PDA

View Full Version : ஒரு நடிகனின் வேதனை

muthuvel
26-01-2010, 07:31 AM
படபிடிப்பில் நானிருந்தால் ,
நாள் ஓடுவது தெரியாது ,
நேரம் நகருவது புரியாது ,
உணவுக்கு நேரம் இல்லை,
உறவுகளோடு பேச வாய்ப்பு இல்லை ,
உழைப்பு மட்டும்தான் கூட வரும்,

ஒவ்வொரு படமும் எனக்கு, தலை பிரசவச
வேதனைதான்,
வெற்றி அடையும் வரை ,

பங்காளிகளுக்கு பதில் சொல்லணும் ,
பணம் போட்ட முதலாளிக்கு பதில் சொல்லணும் ,
பத்திரிகைக்கு பதில் சொல்லணும் ,
பக்கத்துக்கு வீட்டுக்காரன் முகம் முழிக்கணும் ,
படம் தோற்றுபோனா ,

சிலமணி நேரந்தான் ,ரசிகனான, நீ சிரிக்க,
பல மணி நேரம் உறங்காமல் நான் இருந்தேன் ,
உனக்காக வரைந்த என் படம், என்னும் ஓவியத்துல,
அதன் வண்ணங்களாக என் வியர்வையத்தான் வரஞ்சு வச்சேன் ,
இதில் ஒரு துளி வியர்வை கூட ,அதிக உப்பிலாம இருந்தாலும் ,
குற்றங்குறை சொல்லிடுவ ,
உப்பில்லாத பண்டமின்னு

வீடு வாசல் அடகு வச்சேன்,
பொண்டாட்டி தங்க தாலியையும் அடகு வச்சேன் ,
ஆறரை கோடி கடவுளான உன் பொழுதை போக்குவதற்கு ,

குறுக்கு தரிசனமா, சிலபேரு திருட்டு தனமா
வீ சி டி எடுப்பான் ,
அந்த களையை நான் பிடுங்க, எந்த சாமிக்கிட்ட நான் போவேன் ,

போட்டி பொறாமை அதிகம் உண்டு,
குழி பறிக்கும் கூட்டம் உண்டு,
இத்தனையும் சமாளிச்சு, நான் ஜெயிச்சு நின்னாலும் ,
சுதந்திர காற்று சுவாசிக்க, என்னால்தான் முடியல ,

என்னை சுற்றி ஆயிரம் கண்கள் ,
என்னையே சுற்றி வட்டமிட்டு பார்க்க,
கஷ்டப்பட்டு நான் உழைசாலும்,
இஷ்டப்படி வாழ ,என்னால்தான் முடியல,

திறமை இல்லாதவன் மேல வரலாம் ,
உலகத்தில எல்லா வேலைக்கு
சிபாரிசு உண்டு ,
ஆனா ,
சிபாரிசு இருந்தாலும் திறமை வேணும் ,
எங்க தொழில், மட்டும்தான் ,

சிவா.ஜி
26-01-2010, 07:45 AM
மின்னும் நட்சத்திரமாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தையும், அவர்களின் கடின உழைப்பையும் சொல்லும் கவிதை.

வரிகள் அழகாய் இருக்கின்றன முத்துவேல். பாராட்டுக்கள்.

muthuvel
27-01-2010, 06:23 AM
மின்னும் நட்சத்திரமாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தையும், அவர்களின் கடின உழைப்பையும் சொல்லும் கவிதை.

வரிகள் அழகாய் இருக்கின்றன முத்துவேல். பாராட்டுக்கள்.

இதுதான் இப்பொழுது அவர்கள் படும் பாடு ,

பா.ராஜேஷ்
27-01-2010, 09:09 AM
படம் தோல்வி அடைவதற்கு ஊடகம் (மீடியா ) வும் மிக பெரிய காரணம் தானே... அதை விட்டு ரசிகனை மட்டும் குறை சொல்வது எவ்வகையில் நியாயம் ?

இன்பக்கவி
27-01-2010, 09:31 AM
நல்ல கதையை தேர்ந்து எடுத்து இத்தனை உழைப்பையும் அதில் சேர்த்தால் நிச்சயம் வெற்றி தானே:icon_b::icon_b:

ஆர்.ஈஸ்வரன்
27-01-2010, 09:40 AM
பாராட்டுக்கள்.

muthuvel
27-01-2010, 10:17 AM
நல்ல கதையை தேர்ந்து எடுத்து இத்தனை உழைப்பையும் அதில் சேர்த்தால் நிச்சயம் வெற்றி தானே:icon_b::icon_b:

நன்றி நன்றி

muthuvel
28-01-2010, 02:40 AM
பாராட்டுக்கு நன்றி

Akila.R.D
28-01-2010, 02:55 AM
ஒரு நடிகனின் மனதை அழகாக காட்டியுள்ளார்...

muthuvel
28-01-2010, 05:17 AM
பாராட்டுக்கு நன்றி

muthuvel
28-01-2010, 02:36 PM
நல்ல கதையை தேர்ந்து எடுத்து இத்தனை உழைப்பையும் அதில் சேர்த்தால் நிச்சயம் வெற்றி தானே:icon_b::icon_b:

இப்பொழுது நல்ல கதையும்தோற்றுவிடுகிறது ,

muthuvel
03-02-2010, 04:06 AM
மின்னும் நட்சத்திரமாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தையும், அவர்களின் கடின உழைப்பையும் சொல்லும் கவிதை.

வரிகள் அழகாய் இருக்கின்றன முத்துவேல். பாராட்டுக்கள்.

நன்றி நன்றி