PDA

View Full Version : சிலந்திவலை....!!



சிவா.ஜி
22-01-2010, 01:53 PM
ஒரு வலைதளத்தில் வாசித்தக் கவிதை. வாசித்ததும் மிகப் பிடித்துவிட்டது.


எப்போதும்
உன் வீடு எனக்கழகு..
உனக்கழகா தெரியாது..

எப்போதும்
என் வீடும் எனக்கழகு..
உனக்கழகா தெரியாது..

என் வீட்டில் உன் வீடு
ஒருபோதும் அழகில்லை..

எப்போதும் அறுத்தெறிகின்றேன்
மனதில் வலியோடு..

....அப்துல்காதர்...

அக்னி
22-01-2010, 03:32 PM
கவிதை அழகுதான்...

சிலந்திவலையின் நேர்த்தி
எப்போதும் வியப்பைத் தருவதொன்று...
அழகுக்குள் ஆபத்து எப்போதுமுண்டு
எனவும் உணர்த்துவதுண்டு...

ரசித்ததைத் தந்த சிவா.ஜி க்கு நன்றிகள்...
படைத்தவருக்குப் பாராட்டுக்கள்...

கீதம்
18-02-2010, 05:30 AM
மேனகா காந்தி அவர்கள் ஒருமுறை சொல்லியிருந்தார்: என் வீட்டில் சிலந்தி வலைகளை நான் கலைப்பதேயில்லை என்று.

எல்லோரும் அப்படி நினைத்தால் வீட்டின் நிலை என்னவாகும்?

கவிதை நன்று. பகிர்ந்தமைக்கு நன்றி சிவா.ஜி அவர்களே.

rajarajacholan
18-02-2010, 07:13 AM
நல்லாருக்குங்க

சிவா.ஜி
18-02-2010, 09:11 AM
கவிதையை பல கோணங்களில் பார்க்க முடியும் என்பதுதான் இந்தக் கவிதையின் சிறப்பு. வாசித்ததில் பிடித்திருந்தது. பதிந்தேன்...அதை வாசித்து என்னுடன் ரசனையைப் பகிர்ந்து கொண்ட அக்னி, கீதம் மற்றும் சோழனுக்கு அன்பான நன்றிகள்.

கலையரசி
18-02-2010, 04:45 PM
சிலந்தி வலை ஓர் அழகு தான். அந்தப் பின்னலின் நேர்த்தியையும் அதன் நடுவில் அது ஒய்யாரமாக அமர்ந்திருப்பதையும் பார்த்துப் பலமுறை நான் ரசித்திருக்கிறேன்.
ஆனால் என் செய்வது? நம் வீட்டில் அது அழகில்லையே!
கவிதை நன்று. பகிர்ந்தமைக்கு நன்றி.