PDA

View Full Version : ஒரு தாய்-அ ஆ



அனுராகவன்
27-01-2010, 06:41 PM
கதிர் எழுந்து
கானல் நீர் ஊறி
கிணற்றை அடைந்து
கீற்று குடிசையின் கீழ்
குட்டி தூக்கம் போட்ட என்னை
கூழ் குடிக்க
கெண்டி முறுக்கு சுட்டு
கேழ்வரகு கஞ்சியுடன்
கைமணத்துடன் என் தாயும்
கொக்கு மீனை கண்டது போல்
கோமகன் பறை சாற்றி
கெளதம புத்தரை வணங்கி
..
..
...
ஞானம் அடைவாய் மகனே!

இளசு
28-01-2010, 05:03 AM
வாருங்கள் அனு. நலந்தானே?


க,கா, கி என வரிசையாய் கோர்க்கும் புதுமுயற்சிக்கு பாராட்டுகள்.

கருத்துச் சங்கிலி இன்னும் இறுகினால் மெருகு கூடும்.