகவே கண்டுபிடித்துகொள்கின்றது. எக்ஸ்பீ என்றால் மதர்போர்ட்டில் உள்ளவற்றுக்கு நாமாக டிரைவர் பதிவு செய்ய வேண்டும் .உபுண்டு 9.10 ல் பதிவு செய்வதில் பிரச்சனை எழவில்லை. எம்முடைய கணனிதிரையை படமாக பதிவு செய்ய வேண்டுமென்றால் Print Key அழுத்தினால் படமாக பதிவு செய்து கொள்கின்றது. புரியாமல் இருப்பதனால் லினக்ஸ் புதிராக இருக்கின்றது. கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்ல இயங்குதளமாக எமக்கிருக்கும் என நம்புகின்றேன்.எக்ஸ்பீயுடன் இணைந்து இயங்குகின்றது ஒரே கணனியில்.

பாரதி
19-02-2010, 07:19 AM
ஒரு வழியாக நேற்றிரவு உபுண்டுவை பதிவிறக்கினேன். இன்று சோதனைக்காக பழைய தோஷிபா 14" மடிக்கணினியில் நிறுவி இருக்கிறேன். ஃபயர் ஃபாக்ஸில் இணையத்தை வலம் வர முடிகிறது. தமிழ் மன்றமும் தமிழ் எழுத்துகளும் வெகு அழகாக காட்சி அளிக்கின்றன. உபுண்டுவிலேயே உள்ளமைந்துள்ள ஐபஸ் உதவியுடன் ஃபோனடிக் முறையில் தட்டச்சி இப்பதிவை இடுகிறேன். ஒரு சிறிய குறை : டெஸ்க் டாப் திரையின் அளவு சிறியதாக இருக்கிறது. கணினித்திரை முழுவதும் வர என்ன செய்தால் சரியாகும்?

ஆதி
19-02-2010, 09:22 AM
திரையின் மேல உள்ள டெப்பில்

system - > Preference -> screen resolution/display

800x600 இருந்து 1280 x 720 மாற்றவும்.. அண்ணா..

சரிப்பார்த்து சொல்லுங்கள் அண்ணா..

பாரதி
19-02-2010, 09:57 AM
லினக்ஸ் நிறுவியதில் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இணையத்தொடர்பு தானே ஏற்படுத்திக்கொண்டது. தமிழ் தட்டச்சும் ரைட்டரைப் போன்றே எளிதாக இருக்கிறது. ஃபயர்பாக்ஸ் இணைய உலாவுதல் மிக மிக நன்றாக, இண்டர்நெட் எக்ஸ்புளோரரைக்காட்டிலும் பன்மடங்கு நன்றாக, வேகமாக இருக்கிறது!

அன்பு ஆதான்... நீங்கள் கூறிய முறையில் ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து விட்டேன் ஆதன். அதில் அதிகபட்சமாக இருப்பதே 800 x 600 தான்! கணினித்திரை unknown என்று வருகிறது. கணினியின் வன் பொருள் முறையாக நிறுவப்பட்டிருக்காதோ என்ற ஐயம் வருகிறது. தோஷிபா - portege - 14” - தொடுதிரை கணினி. அதற்கான தீர்வை தேடும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் தேட முடியவில்லை. இனி தேட வேண்டும். நீங்களும் முயற்சி செய்து விடை கிடைக்கிறதா என்று பாருங்கள் ஆதன். மிக்க நன்றி.

ஆதி
19-02-2010, 10:08 AM
அப்படியானால் terminal செல்லவும் அண்ணா..

sudo displayconfig-gtk

இந்த கட்டளையை பயன்படுத்தி resolution-ஐ மாற்றிக் கொள்ளவும் அண்ணா..

சரிப்பார்த்துச் சொல்லுங்களேன்..

பாரதி
19-02-2010, 10:18 AM
command not found என்று வருகிறது ஆதன்.

ஆதி
19-02-2010, 10:56 AM
கொஞ்சம் சுலபமா தீர்க்கலாம் னு நெனச்சேன் முடியாது போல அண்ணா.. புது வர்ஷனில் அந்த கட்டளையை நீக்கிவிட்டார்கள் போல அண்ணா..

சரி,

terminal போய்டுங்க..

$ sudo su - root
Password:<உங்க கடவு சொல்லை அடிக்கவும்>

# cd /etc/X11

# cp xorg.conf xorg.conf.backup < orginal file-ஐ ஒரு backup செய்து கொள்ளவும்>

# vi xorg.conf

Section "Screen"
Identifier "Default Screen"
Device "Generic Video Card"
Monitor "Generic Monitor"
DefaultDepth 24
SubSection "Display"
Depth 1
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 4
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 8
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 15
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 16
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 24
Modes "1024x768" "800x600" "640x480"
EndSubSection
EndSection

இந்த கோப்பில், "Modes" எல்லாவற்றிலும் "1280x800" இதனை இன்ஸ்சர்ட் செய்துவிடவும்..

#vi xorg.conf

Section "Screen"
Identifier "Default Screen"
Device "Generic Video Card"
Monitor "Generic Monitor"
DefaultDepth 24
SubSection "Display"
Depth 1
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 4
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 8
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 15
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 16
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
SubSection "Display"
Depth 24
Modes "1280x800" "1024x768" "800x600" "640x480"
EndSubSection
EndSection

:wq!

Insert செய்வதற்கு, Esc-key அழுத்தி பின் i-ஐ அழுத்தவும்..

save செய்வதற்கு Esc-key அழுத்தி பின் shift+; wq! Enter செய்தால் save ஆகிவிடும்.. புரியுதா பாருங்க அண்ணா.. இல்லை என்றால் இன்னும் தெளிவா சொல்றேன்..

பாரதி
19-02-2010, 11:35 AM
நன்றி ஆதன். முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
wacom டிரைவர்களை நிறுவிப்பார்க்க முயற்சித்தேன். இதுவரை பலனில்லை. ஆனாலும் லினக்ஸுக்கு மாறுவது என்ற என் எண்ணம் சரியானதாகவே இதுவரை தோன்றுகிறது.

ஆதி
19-02-2010, 11:45 AM
அண்ணா ஒன்னொன்னையும் தனித்தனியாக எடுத்து இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை அண்ணா..

$ sudo apt-get update

இந்த கட்டள்ளை எல்லா டிரைவர்ஸியும் இன்ஸ்டால் செய்துவிடும்..

wacomக்கு மட்டும்..

$ sudo apt-get install xserver-xorg-input-wacom wacom-tools

பாரதி
19-02-2010, 11:52 AM
# cd /etc/X11
இந்தக் கட்டளையை தட்டச்சியதும் No such file or directory என்று வருகிறது.

பாரதி
19-02-2010, 11:59 AM
$ sudo apt-get install xserver-xorg-input-wacom wacom-tools
இந்தக்கட்டளையை தந்ததும் நிறுவ ஆரம்பித்து,

இறுதியில்

processing triggers for libc-bin ...
ldconfig deferred processing now taking place
.........@...... - laptop: $
என்று வந்திருக்கிறது.

மீள இயக்கிப்பார்க்கிறேன்.

ஆதி
19-02-2010, 12:15 PM
$ sudo apt-get install xserver-xorg-input-wacom wacom-tools
இந்தக்கட்டளையை தந்ததும் நிறுவ ஆரம்பித்து,

இறுதியில்

processing triggers for libc-bin ...
ldconfig deferred processing now taking place
.........@...... - laptop: $
என்று வந்திருக்கிறது.

மீள இயக்கிப்பார்க்கிறேன்.

அப்ப இன்ஸ்டால் வெற்றிகரமா முடிஞ்சிருச்சுங்கண்ணா.. wacom வேலை செய்யுதாங்கண்ணா..

ஆதி
19-02-2010, 12:20 PM
# cd /etc/X11
இந்தக் கட்டளையை தட்டச்சியதும் No such file or directory என்று வருகிறது.

இதுதான் ஆட்சர்யம், வீட்டுக்கு சென்று கவனிக்கிறேன் அண்ணா.. எப்படியும் இந்த பிரச்சனையை இன்றிர்க்குள் தீர்த்துவிடலாம்..

பாரதி
19-02-2010, 12:27 PM
எல்லாம் நிறுவி, மீள இயக்கியும் இன்னும் 800 x 600.. ஐ தாண்ட மாட்டேன் என்கிறது!

மற்றொரு மடிக்கணினியில் இடம் இல்லை. அதில் கொஞ்சம் காலி செய்து விட்டு அங்கும் லினக்ஸை நிறுவலாம் என்று நினைக்கிறேன்.

ஆதி
19-02-2010, 12:35 PM
எல்லாம் நிறுவி, மீள இயக்கியும் இன்னும் 800 x 600.. ஐ தாண்ட மாட்டேன் என்கிறது!

மற்றொரு மடிக்கணினியில் இடம் இல்லை. அதில் கொஞ்சம் காலி செய்து விட்டு அங்கும் லினக்ஸை நிறுவலாம் என்று நினைக்கிறேன்.

அண்ணா, இப்ப அந்த X11 கோப்பை தேடிப்பாருங்க அண்ணா..

பாரதி
19-02-2010, 12:42 PM
மீண்டும் ஒரு முறை...
cd Desktop/linuxwacom-0.8.4-4/prebuilt
sudo ./uninstall
sudo ./install
பயன்படுத்தினேன்.

நிறுவி இருக்கிறது. ஒருவேளை கெர்னல் வேலை செய்யவில்லை என்றால் நாமாக மறுபடியும் கட்டளையை தரவேண்டும் என்று சொல்கிறது. கணினியை மீள இயக்கிப்பார்க்கிறேன்.

நன்றி ஆதன். தேடிப்பார்க்கிறேன்.

பாரதி
19-02-2010, 01:36 PM
அண்ணா, இப்ப அந்த X11 கோப்பை தேடிப்பாருங்க அண்ணா..

/etc இல் இருப்பதாக தேடுதல் தெரிவிக்கிறது ஆதன்.

(முதலில் நான் X11 என்று தட்டச்சுவதற்கு பதிலாக x11 என்று பிழையாக தட்டச்சியதே காரணம்!)

இப்போது முறையாக உள்ளே சென்றாலும், அதன் உள்ளே சென்று பார்த்தால் கோப்பில் எந்த எழுத்தும் இல்லை!!

பாரதி
20-02-2010, 10:00 AM
குபுண்டு குழுமத்தில் புது கோப்பை உண்டாக்கி சேமிக்க சொல்லி இருந்தார்கள். அதன் படியே செய்ததில் இப்போது முழுத்திரையையும் காண முடிகிறது. சிறிது கட்டளைகளையும் படித்தோம் என்றால் மிக எளிதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

உதவியதற்கு மிக்க நன்றி ஆதன். மற்றொரு கணினியில் லினக்ஸ் மிண்ட் நிறுவலாமா என்ற எண்ணம் இருக்கிறது.

எந்திரன்
12-07-2010, 10:43 AM
எனக்கும் லினக்ஸுக்கு மாறிவிடலாமா ? அல்லது விண்டோஸையும் வைத்துக் கொண்டு லினக்ஸிலும் இயங்கலாமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. எனக்கு தெரிந்தவரை லினக்சின் உபுண்டு பதிப்பு நன்றாக இருக்கிறது என்ற வரை அறிந்து வைத்துள்ளேன். நமது மன்றத்தில் லினக்ஸ் பற்றி் நிறைய திரிகள் உள்ளதால் அனைத்தையும் பொறுமையாக கற்று அந்த ஆபரேடிங் சிஸ்டத்திற்கு மாற முடியுமா என்று முயல்கிறேன்.

செல்வா
12-07-2010, 12:14 PM
கணிணியை இணைய வசதிக்காகவும் பாடல்கள் கேட்க தகவல்கள் சேகரிக்க கோப்புகள் தயாரிக்க என்ற அடிப்படையில் உபயோகப் படுத்துகிறவர்கள் தாராளமாக உபுண்டு அல்லது லினக்ஸ் மின்ட் க்கு மாறலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை.

சி, சி++, ஜாவா, பி.எச்.பி, பைதான், பேர்ள்ஸ், ஆரக்கிள் போன்ற மென்பொருட்களில் பணிபுரிபவர்களும் தாராளமாக உபுண்டுக்கு மாறலாம்.

மைக்ரோசாப்ட்டின் தாயரிப்புகளான வி.பி, டாட் நெட் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் அடோபின் தயாரிப்புகளில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் எனது ஆலோசனை என்னவென்றால் அவர்கள் விண்டோஸிலேயேத் தொடர்ந்து கொண்டு உபுண்டுவையும் நிறுவிக் கொண்டு உங்கள் வேலைகளை உபுண்டுவில் திறம்படச் செய்ய முடியுமா என்பதை சோதித்துக் கொண்டு பின் மாறுவது நலம்.

விண்டோஸில் இயங்கும் மென்பொருட்களை உபுண்டுவில் இரண்டுவிதமாக இயக்கலாம்
வைன் (WINE) என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம்

விர்ட்யூவல் பாக்ஸ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தியும் இயக்கலாம்.

இரண்டு மென் பொருட்களையும் நான் பயன்படுத்திப் பார்த்திருந்தாலும் விர்ச்யுவல் பாக்ஸை நான் சிறந்தது என்பேன். இந்த முறையில் நீங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தை உங்கள் கணிணிக்குள் இன்னொரு கணிணியாக நிறுவிக் கொள்ளலாம். இரண்டு கணிணிகள் (ஒன்று உபுண்டு ஒன்று விண்டோஸ்) ஒரே நேரத்தில் நாம் இயக்குவது போல் இருக்கும் இந்த முறை.

எல்லாவற்றிற்கும் மேலாக உபுண்டுக்கு மாறும் ஒருவருக்கு முக்கியமாக இருக்க வேண்டியது. பொறுமை,குறைந்தபட்சம் தகவல்களை தேடும் அறிவு,விடா முயற்சி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம்.

வியாசன்
17-07-2010, 06:22 AM
நன்றி செல்வா உங்கள் உபயோகமான தகவல்களுக்கு
விர்ட்யூவல் பாக்ஸ் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும்

VirtualBox இதுதானா?

செல்வா
17-07-2010, 07:27 AM
அதே தான் வியாசன் சுட்டி இங்கே http://www.virtualbox.org/wiki/Downloads

வியாசன்
17-07-2010, 08:56 AM
நன்றி செல்வா ஏற்கனவே கிடைத்துவிட்டது. எப்படி பயன்படுத்துவது என்று சொன்னால் நல்லது என்று நம்புகின்றேன்.