PDA

View Full Version : அது....

கீதம்
26-01-2010, 09:37 AM
உள்ளங்காலை உரசியபடியே
கூச்சம் உண்டாக்கிய அதை
அக்கணமே உதறிவிடாதது
என் தவறென்றுதான் சொல்லவேண்டும்!

சிந்தனை மழுங்கலால்
அப்பரிசத்தை
சிறுபிள்ளையின் கைத்துழாவல் என
சிலபோது சிலிர்த்துநின்றேன்!

சுற்றிச்சுற்றி வந்து
தன் மென்ரோமங்களால் பாதம் உராயும்
செல்லப்பூனையின்
பாசவெளிப்பாடெனவும்
தவறாய் நினைத்துவிட்டேன்!

மெல்லத் தவழ்ந்து
அது மேலேறியபோதாவது
சற்றே விழிப்புற்று
தந்திரமாயேனும்
தரையிறக்கிவிட்டிருக்கவேண்டும்!

சரியாக கணித்திராதது
என் மடத்தனமே!

காட்டுக்கொடியென கணப்பொழுதில்
கால்களில் பற்றிப்படர்ந்து
இடையை ஆக்கிரமித்த
அதன் இரும்புப்பிடியைக்கூட
இடுப்புக்குழந்தையின் இறுக்கிய
கால்பின்னலென்றே
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாய்
என் நெஞ்சக்கூட்டின் மீதமர்ந்து
நிதானமாய் என் கழுத்தைக் கவ்வியபோதுதான்
கவனிக்க நேர்ந்தது, அதன்
கடுமையான ஆக்ரோஷத்தை!

அவதானிக்கும் முன்பாகவே
அழுத்தி என் குரல்வளை நெரித்து
என் மூச்சடக்கி
அதுவும் போதாதென்று
ஆரவாரமாய் என் உச்சந்தலைமயிரைப்
பிடித்துலுக்கியும், கோரப்பல் காட்டியும்
கும்மாளம் போடுகிறது அது!

நினைவு மங்கிச்சாயும்
என் இறுதித் தருணங்களிலும்
ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்
அப்போதும் அதனைச் சபிக்காமல்
வாளாவிருக்கிறேன்!

jayashankar
26-01-2010, 10:09 AM
அது எதுவாக இருந்தாலும் சரி, நம்மை கட்டிப்போட வைக்கும் வரிகளுடன் அழகான வர்ணனையுடனும், அதன் ஆக்கிரமிப்பை மிக அழகாக விளக்கியுள்ளவிதம் மிகவும் அருமை...

வயதுக்கேற்ப அறிவுக்கேற்ப அது என்பதை வாசகர்களின் ஊகத்திற்கு கொடுத்திருக்கும் கடைசி வரி வரை திகில் தொடர்வது மெய்.

நல்ல கவிதை.

நன்றி கீதம் அவர்களே

சிவா.ஜி
26-01-2010, 10:40 AM
எதுவாக வேண்டுமானாலும் யூகித்துக்கொள்ளலாம் அதுவை என்பதே இக்கவிதையின் பிரத்தியேகத்தன்மை. ஜெய் சொன்னதைப் போல வார்த்தைகளை கோர்த்த விதம் மிக அருமை.

நினைவு மங்கும் தருணத்திலும் ஒரு கவிதை பிறக்க காரணமானதை..சபிக்காமல் விட்டு அழகாய் முடித்திருக்கிறீர்கள்.

இப்படிப்பட்டக் குறியீட்டுக் கவிதை எழுத வார்த்தைகளில் நல்ல புலமை இருக்க வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் கீதம்.

பா.ராஜேஷ்
26-01-2010, 11:39 AM
அது... நல்ல கவிதை
அதில்... மிக நல்ல வரிகள்
அதை... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்
அதற்கு... என் மனமார்ந்த பாராட்டுக்கள் :)

இன்பக்கவி
26-01-2010, 04:45 PM
ஒரு திகில் படம் போல இருக்கு...
நல்ல கவிதை...:icon_b:...
ஆமாம் அந்த அது எது எனக்கு மட்டும் சொல்லுங்களேன்:traurig001:

ஜனகன்
26-01-2010, 05:17 PM
அருமையாக கவிதை வடித்துள்ளீர்கள்.உங்கள் கவிதைகளில் இது வித்தியாசமானது.அது அது என,
எது என எம்மை சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அசத்துங்க தொடர்ந்து.

கீதம்
26-01-2010, 07:53 PM
அது எதுவாக இருந்தாலும் சரி, நம்மை கட்டிப்போட வைக்கும் வரிகளுடன் அழகான வர்ணனையுடனும், அதன் ஆக்கிரமிப்பை மிக அழகாக விளக்கியுள்ளவிதம் மிகவும் அருமை...

வயதுக்கேற்ப அறிவுக்கேற்ப அது என்பதை வாசகர்களின் ஊகத்திற்கு கொடுத்திருக்கும் கடைசி வரி வரை திகில் தொடர்வது மெய்.

நல்ல கவிதை.

நன்றி கீதம் அவர்களே

கவிதைக்கருவைத் துல்லியமாய்ப் புரிந்துகொண்டு இடப்பட்ட முதல் பின்னூட்டம் என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி ஜெயசங்கர் அவர்களே.

கீதம்
26-01-2010, 07:58 PM
எதுவாக வேண்டுமானாலும் யூகித்துக்கொள்ளலாம் அதுவை என்பதே இக்கவிதையின் பிரத்தியேகத்தன்மை. ஜெய் சொன்னதைப் போல வார்த்தைகளை கோர்த்த விதம் மிக அருமை.

நினைவு மங்கும் தருணத்திலும் ஒரு கவிதை பிறக்க காரணமானதை..சபிக்காமல் விட்டு அழகாய் முடித்திருக்கிறீர்கள்.

இப்படிப்பட்டக் குறியீட்டுக் கவிதை எழுத வார்த்தைகளில் நல்ல புலமை இருக்க வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் கீதம்.

ஆம்! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். படிப்பவரின் மனநிலையைப் பொறுத்தும், அவரது அனுபவ அறிவைப் பொறுத்தும் அது மாறலாம்.
நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
26-01-2010, 08:00 PM
அது... நல்ல கவிதை
அதில்... மிக நல்ல வரிகள்
அதை... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்
அதற்கு... என் மனமார்ந்த பாராட்டுக்கள் :)

உங்கள் பின்னூட்டத்தை ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

கீதம்
26-01-2010, 08:07 PM
ஒரு திகில் படம் போல இருக்கு...
நல்ல கவிதை...:icon_b:...
ஆமாம் அந்த அது எது எனக்கு மட்டும் சொல்லுங்களேன்:traurig001:

நன்றி இன்பக்கவி அவர்களே. ரொம்பவும் பயந்துவிட்டீர்களா, என்ன?

(அது.....நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவமே. என்னைப் பாதித்த அதன் பெயரைச் சொல்லி ரசிப்பவர் சிந்தனைக்குத் தடைபோட நான் விரும்பவில்லை.)

கீதம்
26-01-2010, 08:09 PM
அருமையாக கவிதை வடித்துள்ளீர்கள்.உங்கள் கவிதைகளில் இது வித்தியாசமானது.அது அது என,
எது என எம்மை சிந்திக்க வைத்து விட்டீர்கள்.அசத்துங்க தொடர்ந்து.

நன்றி ஜனகன் அவர்களே.

சிந்தியுங்கள்! கண்டுகொள்வீர்கள்!

Akila.R.D
27-01-2010, 04:21 AM
மிகவும் அருமை...
அவரவர் வயது, சூழ்நிலை, சிந்தனை,அறிவுக்கேற்ப அந்த அதுவை வைத்துக்கொள்ளலாம்..

கீதம்
27-01-2010, 08:29 PM
மிகவும் அருமை...
அவரவர் வயது, சூழ்நிலை, சிந்தனை,அறிவுக்கேற்ப அந்த அதுவை வைத்துக்கொள்ளலாம்..

நன்றி அகிலா அவர்களே.

Ravee
27-01-2010, 09:57 PM
காலா என் காலருகே வாடா என்று கடைசி நேரத்திலும் கவி பாடிய பாரதி கண்ணுக்கு முன் வந்து போனார் கீதம்.

இளசு
28-01-2010, 04:40 AM
காற்று - ஒன்று
தென்றல், சூறை,புயல், வாடை - பல

நீர் - ஒன்று
ஆறு,குளம்,அருவி,கடல், வெள்ளம் - பல

அது - ஒன்று
ஆசை, அச்சம், பழக்கம், உறவு, நட்பு - பல

இப்படியும் எழுத இயலுமா என வியக்க வைத்த கவிதை.

கவிதைக்குக் கட்டியம் சொல்லும் நயமான பின்னூட்டங்கள்.

பாராட்டுகள் படைத்த கீதத்துக்கும், பின்னூட்டிய நண்பர்களுக்கும்..

செல்வா
30-01-2010, 03:44 AM
சிவா அண்ணாவின் பின்னூட்டமே என்னுதும்.

வார்த்தைகள் உங்கள் முன் கைகட்டி சேவகம் புரிகின்றன.

நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் கீதம்.

கீதம்
30-01-2010, 07:08 AM
காலா என் காலருகே வாடா என்று கடைசி நேரத்திலும் கவி பாடிய பாரதி கண்ணுக்கு முன் வந்து போனார் கீதம்.

நன்றி ரவீ அவர்களே.

கீதம்
30-01-2010, 07:12 AM
காற்று - ஒன்று
தென்றல், சூறை,புயல், வாடை - பல

நீர் - ஒன்று
ஆறு,குளம்,அருவி,கடல், வெள்ளம் - பல

அது - ஒன்று
ஆசை, அச்சம், பழக்கம், உறவு, நட்பு - பல

இப்படியும் எழுத இயலுமா என வியக்க வைத்த கவிதை.

கவிதைக்குக் கட்டியம் சொல்லும் நயமான பின்னூட்டங்கள்.

பாராட்டுகள் படைத்த கீதத்துக்கும், பின்னூட்டிய நண்பர்களுக்கும்..

ஆழ்ந்த பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.

கீதம்
30-01-2010, 07:13 AM
சிவா அண்ணாவின் பின்னூட்டமே என்னுதும்.

வார்த்தைகள் உங்கள் முன் கைகட்டி சேவகம் புரிகின்றன.

நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் கீதம்.

உங்களைப்போன்ற கவிஞர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழுதவைக்கின்றனன். பாராட்டுக்கு நன்றி செல்வா அவர்களே.

கலையரசி
30-01-2010, 09:40 AM
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். 'அது' எதுவாகயிருந்தாலும் ஆரம்பத்திலேயே விழிப்பின்றி அசட்டையாய் இருப்போர்க்கு இப்படிப்
பட்ட முடிவு நேரும் என்று இக்கவிதை எச்சரிக்கை விடுப்பதாகவும் எனக்குத்
தோன்றுகிறது. வாசகரைச் சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை.

ஆர்.ஈஸ்வரன்
30-01-2010, 10:12 AM
நல்ல கவிதை.

அமரன்
30-01-2010, 08:51 PM
கவிதை கடைசியில் காட்டி நிற்பது என்ன? அதுதான் கீதம் சொன்ன அதை விட முக்கியமானது.

நம்மில் எத்தனை பேர் சாவைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம்.

மாழும் தறுவாயிலும் மகிழ்வுடன் வாழ் எனும் அழகு கவிதையின் அவதாரம்.

கவிஞன் என்பவன் உணர்வுகளின் ஊற்றுகண்ணாக இருந்தாலும் அழகுணர்ச்சி அவனது ஆதாரம். அழகு மகிழ்வின் அடிநாதம்.

நடந்தது நடந்து போச்சு.. என்ற சமாளிப்புச் சந்தோசத்தை வெளித்தெரிய விடாமல் இருக்க கவிஞனை பயன்படுத்தியிருப்பது கவிதையின் தனிச்சிறப்பு.

பாராட்டுகள் கீதம்

கீதம்
02-02-2010, 10:47 PM
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காது விடாது என்பார்கள். 'அது' எதுவாகயிருந்தாலும் ஆரம்பத்திலேயே விழிப்பின்றி அசட்டையாய் இருப்போர்க்கு இப்படிப்
பட்ட முடிவு நேரும் என்று இக்கவிதை எச்சரிக்கை விடுப்பதாகவும் எனக்குத்
தோன்றுகிறது. வாசகரைச் சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை.

நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
02-02-2010, 10:48 PM
நல்ல கவிதை.

நன்றி ஈஸ்வரன் அவர்களே.

கீதம்
02-02-2010, 10:50 PM
கவிதை கடைசியில் காட்டி நிற்பது என்ன? அதுதான் கீதம் சொன்ன அதை விட முக்கியமானது.

நம்மில் எத்தனை பேர் சாவைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறோம்.

மாழும் தறுவாயிலும் மகிழ்வுடன் வாழ் எனும் அழகு கவிதையின் அவதாரம்.

கவிஞன் என்பவன் உணர்வுகளின் ஊற்றுகண்ணாக இருந்தாலும் அழகுணர்ச்சி அவனது ஆதாரம். அழகு மகிழ்வின் அடிநாதம்.

நடந்தது நடந்து போச்சு.. என்ற சமாளிப்புச் சந்தோசத்தை வெளித்தெரிய விடாமல் இருக்க கவிஞனை பயன்படுத்தியிருப்பது கவிதையின் தனிச்சிறப்பு.

பாராட்டுகள் கீதம்
ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி அமரன் அவர்களே.

குணமதி
04-02-2010, 04:20 AM
அருமையான பொருள்!

திறமையான வெளிப்படுத்தம்!

கீதம்
04-02-2010, 06:38 AM
அருமையான பொருள்!

திறமையான வெளிப்படுத்தம்!

நன்றி குணமதி அவர்களே.