PDA

View Full Version : என் பெயர் தமிழன்



muthuvel
30-01-2010, 05:04 AM
நான் பிறந்தபோது, அரசு ஆஸ்பத்திரி இலவசம் ,

பெத்தவ குப்பை தொட்டில தூக்கி எரிஞ்சா ,அரசு தொட்டில் இலவசம் ,

குழந்தையா இருந்த ப ,போலியோ சொட்டு மருந்து இலவசம் ,


பள்ளி பருவத்துல ,சாதி சலுகைல ,படிப்பு இலவசம் ,

பள்ளில சீருடை இலவசம் ,

பல்பொடி இலவசம் ,

சத்துணவு இலவசம் ,



படிச்சி முடிச்சு பிறகு, இடஒதிக்கீடு அடிப்படைல, கல்லூரி படிப்பு இலவசம் ,

உடம்புக்கு , நான் உடுத்த, பண்டிகைக்கு வேட்டி, சேலை இலவசம்

கல்லூரி படிப்பு செலவுக்கு ,ஊக்கத்தொகை இலவசம் ,

படிச்சு ,வேலை கிடைக்கலைனா ,நிவாரண பணம் இலவசம் ,

யாரும் என்னை ,தெண்ட சோறுன்னு சொல்லுறதுக்கு முன்ன ,ஒரு ரூபாய் அரிசியோட காஸ் அடுப்பு இலவசம் ,

வயுறு முட்ட தின்னுபுட்டு ,பொழுது போகலைனா ,பொழுது போக தொலைக்காட்சி இலவசம் ,

நாதியற்ற எனக்கு நாலு சுவற்று அறையில் தங்க ,
சமத்துவ புர வீடு இலவசம் ,

அதோட இரண்டு ஏக்கர் நிலமும்
இலவசம் ,

மகிழ்ச்சியா நான் உறங்க மலிவு விலையில் மது, தேர்தலின்போது இலவசம் ,

அப்படியே ,மது அருந்தி நோய் வந்தா ,
மருத்துவ காப்பீடு திட்டத்துல ,சிகிச்சை இலவசம் ..

எனக்கு கல்யாணம்னா திருமண உதவிதிட்டதுல சலுகையும், அதோட பணமும் இலவசம் ,

எனக்கு பெண்குழந்தை பிறந்தா ,
தங்க சங்கிலியோட ஊக்கத்தொகை இலவசம் ,

அவ திருமணத்துக்கு, உதவிதிட்டதுல பணம் இலவசம் ,

கால காலத்துல நான் கண் மூடும்போது ,
பிணத்தை எடுத்துட்டு போக அமரர் ஊர்தி இலவசம்

நகராட்சி சுடுகாடு இலவசம் ,

நான் யாருன்னு கேட்குரிங்களா,
என் பெயர் தமிழன் ..

muthuvel
31-01-2010, 02:25 AM
இப்படிக்கு தமிழன்