PDA

View Full Version : நம் நட்பு



இன்பக்கவி
20-01-2010, 03:32 AM
நட்புக்கு அர்த்தம் அறியாத
பலரிடம் பழகி
நட்பை தொலைத்தேன்
தொலைத்த நேரத்தில்
ஆறுதல் சொல்ல ஓடிவந்த
முத்து நீ..
என் திறமைக்கு
விமர்சகன் நீ
தவறிழைக்கும் நேரத்தில்
தண்டிக்கும் தந்தை நீ
பார்க்கும் பார்வையில்
புரிந்துவிடும்
நட்பின் தரம்..
இன்று வரை உன் பார்வையில்
களங்கம் கண்டதில்லை நான்
உன்னுள் என் நட்பு
என்றும் தொடர வேண்டும்
நன்றி என்ற வார்த்தையில்
அடங்கி விடாது
நம் நட்பு..

சுகந்தப்ரீதன்
21-01-2010, 12:45 PM
நட்பு என்பது எதையும் எதிர்பார்ப்பதில்லை இன்பகவி... அது ஒரு உள்ளார்ந்த உணர்தல் மற்றும் புரிதல் அவ்வளவுதான்...!!

உங்களின் எதிர்பார்ப்பு கவிதையில் வெளிப்படுகிறது... எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்... ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

சிவா.ஜி
21-01-2010, 02:03 PM
சுபி சொல்வது உண்மையே. நட்பில் எதிர்பார்ப்பு இருத்தலாகாது. உள் அறிந்து, உண்மையுடன் இருப்பதே உயர்வான நட்பு.

அப்படியொரு நட்பை அடைந்ததற்கு வாழ்த்துகள் இன்பக்கவி.

ஜனகன்
21-01-2010, 03:20 PM
நட்புக்கு மெருகூட்டிய கவிதை வரிகள் நன்றாக இருந்தது.
குறுகிய வரிகளில் உணர்வை தொட்டு சென்றது. வாழ்த்துக்கள்.

இன்பக்கவி
23-01-2010, 09:02 AM
நட்பு என்பது எதையும் எதிர்பார்ப்பதில்லை இன்பகவி... அது ஒரு உள்ளார்ந்த உணர்தல் மற்றும் புரிதல் அவ்வளவுதான்...!!

உங்களின் எதிர்பார்ப்பு கவிதையில் வெளிப்படுகிறது... எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்... ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளலாம்..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

சுகந்த ப்ரீதன் நன்றிகள்..
நான் நண்பர்களிடம் எதிர் பார்ப்பது அன்பு மட்டுமே..
எதிர்பார்க்காமல் கிடைக்கும் அன்பு தான் உண்மை என்று உணர்ந்து கொண்டேன்

இன்பக்கவி
23-01-2010, 09:04 AM
சுபி சொல்வது உண்மையே. நட்பில் எதிர்பார்ப்பு இருத்தலாகாது. உள் அறிந்து, உண்மையுடன் இருப்பதே உயர்வான நட்பு.

அப்படியொரு நட்பை அடைந்ததற்கு வாழ்த்துகள் இன்பக்கவி.

நன்றிகள் சிவாஜி அவர்களே..
நட்பு மட்டுமே நிஜம் என்பது தான் நான் உணரும் உண்மை...

இன்பக்கவி
23-01-2010, 09:05 AM
நட்புக்கு மெருகூட்டிய கவிதை வரிகள் நன்றாக இருந்தது.
குறுகிய வரிகளில் உணர்வை தொட்டு சென்றது. வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஜனகன்...
நட்புகாய் கவிதை எழுதுவது எனக்கு பிடித்த ஒன்று..:icon_b:

ஆர்.ஈஸ்வரன்
23-01-2010, 09:08 AM
நட்புக்கவிதைக்கு நட்பாய் ஒரு வாழ்த்து

இன்பக்கவி
23-01-2010, 01:54 PM
ஈஸ்வரன்
நட்பாய் ஒரு நன்றிகள்:icon_b::icon_b: