PDA

View Full Version : கவிதை போட்டியில் நான்.....



Ravee
27-01-2010, 07:33 PM
கவிதை போட்டியில் நான்.....

http://www.twopinesstudio.com/ebay/blog46.jpg


வாழ்க்கையில் முதலில் வந்த
விபரீத ஆசை
வகுப்பில் நடந்த கவிதை போட்டியில்
ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
ஆசை வந்த போது வயது பதினாறு


யாரை பற்றி எழுத, எதை பற்றி எழுத
என்ன ஓட்டங்கள் தாறுமாறாய்
இருப்பதோ எட்டு திசைகள்
எண்ணம் போனது பத்து திசைகள்
புரியவில்லையா அவை
மேலும் கீழுமாகவும் போனது


அப்பா அம்மா அடுத்த வீட்டுப்பெண்
யாரும் சரிவரவில்லை வார்த்தைகளுக்கு
முடிவாக எடுத்த முடிவு
கவிதைகள் எழுத சிறந்த இடம்
பூங்கா என்று
சென்றேன் புல் மேல் இருந்தேன்
கிடந்தேன் உருண்டேன் புரண்டேன்
கவிதை வரவில்லை
காவலாளி வந்தான்


என்ன இங்கே உனக்கு வேலை என்றான்
படிக்க வந்தேன் என்றேன்
படுக்க வரவில்லையே என்றான்
பாவம் போல முழித்தேன்
பரிதாபபட்டு போய்விட்டான்


பேனாவை திறந்து வைத்து காத்திருந்தேன்
மை காய்ந்து போனது
என் கற்பனைகளை போல
தமிழ் அய்யா சொன்னது நினைவில் வந்தது
எதையும் ஆழமாக கவனி
அப்போது தான் கவிதையும் வரும்
காதலும் வரும் என்று


கவனித்தேன் மரங்களை, செடிகளை
மரத்தில் வந்து அமர்ந்த பறவைகளை
பூக்கள் மேல் அமர்ந்த வண்டுகளை
புல் மேல் அமர்ந்த தத்து கிளியை
ஓரத்தில் படுத்துக்கிடந்த தொத்தல் நாயை
முடிவாக கவிதை பிறந்தது


"வானத்தில் பறந்த சிட்டு கீச் கீச் என்றது
மொட்டில் அமர்ந்த வண்டு ரீங் ரீங் என்றது
கிளையில் அமர்ந்த கிளிகள் கீ கீ என்றது
கல்லுக்கு அடியில் தேரை கர் கர் என்றது
சோம்பிக்கிடந்த நாய் லொள் லொள் என்றது
வந்து போன மனிதர்கள் வள வள என்றார்கள்"


இத்துடன் என் சிந்தனை நின்று போனது
உண்மையில் இறைவனுக்கு தமிழ் தாய்
நன்றி சொல்லி இருப்பாள் அன்று


மறுநாள் காலை தமிழ் வகுப்பு
வரிசையாக அனைவரும் கவிகள் படிக்க
வந்தது என் முறை ..... :icon_wacko:படித்தேன் .....:music-smiley-012:


"வானத்தில் பறந்த சிட்டு கீச் கீச் என்றது
மொட்டில் அமர்ந்த வண்டு ரீங் ரீங் என்றது
கிளையில் அமர்ந்த கிளிகள் கீ கீ என்றது
கல்லுக்கு அடியில் தேரை கர் கர் என்றது
சோம்பிக்கிடந்த நாய் லொள் லொள் என்றது
வந்து போன மனிதர்கள் வள வள என்றார்கள்"


படித்து முடித்த மறு நிமிடம்
அனைவரும் கொள் கொள் என்று சிரித்தார்கள்


அய்யா அருகில் வந்தார்
என் தோள் தட்டி, முகம் தூக்கி
ம்ம் கன்னி முயற்சி..........நன்று

சிட்டு, கிளி, தேரை, நாய் கூறியது
எல்லாம் இருக்கட்டும்
கவிதை முடிவில் எமக்கு நீ
என்ன கூறப்போகிறாய் என்று

அய்யா முகம் பார்த்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண் மூடி ஒரு நிமிடம் யோசித்து
கவி முடித்தேன் இவ்வாறு

கண்மூடி, புல்வாசம்
கிளிப்பேச்சு, குயில் பாட்டு
கேட்கையிலே....... இயற்கையே
உன்னை பாட
வார்த்தை இன்றி.............
ஊமை ஆகி போனேனே


உமையாகி போனேன் என்று தப்பிவிட்டாய்
அருமை விகட கவியாக வருவாய் என்று
அய்யா ஆசியுடன் அன்று தந்த ஆறுதல் பரிசு
அடைந்த மகிழ்ச்சிக்கு இன்றுவரை இல்லை ஈடு

கீதம்
27-01-2010, 07:45 PM
மிகவும் அருமை! நானும் இப்படிதான், ஏழாவது படிக்கும்போது கவிதை எழுத முயற்சித்து மரம், பறவை, கல், கடப்பாறை என்று எதையும் விட்டுவைக்காமல் எழுதினேன். பழைய நோட்டுப்புத்தகத்தை இப்போது புரட்டினாலும் சிரிப்பு வருகிறது. ஞாபகங்களை மீண்டும் துளிர்க்கவைத்த கவிதைக்குப் பாராட்டுகள்.

Ravee
27-01-2010, 08:38 PM
ஆமாம் கீதம் ,
நான் திருச்சி சிறுவர்மலர் நிகழ்ச்சிக்கு எழுதிய பம்பரக் கவிதை பற்றி என் வீட்டில் இப்போது சிரிப்பார்கள். பையனுக்கு கடன் வாங்கி கழிக்க தெரியாவிட்டாலும் கடன் வாங்கி கவிதை எழுதுரான் பாரு என்று கிண்டல் செய்வார்கள்.

அமரன்
27-01-2010, 08:52 PM
தாமரையார் கவிதையை பிரித்துப் பொருள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

பலரையும் ஞாபகம் வருதே பாட வைக்கும் பாடல்.

பாராடுகள் ரவீ.

Ravee
27-01-2010, 09:03 PM
நன்றி அமரன் உங்கள் விமர்சனத்துக்காக என் போதி மரம் காத்து இருக்கிறது .

அமரன்
27-01-2010, 09:06 PM
அன்பு ரவீ!

கணினிப்பிரச்சினை, வேலை நெருக்கடி, இதர சில சேவைப்பொழுதுகள் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். கிடைக்கும் சொற்ப நேரத்தில் போதிமரத்தடியிலும் நிச்சயம் இளைப்பாறுவேன்.

Ravee
27-01-2010, 09:09 PM
நன்றி அமரன் நன்றி

இன்பக்கவி
28-01-2010, 03:01 PM
அருமை விகட கவியாக வருவாய்

"கவி":icon_b:யாக வருவீங்க என்ன அண்ணா
அது தான் கவிஞர் ஆகா வந்தாச்சே...:D:icon_b:

Ravee
28-01-2010, 03:31 PM
கவிமா உன் பதில் பார்த்தேன் . உன் கணினி சரி ஆகி விட்டது என்று நினைக்கிறேன் , உன் போனுக்கு என்ன் ஆட்சு இப்போது.

சிவா.ஜி
28-01-2010, 03:31 PM
நல்ல கவிதை ரவீ. காத்துக்கிடந்தால் கவிதை வராது, கவனித்தால் வருமென்று தமிழாசிரியர் சொன்னது உண்மைதான். கிளிக்கத்தலையும், நாய்க்குரைத்தலையும் கூட நயமாய் சொல்ல முடியும் என்று, இயற்கையை வியந்த விதம் அருமை.

வாழ்த்துகள் ரவீ.

இன்பக்கவி
28-01-2010, 03:45 PM
கவிமா உன் பதில் பார்த்தேன் . உன் கணினி சரி ஆகி விட்டது என்று நினைக்கிறேன் , உன் போனுக்கு என்ன் ஆட்சு இப்போது.

ஆஹா ஹா அண்ணா,
கடைக்கு போயிட்டு போன்-அ வண்டிக்குள்ள வச்சு லாக் பண்ணிட்டேன் அண்ணா...
நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வந்து போய் எடுத்து வந்தேன்:lachen001::lachen001:

செல்வா
30-01-2010, 03:41 AM
சற்று நேரம் எனது ஆரம்ப காலக் கவிதை எழுதும் முயற்சியையும் நினைவுபடுத்தி முறுவல் வரவைத்து முற்றிய கவிதை...

வாழ்த்துக்கள் இரவீ

Ravee
09-02-2010, 02:30 AM
ஆரம்பத்தில் மட்டும் இல்லை இப்போதும என் நிலைமை பல நேரங்களில் இது போல தான். அய்யா வந்து என்னை காப்பாற்றுவார். என்னிடம் இருந்து தமிழை காப்பாற்றுவார்.