PDA

View Full Version : பாழ்நிலம்

இன்பக்கவி
20-01-2010, 03:13 AM
பாழ் நிலம் வானுயர மாறியது
சீனாவின் தொழில் நுட்பத்தால்
விளை நிலம் மாளிகையாகி
விவசாயிகளின் வாழ்வு
பாழாய் போனது,
நம்மவர்களின் மதி(கெட்ட) நுட்பத்தால்..
வீடு கட்ட நிலங்களையும்,
தொழிற்சாலைகளால்
காற்றையும் ஆற்றையும்
மாசு படுத்தி
பணத்தை சேகரித்து
மருத்துவமனையில்
ஆயுள் கால உறுப்பினராய்
அவசர அவசரமாய் சேர்ந்து விட்டோம்
விவசாயம் செய்ய நிலம் தேவை
இந்த சுழல் வந்துவிடுமோ???
பணத்துக்காய் பறந்து
பணயக்கைதியாக மாறி
கண்ணீர் விடும் கூட்டம்..
பசுமை நிறைந்து கிடக்கும் நாடு
பாதுகாக்க நாதி இல்லாமல்
பாழாய் போகிறது..
பாதுகாக்க ஆள் இல்லை
பதுக்கவே ஆள் அதிகம்...
விளைநிலத்தை அழித்து
விண்ணைத் தொடும்
கட்டிடம் கட்டும் அறிவாளிகளே
மொட்டை மடியில் பயிரிடும்
வித்தையும், வழியையும்
செய்து தாருங்கள்..
இனிவரும் சுழலில்
அடுத்த தலைமுறைக்கு
உபயோகப்படும்...:fragend005:

சுகந்தப்ரீதன்
20-01-2010, 02:10 PM
எதிலுமே சமநிலை அவசியம்... !! அடுத்த பத்தாண்டுகளில் விவசாயத்தை முன்னிறுத்தும் நாடுகள்தான் உலகின் வலிமையான நாடாக மாறமுடியும் என்ற ஒரு வேளான் விஞ்ஞானி ஆருடம் சொல்கிறார்..!!

பங்கு கிடைத்தவர்கள் பக்கசார்பாகவும்... கிடைக்காதவர்கள் எதிராகவும் நின்று கூவிக்கொண்டிருக்கிறார்கள் மரபணு கத்தரிக்காய்க்கு எதிராக...!! இதில் யாருமே கண்டுக்கொள்ளவோ கேட்டுகொள்ளவோ தயாராயில்லை கத்தரிக்காய் தின்பவனின் கருத்தை மட்டும்..!!

இத்தகைய கவிதைகளுக்கு இன்னும் கொஞ்சம் வலிமையான வார்த்தை வடிவம் தேவையென்று தோன்றுகிறது...!! முயற்சிக்கு பாராட்டுக்கள்..!!

இன்பக்கவி
20-01-2010, 02:20 PM

நன்றிகள் சுகந்தப்ரீதன்.
ம்ம் நீங்கள் சொல்வது சரிதான்..
இன்னும் முயற்சியில் தான் என் கவி பயணம்
தொடருகிறது..
முயன்று கொண்டே இருகின்றேன்..
நன்றிகள்

சிவா.ஜி
20-01-2010, 02:30 PM
விளைநிலங்களெல்லாம் வீடுகளாய் மாறினால்.....நாளைய உலகம் உணவுக்கு என்ன செய்யும் என்ற நியாயமான ஆதங்கம் வெளிப்படும் கவிதை வரிகளுக்கு பாராட்டுக்கள் இன்பக்கவி.

"பசுமை நிறைந்து கிடக்கும் நாடு
பாதுகாக்க நாதி இல்லாமல்
பாழாய் போகிறது.."

என்ன செய்வது.....பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைக்கும் தலைவர்கள் இருக்கும் வரை அவர்களின் அடிப்பொடிகள் ஆடத்தான் செய்வார்கள். உணவில்லா நிலை வரும்போது மக்கள் தலைவர்கள் மாயமாய் போய்விடுவார்கள்.
இந்த மண்ணில் இருந்து...இறந்துபோவது....நம்மைப் போன்ற பாவப்பட்ட மக்கள்தான்.

வாழ்த்துகள் இன்பக்கவி.

இன்பக்கவி
23-01-2010, 03:28 PM

நன்றிகள்...
பணமே பிரதானமாய் போய் விட்டதால் வந்த வினை தான்..