PDA

View Full Version : வாழ்க்கை என்பது...



சசிதரன்
21-01-2010, 04:03 PM
வாழ்க்கை என்னவென்று...
கேள்வியோடு அலைந்திருந்தேன்..
எதிர்வந்த மனிதரெல்லாம்..
பதிலாய் ஒன்றை சொல்லி போனார்கள்..

வாழ்க்கை என்பது...
ரோஜாப்பூவை போன்றது...
காதலித்துக் கொண்டிருப்பவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
இதழ்களை இழந்த
ரோஜாவை போன்றது..
முட்கள் மட்டுமே மிஞ்சும்..
காதலித்து தோற்றவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
வென்று காட்டுவது..
முதலாளி ஒருவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
வென்றாலும் தோற்பது..
தொழிலாளி ஒருவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
கானல் நீர் போன்றது...
கவிஞன் ஒருவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
மரணத்தை நோக்கிய ஓட்டபந்தயம்...
சிப்பாய் ஒருவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
உண்மை உணர்வது...
இல்லறம் வெறுத்தவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
உன்னை உணர்வது...
இறைவனை வெறுத்தவன்
சொல்லி போனான்...

அத்தனை பதில்களையும்...
சுமந்து திரிகையில்..
நொடிகள் நிமிடங்களாகி...
நிமிடங்கள் மணிகளாகி...
பின் வருடங்களும் கடந்திருக்கும்...

வாழ்க்கை என்பது...
வாழ்வது மட்டும்தான்..
உணரும் தருணத்தில்..
என் வாழ்க்கையும் முடிந்திருக்கும்.

அக்னி
21-01-2010, 04:21 PM
அழகும் அர்த்தமும் ஒருங்கே...

வாழ்க்கை என்பது,
வாழ்ந்தான் எனச்
சொல்ல வைப்பது...

சொல்ல வைப்பதற்கு,
வாழ்க்கையை ரசித்து
வாழ வேண்டும்...
வாழ்வோம்...

பாராட்டுக்கள் பல...

சுகந்தப்ரீதன்
23-01-2010, 09:19 AM
வாழ்க்கை என்பது வரையறுக்க முடியாதது..!!

ஆகையால் வாழ்க்கை வாழ் என்றுரைக்கிறாய்... வாழ்த்துக்கள் சசி..!!

ஆர்.ஈஸ்வரன்
23-01-2010, 09:22 AM
வாழ்க்கை என்பது ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி

இன்பக்கவி
23-01-2010, 01:39 PM
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்..
ஒரு சில நேரங்களில் வாழும் வாழ்க்கையே நரகமாய் எனக்கும் தோன்றுகிறது..
மாற்ற முடியவில்லை..
வாழ்த்துக்கள் நல்ல இருக்கு உங்க கவிதை