PDA

View Full Version : அன்புத்தாய்

இன்பக்கவி
27-01-2010, 02:58 PM
http://www.greenpharmacy.co.in/product_images/mother_child.gif
பளிச்சென பார்ப்பவர்
கண்களை வசீகரிக்கும்
காந்த பார்வையாம்
பட்டு கைகளாம்
சிவந்த உதடுகளாம்
முல்லை பூ சிரிப்பாம்
ரோஜாவின் நிறமாம்
கரு மேக கூந்தலாம்
தூக்கத்தில் சிரிக்கும்
அழகு தேவதையாம்
கண்தெரியாத அரசி
ஈன்றெடுத்த அழகு தேவதையாம்
காண கண் கோடி வேண்டுமென
அடுத்தவர் சொல்லில்
அகம் மகிழ்ந்து
நிச்சயம் அழகுதான்
தன் குழந்தையென
மனக்கண்ணில்
தேவதையை
கொஞ்சும் பார்வையில்லா
அன்புத்தாய்..

சிவா.ஜி
27-01-2010, 03:08 PM
விரல்களில் விழி வைத்து, மனதினில் பிம்பம் பார்க்கும் பார்வையற்ற தாய்.....பாசம் குறையாத தாய்....!

நல்லாருக்குங்க இன்பக்கவி.

துக்கத்தில் சிரிக்கும்ங்கறதை மட்டும் தூக்கத்தில் சிரிக்கும்ன்னு மாத்திடுங்க....

வாழ்த்துகள்.

இன்பக்கவி
27-01-2010, 03:22 PM

ஐயோ எழுத்து பிழை...:traurig001:
நன்றிகள் சிவாஜி...

Ravee
27-01-2010, 08:47 PM
கடைசியில் இருந்து மூன்றாவது வரியில் தேவதை என்ற வரிகளை சரி செய்யவும் கவிமா.

இளசு
28-01-2010, 05:07 AM
என்ன கொடுமை அந்தத் தாயின் நிலை..

பதற வைத்த கவிதை.

பாராட்டுகள் இன்பக்கவி!

அமரன்
28-01-2010, 05:17 AM
கருவறை விட்டிறங்கியும் கருவறை வாழ் சிசுபோல அந்தத் தாய்க்கு!

கலங்கடிக்கும் கரு. எளிமையாகப் புகுந்து வலிமையாக தாக்குகிறது.

மனமார்ந்த பாராட்டுகள் இன்பக்கவி.

Akila.R.D
28-01-2010, 08:23 AM
அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் கவி..

இன்பக்கவி
28-01-2010, 09:20 AM
கடைசியில் இருந்து மூன்றாவது வரியில் தேவதை என்ற வரிகளை சரி செய்யவும் கவிமா.

அண்ணா உங்க கண்ணுக்கும் பிழை தெரிந்துவிட்டதா..:mad:
எனக்கு மட்டும் தெரியாம போச்சு..:traurig001:
அடுத்த முறை பிழை இல்லாமல் பதிவிடுகிறேன்:icon_rollout:
நன்றிகள் அண்ணா:icon_b:

இன்பக்கவி
28-01-2010, 09:22 AM
என்ன கொடுமை அந்தத் தாயின் நிலை..

பதற வைத்த கவிதை.

பாராட்டுகள் இன்பக்கவி!

நன்றிகள் இளசு அவர்களே..
நிஜத்தில் ஒரு நொடி அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்த்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை...

இன்பக்கவி
28-01-2010, 09:24 AM
கருவறை விட்டிறங்கியும் கருவறை வாழ் சிசுபோல அந்தத் தாய்க்கு!

கலங்கடிக்கும் கரு. எளிமையாகப் புகுந்து வலிமையாக தாக்குகிறது.

மனமார்ந்த பாராட்டுகள் இன்பக்கவி.

நன்றிகள் அமரன் அவர்களே..
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வாழ்த்துக்கள் பார்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது..
நன்றிகள்..

இன்பக்கவி
28-01-2010, 09:26 AM
அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் கவி..

நன்றிகள் அகிலா...:icon_b::icon_b:

பா.ராஜேஷ்
28-01-2010, 09:31 AM
பாராட்டுக்கள் கவி.
மிக நன்றாகவே உள்ளது..

இன்பக்கவி
28-01-2010, 09:58 AM
பாராட்டுக்கள் கவி.
மிக நன்றாகவே உள்ளது..

நன்றிகள் ராஜேஷ்..:icon_b::icon_b:
நேற்று படித்து விட்டு இன்றைக்கு பின்னூட்டமோ???:rolleyes:;):D

பா.ராஜேஷ்
28-01-2010, 10:07 AM
நன்றிகள் ராஜேஷ்..:icon_b::icon_b:
நேற்று படித்து விட்டு இன்றைக்கு பின்னூட்டமோ???:rolleyes:;):D

மன்னிக்கவும் , நேற்று அலுவலகத்தை விட்டு கிளம்பி கொண்டிருந்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை !!

ரொம்பத்தான் கவனிக்கிறீங்க

இன்பக்கவி
29-01-2010, 04:14 PM
மன்னிக்கவும் , நேற்று அலுவலகத்தை விட்டு கிளம்பி கொண்டிருந்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை !!

ரொம்பத்தான் கவனிக்கிறீங்க

ம்ம்ம்..நீங்கள் படித்ததை பார்த்தேன் அது தான் கேட்டேன்...:D:rolleyes::D