PDA

View Full Version : ஹைக்கூகள் ...



muthuvel
25-01-2010, 06:52 AM
நெடுந்தூர பயணம் ,
வழியில் நெருஞ்சி முள்...
மோட்டல்கள் ...

நெடுஞ்சாலை வழிப்பறி ,
தடுக்க ஆள் இல்லை ,
மோட்டல்கள் ...

கட்டமுடியவில்லை,
பூனைக்கு மணி,
அரசும் ,
சாப்பிட்டதற்கு மணி,
மக்களும் ,
மோட்டல்களுக்கு ...


தறி உண்டு ,
வருமானம் என்னும் விசை இல்லை ,
நெசவாளி ...

குடி-அரசு ,
மக்களுக்கு,
டாஸ்மார்க் ...

சோதனை இரு நாட்கள் ,
சுதந்திரம் மீதி நாட்கள்,
சுதந்திர, குடியரசு தினம் ...

அக்னி
25-01-2010, 06:58 AM
‘மோட்டல்கள்’ என்றால் என்ன?

இறுதி ஹைக்கூ ‘நச்’ ரகம்.

ஒரு சின்ன கவிதை நினைவுக்கு வருகின்றது.
சுதந்திர தின உரை,
குண்டு துளைக்காத
கண்ணாடிக்கூண்டுக்குள்
பிரதமர்...

எது எமக்குக் கிட்டிய சுதந்திரம்...
என்பதில் இன்னமும் தெளிவுதான் இல்லை.

பாராட்டுக்கள்.

muthuvel
25-01-2010, 07:15 AM
மோட்டல்கள் என்றால் ,
நெடுந்தூரம் பேருந்து பயணம் செய்யும்போது ,
வழியில் சாப்பிடுவதற்கு கடைகள் இருக்கும் ,
பயணிகளுக்கு , அதைதான் மோட்டல்கள் என்பார்கள் ,
அவற்றின் உணவின் தரம் மோசமாக இருக்கும் ..

அக்னி
25-01-2010, 07:29 AM
உடன் விளக்கத்திற்கு நன்றி.

இப்போ தெரிகின்றது,
அந்த ஹைக்கூக்களினதும் ‘நச்’ கள்...

அந்நியன் படப் பொரியற் தண்டனை நினைவுக்கு வருகின்றது.
தப்பேயில்லை....

aren
25-01-2010, 07:34 AM
மோட்டல்கள் என்றால் பட்ஜெட் விடுதிகள். நெடுஞாலைகளில் செல்லும்பொழுது கொஞ்சம் இளைப்பாருவதற்கு ஏற்றவாறு குறைந்தவிலையில் கிடைக்கும். நோ ஃபிரில்ஸ் ஓட்டலை மோட்டல் என்பார்கள். பெட் அண்ட் பிராக்பாஃஸ்ட் என்ற இடத்திற்கு மோட்டல் என்பர்.

சிவா.ஜி
25-01-2010, 07:38 AM
நல்ல வரிகள். உண்மைதான்...நெடுஞ்சாலை ஹோட்டல்களில் அநியாய விலை. வழியில்லாத பயணிகள் வலியோடு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அப்புறம் முத்துவேல்...டாஸ்மாக்....விடுமுறை மூன்று நாட்கள்...காந்தி ஜெயந்தியையும் சேர்த்து....ஹி...ஹி...ஆனா குடிமகன்கள் கில்லாடிகள்....முதல் நாளே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வார்கள்.

பாராட்டுக்கள் முத்துவேல்.

muthuvel
25-01-2010, 02:48 PM
நெடுந்தூர பயணம் ,
வழியில் நெருஞ்சி முள்...
மோட்டல்கள் ...

நெடுஞ்சாலை வழிப்பறி ,
தடுக்க ஆள் இல்லை ,
மோட்டல்கள் ...




தறி உண்டு ,
வருமானம் என்னும் விசை இல்லை ,
நெசவாளி ...

குடி-அரசு ,
மக்களுக்கு,
டாஸ்மார்க் ...

சோதனை இரு நாட்கள் ,
சுதந்திரம் மீதி நாட்கள்,
சுதந்திர, குடியரசு தினம் ...

கட்டமுடியவில்லை,
பூனைக்கு மணி,
அரசும் ,

சாப்பிட்டதற்கு மணி,
மக்களும் ,
மோட்டல்களுக்கு ...

வானதிதேவி
25-01-2010, 03:42 PM
யதார்த்தமான நிகழ்வுகள் வலியோடு.அருமை முத்து.

அனுராகவன்
26-01-2010, 11:04 AM
அருமை நண்பரே..

muthuvel
27-01-2010, 10:11 AM
பாராட்டுக்கு நன்றி