PDA

View Full Version : ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை மரணம்-



muthuvel
21-01-2010, 01:09 PM
எடுக்கவில்லை புகை படம் ,ஆயுள் குறைந்துவிடும் என்று ,
எடுத்தனர் புகை படம் ,ஆயுள் முடிந்த இன்று .......

தூயவன்
21-01-2010, 02:10 PM
இரு வரிகளின் மிக பெரிய தத்துவம். அருமை

சிவா.ஜி
21-01-2010, 02:24 PM
ரொம்ப அருமையான வரிகள் முத்துவேல். வலி நிறைந்த வரிகள்.

ஜனகன்
21-01-2010, 03:27 PM
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள், படித்து முடித்ததும் மனம் நெகிழ வைத்தது.

muthuvel
22-01-2010, 02:32 AM
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள், படித்து முடித்ததும் மனம் நெகிழ வைத்தது.

உங்கள் பாதம் தொட்ட நன்றிகள் .....

muthuvel
22-01-2010, 02:34 AM
ரொம்ப அருமையான வரிகள் முத்துவேல். வலி நிறைந்த வரிகள்.

உங்கள் பாதம் தொட்ட நன்றிகள் .....

muthuvel
22-01-2010, 02:35 AM
இரு வரிகளின் மிக பெரிய தத்துவம். அருமை

உங்கள் பாதம் தொட்ட நன்றிகள் .....

praveen
22-01-2010, 03:37 AM
விபத்தில் குழந்தை மரணம்-கண்ணிற் அஞ்சலி

கவிதை உங்கள் சொந்தப்படைப்பா நண்பரே, அப்படியாயின் நீங்களே கண்ணீர் என்று தலைப்பை திருத்தி விடுங்கள்.

கிராமத்திலே போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று கடைசியில்(மரணத்திற்கு பின்னரே) போட்டோ எடுப்பார்கள், அங்கேயும் தொழில் பழக்கத்தில் ஸ்மைல் பிளிஸ் என்று சொல்லி அடிவாங்குவதாக சிரிப்பு வந்துள்ளது.

ஆனால் தற்போது குழந்தை பிறந்தவுடன் எல்லோரும் புகைப்படம்?, (உறைபடம்) எடுத்து தள்ளுகின்றனர் உபயம் -கேமரா உடன் இனைந்த கைதொலைபேசி.

இருந்தாலும் உங்கள் கவிதை உணர்ச்சிபூர்வமானது. நம் மன்றத்திலே ஒரு மென்பொருள் விடயத்தில் ஒரு நண்பர் இதனையே சொல்லி மனதை கனக்க வைத்து விட்டார்.

Akila.R.D
22-01-2010, 04:10 AM
மிகவும் அருமை...

muthuvel
22-01-2010, 05:15 AM
விபத்தில் குழந்தை மரணம்-கண்ணிற் அஞ்சலி

கவிதை உங்கள் சொந்தப்படைப்பா நண்பரே, அப்படியாயின் நீங்களே கண்ணீர் என்று தலைப்பை திருத்தி விடுங்கள்.

கிராமத்திலே போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று கடைசியில்(மரணத்திற்கு பின்னரே) போட்டோ எடுப்பார்கள், அங்கேயும் தொழில் பழக்கத்தில் ஸ்மைல் பிளிஸ் என்று சொல்லி அடிவாங்குவதாக சிரிப்பு வந்துள்ளது.

ஆனால் தற்போது குழந்தை பிறந்தவுடன் எல்லோரும் புகைப்படம்?, (உறைபடம்) எடுத்து தள்ளுகின்றனர் உபயம் -கேமரா உடன் இனைந்த கைதொலைபேசி.

இருந்தாலும் உங்கள் கவிதை உணர்ச்சிபூர்வமானது. நம் மன்றத்திலே ஒரு மென்பொருள் விடயத்தில் ஒரு நண்பர் இதனையே சொல்லி மனதை கனக்க வைத்து விட்டார்.


உங்கள் விமர்சனத்திற்கு நன்றி அண்ணா ,
இது என் சொந்த படைப்புதான் ,இதில் சந்தேகம் வேண்டாம் ,நான் சொன்னது ஒரு அனுதாபத்தில் எளுதியது வேறு எந்த உள்நோக்கம் இல்லை , பிழை இருந்தால் மன்னிக்கவும் ,

அக்னி
22-01-2010, 06:44 AM
அர்த்தம் பொதிந்த கவிதை... தொடர்ந்தும் தூறட்டும் உங்கள் கவிச்சாரல்...
பாராட்டுக்கள்...

ஆனாலும்,
‘விபத்திற் குழந்தை மரணம்’ என்பதைப் பார்க்கையில் மனதில் ஏதோ நெருடல், தவிப்பு.
உண்மையான அறிவிப்போ எனத்தான் எண்ண வைத்தது.
இந்த இருவரிக் கவிதையை அடர்த்திப்படுத்த இதுபோன்ற தலைப்புத் தேவையில்லை என நினைக்கின்றேன்.
ஏனென்றால், கவிதை கனகச்சிதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லுகின்றது.
தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.

புகைப்படம்
எடுத்தால் ஆயுள் குறையுமா...
யார் சொன்னது..?
புகைப்படம் எடுப்பதால்,
எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன...
(சும்மா குசும்புக்கு...)


உங்கள் விமர்சனத்திற்கு நன்றி அண்ணா ,
இது என் சொந்த படைப்புதான் ,இதில் சந்தேகம் வேண்டாம் ,நான் சொன்னது ஒரு அனுதாபத்தில் எளுதியது வேறு எந்த உள்நோக்கம் இல்லை , பிழை இருந்தால் மன்னிக்கவும் ,
பிரவீன் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை.
தலைப்பிலுள்ள எழுத்துப்பிழையைத்தான் அவர் சுட்டிக்காட்டினார்.

muthuvel
28-01-2010, 05:33 AM
நன்றிகள் பல