PDA

View Full Version : பிராத்தனையும்.. கடவுளும்..



ஆதி
22-01-2010, 12:06 PM
மனிதாபிமானம் வேண்டி
நடந்திருந்தது
ஒரு பிரார்த்தனைக் கூட்டம்

ஒவ்வொருவரும் தமக்கான
வார்த்தையைத் தேர்ந்தெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்
மனிதாபிமானம் வேண்டி..

பிரார்த்தனை வார்த்தைகளின்
இடுக்கில் உறைந்திருக்கும் இடைவெளியில்
உலாவியது...

பிடிக்காதவர்கள் மீதான
சிலரின் கடும் வெறுப்புக்கள்..

அழகான பெண்ணின் மீது
சிலரின் சபலப்பார்வைகள்..

"பிரார்த்தனை நிறைவேறுமா ?" எனும்
கடவுளின் ஆற்றல் மீதான சந்தேகங்கள்..

சமீபத்தில் திருமணமான ஒருவனின்
அந்தரங்கம் பற்றிய யோசனைகள்..

யாவையும் கவனித்த கடவுள்
பிரார்த்தனை கூட்டத்தை நோக்கி
பிரார்த்திகத் துவங்கினார்
கடவுள் அபிமானத்தை..

அக்னி
22-01-2010, 12:40 PM
முதல் நிலைத் தேவைகள்
இருந்தால்
ஒருநிலைப்படுத்திப்
பிரார்த்திப்பதும்..,
அவசியமல்லாதபோது
அலட்சியமாய் அலைபாய்வதும்தான்..,
மனித மனம்...

அழகாய்ச் சொல்கின்றது கவிதை.

பாராட்டுக்கள் ஆதன்...

இளசு
22-01-2010, 07:31 PM
அன்பு ஆதன்..


இறையிடம் மட்டுமன்று
எவரிடம் பேசும்போதும்..

சொல்லியவற்றை விட
சொல்லாதவையே அதிகம்
சொல்லும்!!!!!!


இடைவெளிகளில் இட்டு நிரப்புபவையும்
என்று அழகானவையாய் அமையுமோ
அன்றே நிர்மல நிலை அமையும்!

''அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை''

- கண்ணதாசன்..


அவனுக்கு ஒன்றும்
தனக்குள் ஒன்றும்
இறை விரும்பும்
பிரார்த்தனை இல்லை

-- நம் ஆதன்.

அமரன்
22-01-2010, 10:15 PM
தாகம் எடுத்தால் தண்ணி தேடல்..
வெயில் கடுத்தால் நிழல் தேடல்..

பாதிகப்படவன் ஒருத்தன் கூடப் படவில்லையா கடவுளின் கண்ணுக்கு.

கடவுளும் மனிதனும் ஒன்றுதான்.

நல்லார் ஒருவர் எனும் திருக்குரல் எதிரொலிக்கிறது மனதில்..

சுகந்தப்ரீதன்
23-01-2010, 09:16 AM
மனிதாபிமானமா மன அபிமானமா..?!

அமர் சுட்டியதுபோல் கடவுளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை..!!

மனக்குரங்கை காட்சிபடுத்திய விதம் நன்று..!!

வாழ்த்துக்கள் ஆதன்..!!

இன்பக்கவி
23-01-2010, 01:45 PM
நன்றாக இருக்கு..
கோவிலுக்கு சென்றால் மனம் ஒரு நிலை படாமல் அலைபாய்வதை அழகா சொல்லி இருகின்றீர்கள்..
நிஜம் தான்..
ஒரு சிலருக்கு வெளியே இருக்கும் காலணி மீது கவனம் இருக்கும்...
இதை ஒரு நகைச்சுவையாகவே ஒரு திரைபடத்தில்; பார்த்த நியாபகம்..
வாழ்த்துகள்:)

ஆதி
27-01-2010, 10:02 AM
முதல் நிலைத் தேவைகள்
இருந்தால்
ஒருநிலைப்படுத்திப்
பிரார்த்திப்பதும்..,
அவசியமல்லாதபோது
அலட்சியமாய் அலைபாய்வதும்தான்..,
மனித மனம்...



மிக அழகான ஆழமான பின்னூட்டம் அக்னி..

பாராட்டுக்கும் பின்னூட்டுக்கும் நன்றி அக்னி..