PDA

View Full Version : வாழ்கை பயம் - மறு பதிப்பு



balakmu
30-01-2010, 02:31 PM
வாழ்க்கையைக்கண்டு
பயந்தேன்!! அதன்
வசந்தத்தைஅனுபவிக்காத
வரை!!

அன்பைக்கண்டு
பயந்தேன்!! அதுஎன்
இதயத்தில்இருள்
போன்றகருமையை
நீக்கி, நிகரில்லா
வெளிச்சத்தைவீசும்வரை!!

வெறுப்பைக்கண்டு
பயந்தேன்!! அது
அறியாமைஎன்று
அறியும்வரை!!

ஏளனங்களைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
சிரிக்கத்தெரியாதவரை!!

தனிமையைக்கண்டு
பயந்தேன்! நான்தனியாக
இருக்கக்கற்றுக்கொள்ளும்வரை!!

தோல்விகளைகண்டு
பயந்தேன்!! தோல்வியே
வெற்றிக்குஅறிகுறிஎன்று
உணரும்வரை!!

வெற்றிகளைகண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின்சந்தோஷம்
என்றுஅறியும்வரை!!

மற்றவர்களின்விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப்பற்றியகருத்துக்கள்
இருக்கும்என்றுஉணரும்வரை!!

ஒதுக்கப்படுவதைக்கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கைவரும்வரை!!

வலிகளைகண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்குதேவை
என்றுஅறியும்வரை!!

உண்மையைக்கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
உண்மைகளைப்பார்க்கும்வரை!!

வயதானதைஅறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டுவிட்டேன்என்று
உணரும்வரை!!

நடந்ததைநினைத்து
பயந்தேன்!! அதுஇனி
நடக்காதுஎன்று
நம்பும்வரை!!


நடக்கப்போவதை
நினைத்துபயந்தேன்!!
நடந்ததுஎல்லாம்
நன்றாகவேநடந்தது,
நடக்கப்போவதெல்லாம்
நன்றாகவேநடக்கும்
என்றுஉணரும்வரை!!!

மரணத்தைக்கண்டு
பயந்தேன்!! அதுமுடிவல்ல
முடிவின்தொடக்கமே
என்றுஉணரும்வரை!!!

சரண்யா
30-01-2010, 02:41 PM
ஒ..எல்லாம் பயத்துக்கும் பதில் கிடைசுடுச்சு போல..வாழ்த்துகள்...
வலிகளைகண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்குதேவை
என்றுஅறியும்வரை!!
உண்மையே..ஆனால் வலியை அனுபவிப்பது தான கொடுமை...
வயதானதைஅறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டுவிட்டேன்என்று
உணரும்வரை!!
இது யாரும் ஒத்துக்கமாட்டாங்க...இருந்தாலும் கவிக்காக சொல்லிவிட்டீங்க போல..

சிவா.ஜி
30-01-2010, 03:17 PM
மிக அருமையான தத்துவ சிந்தனை பாலா அவர்களே. அறியும்வரைதான் அனைத்து பயங்களும், அறிந்தபின் அவை வாழ்வின் உண்மை நிலைகளே.

வாழ்த்துகள் பாலா அவர்களே.

(கவிதையை அதற்கான பகுதியில் பதியுங்கள் பாலா. இதனை பொறுப்பாளர்கள் தக்க இடத்துக்கு நகர்த்துவார்கள்.)

ஜனகன்
30-01-2010, 03:34 PM
வாழ்கை பயங்கள்............என்னும்கவிதை வரிகள் அற்புதம்.
எல்லாவற்றிற்கும் பயந்து பயந்து செற்றில்ஆவது நகைச்சுவையான ஆக்கம்.பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
31-01-2010, 12:18 PM
அறிதலும் உணர்தலும் புரிதலும் நமக்குள் அமைந்துவிட்டால் எல்லா பயமும் வாழ்க்கையின் பலமாகவும் பலனாகவும் மாறிவிடும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் கவிதை வரிகளில்...!!

வாழ்த்துக்கள் பாலா.. தொடருங்கள்..!!