PDA

View Full Version : ஏன் பிறந்தோம்



ஜேஜே
25-01-2010, 12:34 PM
ஏன் பிறந்தோம்


வளங்களை குறைக்க அல்ல
பெருக்க பிறந்தோம்..

வலியோரை மிதிக்க அல்ல
மதிக்க பிறந்தோம்..

காடுகளை அழிக்க அல்ல
வளர்க்க பிறந்தோம்..

செல்வத்தை செலவழிக்க அல்ல
சேமிக்க பிறந்தோம்..

கல்வியை விற்க அல்ல
கற்க பிறந்தோம்..

கலாச்சாரத்தை சீர்குலைக்க அல்ல
பாதுகாக்க பிறந்தோம்..

சாதி மதங்களால் பிரிந்துக்கிடக்க அல்ல
சகோதரத்துவத்தில் மலர பிறந்தோம்..

குழந்தையாய் பிறந்து
இளைஞராய் உயர்ந்து
சிற்றின்பங்களில் விழுந்து
பேரின்பங்களை தொலைத்து
வெம்மையாக சாக அல்ல...

தடைகளை தகர்த்தெறிந்து
எல்லைகளை உடைத்தெறிந்து
சாதிக்க பிறந்தோம் இவ்வுலகில்...

ஆதி
25-01-2010, 12:35 PM
இந்தியாவில் என்பதை காட்டிலும் இந்த பூமியில் என்று இருந்தால் உங்கள் சிந்தனை உங்கள் அவதாருக்கு ஏற்ப இருந்திருக்கும் என்பது என் கருத்து..

நன்றி..

இளசு
25-01-2010, 08:58 PM
குடியரசு தினத்தில்
கூட்டல் சிந்தனை ஊட்டும் கவிதை..


பாராட்டுகள் ஜேஜே அவர்களே!

Mano.G.
26-01-2010, 02:31 AM
இந்தியனாக மட்டுமல்லாமல்,
மனிதனாய், மனித நேயத்துடன்
இம்மண்ணில் வாழ பிறந்தோம்.

வாழ்த்துக்கள் ஜே.ஜே



மனோ.ஜி

சிவா.ஜி
26-01-2010, 04:13 AM
நல்ல சிந்தனையை அழகாய் தெளிக்கும் வரிகள். சாதிக்கப் பிறந்தோம் இப்பூமியில் என்றிருந்தால், ஆதன் சொல்வதைப்போல இன்னும் அழகாய் இருக்கும்.

வாழ்த்துகள் ஜேஜே.

இன்பக்கவி
26-01-2010, 04:20 AM
எல்லாமே சரி..
ஆனால் எதுவுமே இல்லை இன்றைய சுழலில்..
பிறந்தோம் வளர்ந்தோம் என்று இருக்கும் நிலை மாறினால் இந்தியா மட்டும் அல்ல எல்லாம் நாடுகளும் வளமாய் இருக்கும்..
வாழ்த்துக்கள்
தொடருங்கள் உங்கள் கவி பயணத்தை

ஜேஜே
26-01-2010, 01:38 PM
சான்றோரின் கருத்துக்களை கேட்டு இந்தியாவில் என்பதை இவ்வுலகில் என மாற்றிவிட்டேன்.. கருத்தளித்து வாழ்த்தியதற்கு நன்றிகள் கோடி...

பாலகன்
29-01-2010, 10:27 AM
அருமையானதொரு சிந்தனை, இன்னைய காலகட்டங்களில் குறைபாடாக உள்ள இந்த கருத்துக்களை மக்கள் மனதுகளில் கடவுளே சென்று விதைத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.. ஒரு ஆசைதான்.

செல்வா
30-01-2010, 03:35 AM
எல்லைகள் என்று எடுத்துக் கொண்டால்
நாடு இனம் மொழி மதம் என்ற எல்லா எல்லைகளுமே உடைய வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலை வரவேண்டும்

வாழ்த்துக்கள் ஜேஜே

ஜேஜே
22-11-2010, 02:57 PM
எனது முதல் படைப்பை கருத்துக்களின் மூலம் செழிப்பாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.:)

அமரன்
24-11-2010, 06:24 PM
நல்ல சிந்தனை..

நீங்கள் சொன்ன பலதும் பகிர்ந்துண்ணப்பட வேண்டியன.