PDA

View Full Version : சினிமா மீது வெறிபிடித்த ரசிகன்



muthuvel
25-01-2010, 05:32 AM
எனக்கு நீ உணமையாக,
உனக்கு நான் நடிகனாக ,

என் படத்திற்கு நீ மாலை ,
உன் புகைபடத்திற்கு நான் மாலை , நீ இறந்தபிறகு ...

சிவா.ஜி
25-01-2010, 05:40 AM
கவிதை நல்லாருக்கு....ஆனா...இதுல நடிகனோட தப்பு என்ன இருக்கு? ரசிகனா இருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தலையே...?

muthuvel
25-01-2010, 06:22 AM
நடிகனை குறை சொல்லவில்லை ,
ரசிகனைத்தான் ?

சிவா.ஜி
25-01-2010, 07:21 AM
உண்மைதான் முத்துவேல்....ரசிகனால் நடிகருக்கு கிடைக்கும் லாபங்களையும், ரசிகனுக்கு எதுவுமே கிடைப்பதில்லை என்பதையும் சொல்லியிருக்கீங்க. என்னதான் எடுத்துச் சொன்னாலும், இவங்க கேக்க மாட்டாங்க....கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்றவங்களை எப்படி திருத்த முடியும்?

ஜனகன்
25-01-2010, 07:53 AM
படத்தை பார்த்தோமோ, ரசித்தோமோஎன்றிருக்கவேண்டும்.
அதற்கும் மேலேபோய் கட் அவுட்டு, பாலாபிஷேகம் என்றால்,
என்னால் நீ வறுமையில்,
உன்னால் நான் செழுமையில்...
இப்படித்தான்
கவிதை வரிகள் நன்று, வாழ்த்துகின்றேன்.

ஆதி
25-01-2010, 12:34 PM
செயற்கை இருட்டை
வாரி
வாழ்விற்கு கரி பூசும் ரசிகர்கள்..
வெளிச்சமாகிறார்கள் நடிகர்களின்
வாழ்விற்கு..

வெளிச்சங்கள் தம் வெளிச்சத்தை உணராததால்
வெளிரிப்போகின்றன
அவர்களின் வாழ்க்கை..

ஒவ்வொரு கதா நாயகனும்
தன் நற்குணத்தை நிரூப்பிக்க
ஒரு வில்லன் தேவைப்படுகிறான்..

ஒவ்வொரு நடிகனுக்கு
தன் சம்பளத்தை நிர்ணயிக்க
ஒரு ரசிகன் தேவைப்படுகிறான்..


வில்லன்களுக்கும்
ரசிகர்களுக்கும் என்றும்
பெரியவித்யாசம் இருந்ததில்லை..

வாழ்த்துக்கள் முத்துவேல்..

கலையரசி
26-01-2010, 05:03 AM
"எனக்காக நீ ,என் பெயரை நெஞ்சில் பச்சை குத்துவாய் ,
உன்னால் நான் என் பர்சை நிரப்புவேன் ..."
கவிதை வரிகள் நன்று.
உண்மை தான். ரசிகர்கள் தயவால் தான் நடிகர்கள் கொழிக்கிறார்கள்.

muthuvel
26-01-2010, 06:06 AM
"எனக்காக நீ ,என் பெயரை நெஞ்சில் பச்சை குத்துவாய் ,
உன்னால் நான் என் பர்சை நிரப்புவேன் ..."
கவிதை வரிகள் நன்று.
உண்மை தான். ரசிகர்கள் தயவால் தான் நடிகர்கள் கொழிக்கிறார்கள்.

பாராட்டுக்கு நன்றி சகோதரி

rajarajacholan
26-01-2010, 06:14 AM
முத்துவேலன்னே, அது வியாபாரம். அவங்க ப்ராடக்ட் தராங்க (Cinema), நாம வாங்கறோம் (Ticket) ரொம்ப பிடிச்சு போயி சில பேரு, அந்த தொழிலதிபர்களை பாலாபிசேகம் பன்றாங்க. இதில கொஞ்சம் கூட நடிகர்கள் மேல தப்பே இல்லை. அதனால உங்அ கவிதை செல்லாது.

muthuvel
26-01-2010, 06:17 AM
முத்துவேலன்னே, அது வியாபாரம். அவங்க ப்ராடக்ட் தராங்க (Cinema), நாம வாங்கறோம் (Ticket) ரொம்ப பிடிச்சு போயி சில பேரு, அந்த தொழிலதிபர்களை பாலாபிசேகம் பன்றாங்க. இதில கொஞ்சம் கூட நடிகர்கள் மேல தப்பே இல்லை. அதனால உங்அ கவிதை செல்லாது.

நான் நடிகரை சொல்லவில்லை அண்ணா ,யார் மனதும் புன்படுதிருந்தால் மன்னிக்கவும்

நேசம்
26-01-2010, 06:24 AM
அதிகமான ஈர்ர்ப்பில் தனது வாழ்க்கையை தொலைக்கும் ரசிகனை பற்றிதான் சொல்லி இருக்கார்.நடிகர்களை அல்ல.அதே சமயத்தில் ரசிகர்களை சரியான திசையில் கொண்டு செல்லும் தார்மிக பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு

அக்னி
26-01-2010, 07:19 AM
தமிழ்நாட்டின் ஒரு பெரிய தொழிற்பேட்டை சினிமாத்துறை என்பது மறுக்க முடியாத உண்மை.
அது ஒரு கட்டுக்கோப்புக்குள் அமைவாக இல்லை என்பது விசித்திரம்தான்.
கோலோச்சும் தனிமனிதர்களின் வருமான நிர்ணயிப்புக்களைத் தடுக்கமுடியாது. ஆனால், வரையறை செய்யலாமே.
ஒரு படத்தின் வருமானம், அப்படக்குழு முழுமைக்கும் என்று கிடைக்க வேண்டும்.
தோல்விப்படமாயின் அதற்குரிய காப்பீடு தயாரிப்பாளர்களைக் காக்க வேண்டும்.
படச்செலவுக்கேற்ப, காப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதும், ஊழியர்களின் வருமானத்தை நிர்ணயிப்பதும் நிச்சயம் நிகழ வேண்டும்.

நாங்களே இவ்வளத்த யோசிக்கிறம்... அவங்க யோசிக்காம இருப்பாங்களா...
சிக்காம இருக்காங்க என்பதே உண்மை...

*****
முத்துவேல் அவர்களே...
உங்கள் தலைப்பும் கவிதையும் முரண்படுகின்றது.
சினிமாமீது வெறிபிடித்த ரசிகனா, நடிகன் மீது வெறிபிடித்த ரசிகனா...

ஒரு நடிகன் பார்க்கும் பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றது இக்கவிதை.
நடிகன் பார்வையிலோ, ரசிகன் பார்வையிலோ அல்லாமல்,
உங்கள் பார்வையிலிருந்து வந்திருந்தால் கவிதை சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்திருக்கும் என்பது என் கருத்து.

ஒரு நடிகன் ரசிகனுக்காக, இப்படிச் சிந்திப்பானா... ‘???’

*****
‘வெள்ளித்திரை நட்சத்திரங்கள்’

நீயும் நானும்
வெறிபிடித்த ரசிகர்களாயிருக்கும்வரை
வெள்ளித்திரையான வெண்திரை
பொன்திரையுமாகலாம்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
நம்மைப்போல எத்தனை பேரிருப்பர்..
அவர்கள் ஒவ்வொருவர்தானே...
அவர்களைப் பார்க்கப், பேசப், பழகத், தொட்டுவிட,
ஏன் மணம்முடிக்கவும்
நாம் விரும்பலாம்.
ஆனால், அவர்கள் எத்தனை பேருடன்...???

சிந்திக்க வேண்டியதும், தெளிய வேண்டியதும் ரசிகன்தான்...

ரசிகர் நிழலிற் குளிர் காயும் நடிகர்களுக்கும்
சில கடப்பாடுகள் உண்டு...
பேதை மனங்களை ஆக்கிரமிக்கும் திறன்
அவர்களுக்குண்டு.
அந்த ஆக்கிரமிப்புக்கள் ரசிகர்களை அழிக்காவண்ணம்
தெளிவுகளைக் கொடுக்கவேண்டும்.
பாத்திரத் தெரிவுகளைச் செய்ய வேண்டும்.

பெரியாராய் நடித்தாலும்,
மகாகவியாய் நடித்தாலும்,
மாறவிளையாத ரசிகர் மனங்கள்,
மறைக் கதாபாத்திரங்களாய் மட்டும்
மாறிவிடத் துடிப்பது
நிச்சயம் மாற வேண்டியதொன்று...