PDA

View Full Version : பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார்: புலிகள் இயக்கம் அறிவிப்பு



muthuvel
19-01-2010, 10:39 AM
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாத*த்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இணையத்தளச் செய்திகளின் தொகுப்பு

அன்புரசிகன்
19-01-2010, 11:15 AM
தற்போது அறிக்கை விடுவதே இவர்களின் தொழிலாக போய்விட்டது. தலைவர் இவ்வாறான வேடிக்கையான விடையங்களை செய்பவர் அல்ல... அவர் தோன்றுவார் என்றால் அனைத்தும் மற்றவர்களின் ஊகங்களுக்கு அப்பாலே நிகழுமே தவிர சொல்லிவைத்து வருபவர் அவரல்ல..

தூயவன்
19-01-2010, 01:56 PM
தேர்தல் வரும் நேரத்தில் இவ்வாறான அறிக்கை வந்திருப்பது மிகவும் சந்தேகத்திகிடமனதாகவே படுகிறது.

praveen
19-01-2010, 04:05 PM
இவ்வளவு நாளாக எங்கே போயிருந்தனர் இந்த அறிவிப்பை வெளியிடுபவர்?.

தமிழ் பேசும் எவரும் பிரபாகரன் இறந்ததாக சொல்லப்படுவதை இதுவரை நம்பாத பட்சத்தில் இந்த அறிவிப்பினால் பெரிதாக எந்த வரவேற்பும் இருக்காது. இது புலி பயம் மறைந்து இருப்பவர்களுக்கு கிலி கொடுக்க மட்டுமே உதவும்.

இன்னும் பல வருடங்கள் ஆனாலும் என்றாவது ஒரு நாள் பிரபாகரன் நேரில் தோன்றுவார் என்பதில் ஐயம் இல்லை. இந்த விசயத்தில் அன்புரசிகன் கருத்தே தான் என்னுடையதும்.

அன்புரசிகன்
19-01-2010, 08:23 PM
பொதுவாக தலைவர் அறிக்கை விடுவதும் தோன்றுவதும் 2 விடையங்கள் தான். ஒன்று மாவீரர் நாள் அறிக்கை. மற்றயது புலிகளின் குரல் வானொலியின் ஆண்டு விழா நிகழ்வு...

இது தவிர ஓரிரு தடவை மக்கள் முன் தோன்றியுள்ளார். நானறிந்து ஓரு முத்தமிழ் விழாவிற்கு பரிசளிக்க பத்து நிமிடம் தோன்றினார். அதுகூட திடீர் ஏற்பாடு... ஒருமுறை கோப்பாய் மாவீரர் மயானம். வன்னியில் செய்தியாளர் மகாநாடு. அவ்வப்போது காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை... விரல் விட்டு எண்ணப்படுவது அவரது தோற்றங்கள்... இப்படி சொல்லி வைத்து அல்ல...

ஜனகன்
19-01-2010, 08:49 PM
இப்படி முன்னறிவித்தல் கொடுத்து விட்டு தலைவர் வருவார் என்பது, நம்பகரமாக இல்லை.எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தூயவன்
20-01-2010, 03:00 AM
மகிந்தவின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.சிங்களவர்களிடம் இருந்து வாக்குகளை கொள்ளை அடிக்கும் யுத்தி

அக்னி
20-01-2010, 06:04 AM
அன்புரசிகன், பிரவின் ஆகியோர் பதிவுகள் போன்றே,
என் எண்ண அலைகளும்...

தலைவரின் மரணம் எனக் கூறப்படும் சம்பவத்தில் ஏராளமான முரண்கள்.
அவையே, தமிழர் மனதிற்கு தலைவரின் இருப்பை உறுதிப்படுத்தி நிற்கின்றன.

இப்படித் தப்பித் தலைமறைவாகவா இத்தனை வருடப் போராட்டம், இத்தனை இழப்புகள்...
என எழும் வினாக்களுக்கு ஒரே பதில்,
முப்பது வருடங்களாகத் தமிழருக்குத் துன்பங்கள் அதிகம்தான்.
ஆனால், முள்ளிவாய்க்கால் கோரத்திற்குப் பின்னால்,
இன்றுவரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டேயிருக்கின்ற வதைகளை விடவும்
அன்றைய துன்பங்கள் பெரிதல்ல.
அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களின் மனம் இது.

இறுதிப்போர் முடிந்ததல்ல.., இனித்தான் இறுதிப்போர்...

தலைவரின் கூற்றுப்படி,
“போராட்ட வடிவம் மாறலாம்... ஆனால், போராட்டத்தின் இலக்கு மாறாது...”

இன்பா
20-01-2010, 12:21 PM
புலி பயம் போனவர்கு கிலி உண்டாக்க என்பதை விட, மீண்டும் வரமாட்டாரா என்ற ஆர்வத்தாலும் எதிர்பார்பாலும் கூட இருக்கலாம்.

சிறு வயதில் ஒரு திரைபடத்தில், வில்லன் ஹீரோவை சதி செய்து கொலை செய்துவிடுவான், என்னால் அதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை, அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன்,

"ஹீரோ சாகவில்லை தானே?, மீண்டும் வந்து வில்லனை வந்து அடிப்பான் தானே?" என்று.

ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை, வலி, துக்கம் என்று இவையெல்லாம் கூட இப்படிப்பட்ட அறிக்கைகளுக்கு காரணிகளாகின்றன.

அமரன்
20-01-2010, 07:42 PM
பொதுவாக தலைவர் அறிக்கை விடுவதும் தோன்றுவதும் 2 விடையங்கள் தான். ஒன்று மாவீரர் நாள் அறிக்கை. மற்றயது புலிகளின் குரல் வானொலியின் ஆண்டு விழா நிகழ்வு...

இது தவிர ஓரிரு தடவை மக்கள் முன் தோன்றியுள்ளார். நானறிந்து ஓரு முத்தமிழ் விழாவிற்கு பரிசளிக்க பத்து நிமிடம் தோன்றினார். அதுகூட திடீர் ஏற்பாடு... ஒருமுறை கோப்பாய் மாவீரர் மயானம். வன்னியில் செய்தியாளர் மகாநாடு. அவ்வப்போது காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை... விரல் விட்டு எண்ணப்படுவது அவரது தோற்றங்கள்... இப்படி சொல்லி வைத்து அல்ல...
முத்தமிழ்விழா அல்ல ரசிகரே! அன்னை பூபதி நினைவுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா. பத்து நிமிடம் மேடையில்.. பிறகு வாகையாளர்களுடன் இராப்போசன விருந்து. கூடவே பொம்மர் குண்டு டெசேர்ட்.:)

மயூ
25-01-2010, 06:09 AM
புலி பயம் போனவர்கு கிலி உண்டாக்க என்பதை விட, மீண்டும் வரமாட்டாரா என்ற ஆர்வத்தாலும் எதிர்பார்பாலும் கூட இருக்கலாம்.

சிறு வயதில் ஒரு திரைபடத்தில், வில்லன் ஹீரோவை சதி செய்து கொலை செய்துவிடுவான், என்னால் அதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை, அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன்,

"ஹீரோ சாகவில்லை தானே?, மீண்டும் வந்து வில்லனை வந்து அடிப்பான் தானே?" என்று.

ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை, வலி, துக்கம் என்று இவையெல்லாம் கூட இப்படிப்பட்ட அறிக்கைகளுக்கு காரணிகளாகின்றன.

நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லிவீட்டீர் நண்பரே! தலைவர் மீள வருவாரா இல்லையா என்பதெல்லாம் இப்போது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களாகிவிட்டன.

ஜேஜே
25-01-2010, 06:23 AM
இறந்தாரோ உயிருடன் இருக்கிறாரோ... ஆனால் இதுமாதிரியான அறிக்கைகள்தான் சில நேரங்களில் உற்சாகமளிப்பது. நேதாஜி உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்பது இதுவரையில் யாரும் அறியாத விஷயம் ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக நினைத்து அவரது வீரர்கள் காத்துக்கிடப்பதைப் போலத்தான் இப்போது தமிழனும் காத்திருக்கிறான். ஆனால் தலைவர் நேரில் வரும்காட்சியை காண காத்துக்கிடப்போருக்கு பதிலளிக்க இந்த அறிக்கைகள் தான் இப்போதைக்கு நம்பிக்கை அளிப்பவை. காலம்தான் பதிலளிக்க வேண்டும்..

விகடன்
28-01-2010, 04:26 AM
எங்கிருந்து இந்தத்தகவலைப் பெற்றிருந்தீர்கள் முத்துவேல்?
உங்களுக்கு நேரடியாக தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து அதிகார பூர்வமாக கிடைக்கப்பட்ட செய்தியா?
”அதில்க் கூறப்பட்டிருந்தது. ” என்று சொல்லியிருக்கிறீர்களே? அது என்பது எது? உங்களுக்கு வந்த அறிக்கையின் பிரதியா?

பொதுவாகவே எங்காவது இருந்து எடுக்கப்பட்ட செய்தியாயின் அந்த இடத்தையும் குறிப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். இது வேற வில்லங்கமான ஓர் செய்தி! இதற்கு கட்டாயம் உசாத்துணை செய்யப்பட்ட இடத்தை எழுதியிருக்க வேண்டும். (தமிழ் மன்றத்தின் நிருபராக உங்களை நியமித்திருந்தால் பரவாயில்லை :D )

சொல்ல வருவதை புரிந்துகொண்டிருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

Honeytamil
28-01-2010, 05:16 AM
இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை இராணுவமும் அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலமென்று காட்டிய உருவத்துடன் இவர் பொருந்துகிறாரா இல்லையா?? ... என்பதை சிந்திக்கவே இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளோம். உங்கள் பார்வைக்கு, மிகவும் அவதானமாக பாருங்கள்.
http://i48.tinypic.com/1zmjl87.jpg

http://i45.tinypic.com/124v79t.jpg

http://uk.video.yahoo.com/watch/6823777/17745760

நன்றி : தமிழ்வின்

அமரன்
28-01-2010, 05:19 AM
பிரபாகரன் விடயத்தில்

உயிருடன் உள்ளார் என்று ஒரு சாராரும் இல்லை என்று இன்னொரு தரப்பும் இதைப் பற்றி சிந்தனையே இல்லாமம் இன்னொரு தரப்பும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டே உள்ளார். எது எப்படியோ பிரபாகரன் பலருக்கும் பல விதத்தில் இந்நொடிவரை தேவைப்படுகிறார்!!!!!

muthuvel
14-02-2010, 01:48 PM
நம்பமுடியவில்லை ,நம்பாமல் இருக்கமுடியவில்லை

nandabalan
16-02-2010, 12:56 AM
வெப் துணியா என்ற இணைய தளத்தில் இதை வெளியிட்டுள்ளார்கள். தலைவர் வருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமுமில்லை. புதிய தடங்கள் பதிக்கப்படும் என்பதிலும் சந்தேகமுமில்லை. எந்த ஒரு விடுதலை இயக்கமும் தோற்றுப் போனதாய் சரித்திரமும் இல்லை. வெற்றி தமிழர்களுக்கே

muthuvel
25-02-2010, 11:58 AM
திரு பிரபாகரன் மரணம், திரு.சுபாஷ் சந்திரா போஸ் அவர்களின் மரணம் போல மர்மமாக உள்ளது

saguni
27-02-2010, 12:52 PM
சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் இருப்பதாக சிலர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..என்ன செய்ய???