PDA

View Full Version : உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பேசும் காரைக்குடி மாணவி



muthuvel
26-01-2010, 08:43 AM
காரைக்குடி : கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேச, காரைக்குடி மாணவி உய்யவந்தாள்(14), தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இவர், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் திறன் பெற்றவர். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே 3,000க்கும் மேற்பட்ட பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வல்லமை பெற்றிருந்தார். மாவட்டத்தில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் தவறாமல் பங்கேற்பது இவரது வழக்கம். இதுவரை 132 மேடைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
கட்டுரை, பேச்சில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட ஆறு மாவட்டத்தில், இவர் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காரைக்குடி அருகே குளப்படியில் மளிகை கடை நடத்தி வரும் இவரது தந்தை சின்னையா கூறுகையில், "திருக்குறள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்களை முழுமையாக ஒப்புவிப்பார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேச அழைப்பு விடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

nandri dinamalar