PDA

View Full Version : இன்றைய செய்தி 31-01-10



muthuvel
30-01-2010, 05:25 AM
இருந்தும் இல்லாமல் வாழ்கிறான் இராக்கியன் ,
இல்லாமல் , இருந்து வாழ்கிறான் , ஆப்கானிஸ்தானி ,
இருபவனிடம் எடுப்பவன் சோமாலியன் ,
இருந்தும் ,ஏதும் இல்லை ,இலங்கை தமிழன் ,

அன்புரசிகன்
30-01-2010, 05:32 AM
நீங்கள் பதிந்திருப்பதில் சிலதை ஏற்க இயலவில்லை...
உங்கள் இந்தியரை பற்றி கூறாதுவிட்டுவிட்டீர்களே...
ஏன் மற்றவர்களை சாடுகிறீர்கள்???
எங்கு அவுஸியர் மற்றவர்களை விரட்டுகிறார்கள்???

muthuvel
30-01-2010, 06:59 AM
மன்னிக்கவும் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் ,நான் இதை அழித்துவிடுகிறேன்

அன்புரசிகன்
30-01-2010, 07:26 AM
இருக்கும் இந்தியனை அடிப்பவன் ஆஸ்திரேலியன் ,

எனக்கு பிடிக்காமல் போக ஏதுமில்லை. காரணம் நான் அவுஸ்திரேலியனுமல்ல. இந்தியனுமல்ல. ஆனால் உண்மை நிலவரம் தெரியாது குற்றம் சாட்டுவது தவறு...

சும்மா றோட்டால போறவன கூப்பிட்டு வச்சு அடிக்க வேண்டியிருந்தால் இப்போது ஏன் அடிக்க வேண்டும். முன்னர் ஏன் அடிக்கவில்லை... யோசியுங்கள்...

இன்னும் அமெரிக்க ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அவுஸில் தான் பாதுகாப்பு அதிகம்...

இது பற்றி இங்கு நான் விவாதிக்க வரவில்லை. காரணம் இது இனம் நாடு என்ற துவேசத்தினை இழுக்கப்படலாம்...

அடிவாங்கிய இந்தியர் என்று நீங்கள் பார்ப்பதிலும் அவர் சார்ந்த இனத்தினை சற்று யோசியுங்கள். வேறு ஏதும் நான் கூறவரவில்லை.

இங்கும் இந்தியாவினை சேர்ந்த பல்லின மக்கள் உள்ளார்கள். பாதுக்காப்பாக........... குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் ஏன்??? தவிர அடித்தவர்கள் வெள்ளையர்கள் அல்ல. உங்கள் அயலர் நாட்டவர் தான்... அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டது...

muthuvel
31-01-2010, 12:38 PM
உங்கள் கருத்துக்கு ,நான் செவி சாய்கிறேன்