PDA

View Full Version : புகைவண்டி அவலம்



muthuvel
27-01-2010, 12:05 PM
தீவிரவாதியின் விளையாட்டு பொம்மையாய் ,
அரசியல் வாதிகளின் போராட்ட களமாய் இன்று நீ ,
கண் அயரும் நேரத்தில் ,
தடம் புரள்வாயோ நீ ,
சுத்தமில்லா கழிப்பறையும் ,
சத்தில்லா உணவும் உனக்கான முத்திரையோ ,
தை மாச பயணத்துக்கு ,
சித்திரையில் நித்திரையோடு காத்துகிடந்தேன் ,
என்றுமே கிடைக்காத உன் முன்பதிவு டிக்கெட்டுக்கு ,
என்றுமே குறையாத ரசிகர்கள் கூட்டம் உனக்கு மட்டும் ,
எப்பொழுதும் உன்னை பார்த்து திரும்பும் ஏமாற்றம் எனக்கு மட்டும் ,
உன்னால் வருமானம் நாட்டுக்கும் ,
சில தரகர்களுக்கும் ,
வழி பிறகுமா ?
நடுதரமக்களுக்கு
நிம்மதியான பயணம் செல்ல ...

சிவா.ஜி
27-01-2010, 01:24 PM
என்றுமே ரசிகர்கள் குறையாத கூட்டம், உனக்கு மட்டும் ,


ரசிக்க வைத்த வரி.

என்றுமே குறையாத ரசிகர்கள் கூட்டம் உனக்கு மட்டும் என்று ஒரு வார்த்தை மாற்றிப்போட்டால் இன்னும் அழகாகும்.

வாழ்த்துகள் முத்துவேல்.

இன்பக்கவி
27-01-2010, 02:27 PM
ம்ம்ம் ...ஆன்லைன் பதிவு வந்ததில் இருந்து இருமடங்கு லாபம் ரயில்வே துறைக்கும்
தரகர்க்கும் தான்..
அடித்து பிடித்து போவர்கள் நிலை அப்படியே தான் இருக்கு...
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்:icon_b:

muthuvel
28-01-2010, 02:33 AM
பாராட்டுக்கு நன்றி