PDA

View Full Version : தூத்துக்குடி விமான நிலையம்



karthik-gopal
25-01-2010, 08:34 AM
தூத்துக்குடி விமான நிலையம் 600 ஏக்கரில் விரிவாக்கம்:இரவு நேர விமான சேவை துவங்கவும் ஏற்பாடு
ஜனவரி 25,2010,00:00 IST

தூத்துக்குடி: தூத்துக்குடி, வாகைகுளம் விமான நிலையம், 600 ஏக்கரில் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதுதவிர, தனியாக 110 ஏக்கரில் இங்கு இந்திய விமானப்படை மற்றும் கடலோரகாவல்படைக்கான விமானத்தளங்கள் அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியிலிருந்து 20 கி.மீ., தூரத்திலுள்ள வாகைகுளம் விமான நிலையம் 1992ல் திறக்கப்பட்டது. அதன்பின், சில ஆண்டுகள் பயணிகள் விமானம் இயக்கப்பட்டது. 1996 முதல் 2006 வரை பயணிகள் விமான சேவை இல்லை. அரசியல்வாதிகள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோர் சிறிய ரக விமானங்கள், ஹெலிக்காப்டரில் அவ்வப்போது இங்கு இறங்குவர்.




இந்நிலையில், 2006 ஏப்.,1 முதல் தினமும் பகலில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ஒரு விமானத்தை தவிர வேறெந்த விமானமும் இயக்கப்படவில்லை. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின்நிலையம் போன்ற மத்திய, மாநில அரசு நிறுவனங்களும், பல தனியார் நிறுவனங்களும் உள்ளன. அதனால், தொழில் நிமித்தமாக தினமும் பலர், சென்னையிலிருந்து வருகின்றனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சென்னை - தூத்துக்குடி இரு மார்க்கத்திலும், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கூடுதலாக விமானங்களை இயக்கவேண்டும், இரவு நேரத்தில் விமானம் வந்துசெல்ல வசதி செய்து தரவேண்டுமென தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.




600 ஏக்கரில் விரிவாக்கம்: வாகைகுளம் விமான நிலையம் தற்போது, 50 ஏக்கர் பரப்பில் மட்டுமே அமைந்துள்ளது. அதன் ஓடுபாதை நீளம் 1,351 மீட்டர். அனைத்துதரப்பினரின் வேண்டுகோளை ஏற்று, விமான நிலையம் கூடுதலாக 600 ஏக்கரில் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன் ஓடுபாதையின் நீளம் 4.5 கி.மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. இப்பணிக்காக சுற்றுப்புற கிராம மக்களின் நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு 30.5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. அதுதொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் கோ.பிரகாஷ், டி.ஆர்.ஓ.,துரைரவிச்சந்திரன் ஆகியோர் விமானநிலையத்தை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தமிழக அரசு மற்றும், விமான போக்குவரத்துதுறைக்கு அனுப்பி உள்ளனர். அரசின் அனுமதி கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்தப்படும் பணி துவங்கி, விமான நிலையம் விரைவில் விரிவுபடுத்தப்படும். அப்போது, இரவு நேரத்திலும் விமானங்கள் வந்துசெல்ல மின்விளக்கு வசதி செய்துதரப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டு விமானத்தளங்கள்:அதுதவிர , தென் தமிழக பாதுகாப்பிற்காக, இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவ படை விமானங்கள், வந்து செல்ல வசதியாக மொத்தம் 110 ஏக்கரில், தனித்தனியாக இரண்டு விமானத்தளங்கள், இங்கு அமைக்கப்பட உள்ளன. விரிவாக்கப்பணிகளுக்காக, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில், எதுவும் விவசாய நிலம் இல்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

karthik-gopal
25-01-2010, 08:41 AM
கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கனவான விமான நிலையம் எப்பொது வருகிறதோ தெரிய வில்லை?நமது அண்டை மாநிலமான சின்னஞ்சிறிய கேரளாவை விட நமது மாநிலத்தில் விமான போக்குவரத்துக்கு குறைவு தான்.