PDA

View Full Version : இலங்கை செய்தி: சரத்பொன்சேகா சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.அன்புரசிகன்
27-01-2010, 08:56 AM
நேற்று நடைபெற்ற இலங்கை அதிபரை தெரிவுசெய்யும் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவினது தோல்வி ஓரளவு ஊர்ஜிதமான நிலையில் தனக்கு மற்ற போட்டியாளரான தற்போதய அதிபர் மகிந்தவினால் பாதுகாப்பு நிச்சயப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் கொழும்பு பெருநகரிலுள்ள முக்கியமான ஒரு உல்லாச விடுதியில் தங்கியுள்ளாராம். அவருக்கு பாதுகாப்பாக ஆயுதம் ஏந்திய இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய்கள் உள்ளார்களாம். இவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்தபடி இலங்கை இராணுவத்தினர் உள்ளனர் என தற்போதய இராணுவத்தளபதி நாணயக்கார கூறியுள்ளாராம்...

இன்னொரு வேடிக்கையான செய்தி. அந்த விடுதியில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் தலைகளும் பெரும் புள்ளிகளும் பாதுகாப்பு தஞ்சம் கோரி உள்ளனராம்...

இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் இவர்களை சந்திக்க சென்றுள்ளாராம்...

சரத் பொன்சேகா
http://www.lankanewspapers.com/news/profiles/newsimages/fonseka.jpg

மகிந்த ராஜபக்ஷ
http://www.topnews.in/files/Mahinda-Rajapakse-12412.jpg

அன்றொருநாள் கடமையில் இருவரும்...
http://sinhale.files.wordpress.com/2009/10/belying-there-is-a-rift-general-sarath-fonseka-participated-in-the-army-tattoo-to-commemorate-the-60th-anniversary-celebrations-with-president-mahinda-rajapaksa-photo-sudath-silva.jpg

இதுசம்பந்தமாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிக்கையின் இணையத்தள செய்தி இதோ:Fonseka seeks security guarantees (http://www.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=1240:fonseka-seeks-security-guarantees&catid=108:breaking-news&Itemid=425)

Presidential Candidate General Sarath Fonseka who is at a hotel in Colombo surrounded by the military, spoke to Daily Mirror online a short while ago and urged President Mahinda Rajapaksa to give him security guarantees to leave the hotel. (DS)
=================

Colombo hotel under “siege” (http://www.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=1234:colombo-hotel-under-siege&catid=108:breaking-news&Itemid=425)

A leading hotel in Colombo where Presidential candidate General Sarath Fonseka is currently at with several other opposition politicians, is said to be under “siege” with the army insisting that a group of deserters in the premises surrender.

Army spokesman Brigadier Udaya Nanayakara, speaking to Daily Mirror online, said that the army deserters should surrender immediately. However the deserters do not seem to be showing any signs of surrendering any time soon.

Meanwhile opposition leader Ranil Wickramasingha and several other opposition members also arrived at the hotel a short while ago.

Brigadier Nanayakara had earlier told Daily Mirror online that some 400 army deserters with weapons are holed up inside the hotel.
====================

இத வச்சு ஒரு திரைப்படம் எடுக்கலாம் போல.............

ஆரன் அண்ணா... Producer ஆக நீங்க ரெடியா... கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் பாடல் என அத்தனையும் நான் செய்கிறேன்... :D

சிவா.ஜி
27-01-2010, 09:14 AM
வெட்கங்கெட்டவர்களின் வெட்கக்கேடான அரசியல்....


(அன்பு நல்ல ஐடியாவா இருக்கு...படத்துக்கு பேர் "ஜனாதிபதி நீயா?...நானா?"....எப்பூடி...)

உதயா
27-01-2010, 09:42 AM
"ஜனாதிபதி நீயா?...நானா?"....
இல்லை இல்லை... " நான்தாண்டா ஜனாதிபதி " இதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நம் மக்களின் நிலமை இனி எப்படி இருக்கும்??

அன்புரசிகன்
27-01-2010, 10:45 AM
ஹி ஹி.. தலைப்புக்கள் அருமை... சிவா அண்ணா... நகைச்சுவைக்கான வசனங்களை நீங்கள் எழுதுங்கள்... :D

-------
பிந்திய செய்தி...

கொழும்பு பெருநகரை அண்டியதாக மிகையொலிவேக தாரைவிமானங்களும் உலங்கு வானூர்திகளும் வட்டமிட்டுக்கொண்டுள்ளதாம். (அப்பா சொன்னார்) வேட்டுச்சத்தங்கள் கேட்ப்பதாகவும் ஆனால் அது வெற்றிவாகைக்கானதா அல்லது விடுதியிலா என்று தெரியவில்லையாம்...

Trans Asia hotel என்று முன்னர் அழைக்கப்படும் Cinnamon Hotel ல் தான் இந்த பிரச்சனை..
http://www.cinnamonhotels.com/upmain/lakeside92.jpg

என்னவன் விஜய்
27-01-2010, 10:49 AM
18 லட்சம் பெரும்பான்மை என்றால் சும்மாவா என்ன!

இனி எல்லா நாடகமும் நடக்கும்.

சிவா.ஜி
27-01-2010, 10:56 AM
ஆமாம் எல்லா நாடகமும் நடக்கும்...வழக்கம்போல உலகநாடுகள் கட்டணமில்லாமல் கண்டு ரசிக்கும்.....

அன்புரசிகன்
27-01-2010, 11:02 AM
விடுதிக்கான அனைத்து உள்வாங்கல் வெளிவாங்கல்களும் முடக்கப்பட்டு சரணடைவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்...

தான் இராணுவ இரகசியங்களை வெளியிட்டதால் தன்னை கைதுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதனால் தான் தான் உள்ளே இவ்வாறான நிலையில் உள்ளதாகவும் சொல்லியுள்ளார்...

ஆனால் இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல இந்த செய்தியை மறுத்துள்ளார். இது கட்டுக்கதை என்றும் அவ்வாறான எந்த முனைப்பும் தமக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்...

சுற்றிவளைக்கப்பட்டுள்ள சினமன் விடுதி
http://www.dailymirror.lk/images/DSC_6296-Main-600-1.jpg
http://www.dailymirror.lk/images/DSC_6310-In%203-600-4.jpg

அன்புரசிகன்
28-01-2010, 12:58 AM
http://www.youtube.com/watch?v=bY6foimxHs0

aren
28-01-2010, 01:54 AM
அன்பு என்னை நடுத்தெருவிற்கு கொண்டு வருவதற்கு நல்ல பிளான் போலிருக்கே. அதில் சிவாஜியும் வேறு சேர்ந்துகொண்டிருக்கிறார்.

விகடன்
28-01-2010, 04:19 AM
இராணுவ இரகசியத்தை வெளியிட்டுவிட்டார் என்று குற்றம் சாட்டம் பட்டு சரணடையச் சொன்னால் அவருடைய அமெரிக்க பச்சை அட்டையினை என்ன செய்வது?

அமரன்
28-01-2010, 05:24 AM
அன்பு என்னை நடுத்தெருவிற்கு கொண்டு வருவதற்கு நல்ல பிளான் போலிருக்கே. அதில் சிவாஜியும் வேறு சேர்ந்துகொண்டிருக்கிறார்.
பயப்படாதீங்க. நடுத்தெருவில சும்மா விடமாட்டாங்க.. கையில் திருவோடு.

அன்புரசிகன்
28-01-2010, 09:57 AM
இராணுவ இரகசியத்தை வெளியிட்டுவிட்டார் என்று குற்றம் சாட்டம் பட்டு சரணடையச் சொன்னால் அவருடைய அமெரிக்க பச்சை அட்டையினை என்ன செய்வது?
அமெரிக்க பச்சை அட்டைக்கும் சரணடைவுக்கும் என்ன சம்பந்தம்... அவர் அமெரிக்க குடியுரிமை பெறவில்லையே... தவிர ஒரு நாட்டிலிருக்கும் போது அந்த நாட்டுக்கு எதிராக என்ன செய்தாலும் சட்டப்படி நடவெடிக்கை எடுக்க அந்த அரசினால் இயலும்.

இன்பக்கவி
28-01-2010, 10:34 AM
http://www.youtube.com/watch?v=bY6foimxHs0

இந்த வீடீயோ பார்த்தேன்
மரண பீதி என்பார்களே அது இது தான் போலிருக்கு:confused:

jayashankar
28-01-2010, 11:14 AM
இப்போதுதான் ஒரு வேதனையான நிகழ்ச்சி முடிந்தது.

இப்போது இந்த வேடிக்கை விநோத நிகழ்ச்சி தொடங்கிவிட்டது...

Narathar
28-01-2010, 11:22 AM
இந்த வீடீயோ பார்த்தேன்
மரண பீதி என்பார்களே அது இது தான் போலிருக்கு:confused:


எத்தனை பேருக்கு மரண பீதி அளித்தவர்???
அது என்னவென்று அவர் உணர வேண்டாமா?

ஆதி
28-01-2010, 11:31 AM
மார்ப்பில் பாயும் வளத்த கெடா - பொன்சேகா

அதை அடிக்கப் பார்க்கும் ராஜபக்ஷ

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்..

சிவா.ஜி
28-01-2010, 11:45 AM
பயப்படாதீங்க. நடுத்தெருவில சும்மா விடமாட்டாங்க.. கையில் திருவோடு.

நல்லா கெளப்புறாங்கய்யா பீதியை....!!!

ஓவியன்
28-01-2010, 05:56 PM
பயப்படாதீங்க. நடுத்தெருவில சும்மா விடமாட்டாங்க.. கையில் திருவோடு.

ஆமா,யாரு அந்த திரு...???

திரு சிவா.ஜி அவர்களா.......??? :rolleyes:

அமரன்
28-01-2010, 09:33 PM
ஆமா,யாரு அந்த திரு...???

திரு சிவா.ஜி அவர்களா.......??? :rolleyes:

செல்வன்(ம்):)

praveen
29-01-2010, 03:50 AM
காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது, இது இரண்டு பேருக்கும் தான்.

பொன்சேகா இருப்பதிலே மோசமான புத்தி கொண்ட தளபதி. இன்னும் ராணுவத்தில் செல்வாக்கு இருக்கிறதாமே.

ராசபக்சே கேவலமான ஜனாதிபதி, பதவிக்காக எதையும் செய்யும் ஆள்.

இரண்டில் ஒருவர் மற்றவர் சூழ்ச்சியில் செத்தால், கொண்ற பழியை தூக்கிப்போட இருக்கவே இருக்கிறார்கள் புலிகள் இயக்க எஞ்சிய உறுப்பினர்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே.

அய்யா
29-01-2010, 04:47 AM
பொன்சேகா இல்லம் திரும்பினார்..! ( நன்றி ; தினமலர்)

கொழும்பு:அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிட்ட, ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தங்கியிருந்தார். ஓட்டு எண்ணிக்கையில் அவர் பின்தங்கியதாக தகவல்கள் வெளியாயின.இதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த ஓட்டலை, ஏராளமான இலங்கை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். இதனால், பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும் பீதி அடைந்தனர்.தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் அச்சம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் பொன்சேகா ஓட்டலை விட்டு வெளியேறி, தனது வீட்டுக்கு சென்றார்.