PDA

View Full Version : ஹை கூmuthuvel
19-01-2010, 07:25 AM
பொருந்தாத ,
கட்சி தாவல் சட்டம் ,
அரசியல்வாதி நாக்கு ....

பூலோகத்தில் அடைக்கமுடியாத கடன்,
நம் தாய் ...

தேவதையை சுமக்கும் ,
தெய்வம் ,
கர்ப்பிணி பெண் ...


முகில் சூழ்ந்த மேகத்தில்,
வானவில் ,
விதவை மறுமணம் ...

ஓராண்டு உழைப்பு ,
ஒரு நொடியில் அழிப்பு ,
தீபாவளி வெடி ...


வானம் பார்த்து நிற்கும் வெள்ளை குடை ,
டிஷ் ஆண்டனா ...

கண்கட்டி வித்தை ,
கை பேசி சலுகை ...

குறை தீர்க்கும் நாள் ,
காவலர் மனு,
பாதுகாப்பு கோரி ..

போடுவது சின்ன மீன் ,
அகபடுவது பெரிய முதலை ,
கை பேசி சலுகை ...

முத்தத்தில் கை பேசி ,
வளைகுடா தகப்பன் ...

சுற்றிலும் ஆசை அலைகள் , அலையாய் மோதினாலும் ,
கலங்காத கல் மனம் ,
விவேகானந்தர் பாறை ...


இறந்தாலும் ,
அணையாத ஜோதி ,பிறர் விழிகளுக்கு ,
திரு.ஜோதி பாசு கண்தானம் ...

கடை திறப்பு,
வாடிக்கையாளன் வருகை,
முதல் குடி மகன் ,
டாஸ்மார்க் ...


என்னவள் என் மீது உறங்குகிறாள் ,
கல்லறையில் என் மீது பூக்கள் ,

ஆதி
19-01-2010, 11:23 AM
குறுங்கவிதைகள் நன்று முத்துவேல்.. ஹைகூ பற்றிய சின்ன அறிமுகம் உங்களுக்கு தரலாம் என்று ஆசைப்படுகிறேன்..

இது ஒரு ஜப்பானிய ஹைகூ கவிதை..

வேலையாள் மாற்றம்
வேறு இடத்தில் வைக்கப்படிருக்கிறது
துடைப்பம்..

படிப்பதற்கு மிக சாதார்னமாய் இருக்கிறது தானே..

ஆனால் சொல்கிற விடயங்களைப் பாருங்கள்..

ஜப்பானிய வழக்கப்படி ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை வேளையாட்கள் மாறுவது வழக்கம்..

இதனால் நிகழ்கிறத இடையூறுகளைப் பற்றித்தான் கவிதை பேசுகிறது..

அதாவது, துடைப்பம் வழக்கமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இப்போது இல்லை என்பது, துடைப்பம் வேறெங்கோ வீசப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது, அதுமட்டுமின்றி ஒரு துடைப்பமே சரியான இடத்தில் வைக்கப்படவில்லை எனில் அந்த வீட்டில் மற்றப் பொருட்களின் பராமறிப்பு பற்றி யோசித்துப் பாருங்கள்.. இதனால் வீட்டுக்காரர்களுக்கு உண்டாகும் தொல்லைகளைப் பற்றியும் சொல்கிறது..

வாமனக்கவிதை என்று தமிழில் ஹைகூ கவிதையை அழைக்கிறோம் அதுபோல் அதன் உயரமும் இருந்தால் இன்னும் சிறப்பாகும் முத்துவேல்.. வாழ்த்துக்கள்..

muthuvel
05-02-2010, 05:15 AM
தாரத்திற்கு பின் தாயானாள்,
கதாநாயகனுக்கு,
சினிமா நடிகை ... ,


பயிரை மேய்ந்த வேலி,
காவலர் வாங்கும் லஞ்சம் ..


நிறவெறி தாக்குதல்,
சாயப்பட்டறை கழிவு,
குடிநீரில் ..

பூக்களின் சாலைமறியல்,
கல்லூரி மாணவிகளின் ,
போராட்டம் ...


உறுப்புகள் கொடுத்தான் ,
ஓவியத்திற்கு ,
காது கேட்காதவன் வரைந்த ஓவியம் ...


மகரஜோதி பம்பையில்,
மாராட்டிய ஜாதி மும்பையில் ..குண்டுச்சட்டிக்குள் குதிரை,
காஷ்மீர் பேச்சுவார்த்தை ..


மண்ணில் விழுந்தும் ,
மண் ஒட்டாத மீசை ,
அரசியல்வாதி .


இந்தியனின் விருந்தோம்பல் ,
மும்பை தீவிரவாதி

ஆதி
05-02-2010, 07:58 AM
//தாரத்திற்கு பின் தாயானாள்,
கதாநாயகனுக்கு,
சினிமா நடிகை ... ,
//

//பூக்களின் சாலைமறியல்,
கல்லூரி மாணவிகளின் ,
போராட்டம் ...
//

அழகு, ரசித்தேன்..

//மணலில் விழுந்தும் ,
மண் ஒட்டாத மீசை ,
அரசியல்வாதி .//

மண்ணுக்கும், மணலுக்கும் வித்யாசமுண்டு முத்துவேல்..

மண் + அல் = மணல்

அதாவது மண் அல் இது.. மண் ஒட்டும், மணல் ஒட்டாது..

//இனவெறி தாக்குதல்,
சாயப்பட்டறை கழிவு,
குடிநீரில் ..//

நிற வெறி என்று சொல்லி இருந்தால், வெறு நிறத்தை மட்டுமே குறித்திருக்கும், இனவெறி என்றதால் பல வற்றை குறிக்கிறது.. அருமை..

மற்றவைகளை இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம்.. சிறப்பாக வந்திருக்கும்..

//குண்டுச்சட்டிக்குள் குதிரை,
காஷ்மீர் பேச்சுவார்த்தை ..
//

எடுத்துக்காட்டாக இது...

பாராட்டுக்கள்..

சிவா.ஜி
05-02-2010, 08:29 AM
இவை ஹைக்கூ இல்லையென்றாலும், சிந்தித்தவிதம் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள் முத்துவேல்.

ஆர்.ஈஸ்வரன்
05-02-2010, 09:17 AM
சிந்தித்தவிதம் நன்றாக இருக்கிறது.

muthuvel
06-02-2010, 02:44 AM
பிழையை திருதிகொண்டேன்

வெற்றி
06-02-2010, 04:48 AM
சுனாமி, மீனா, சஸ்பெண்டு (டிஸ்மிஸ் அல்ல :) ) , ஆஸ்திரேலியாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, வண்டுகளின் கொண்டாட்டம் , தமிழன் , பால்தாக்ரேவே சரணம் ,வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது, தொழில் இடர், இந்தியா,.

பின்னூட்டம் தாங்க .நானும் கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் கவிதைக்கு தலைப்பு கொடுத்து இருக்கிறேன்.. :)

muthuvel
14-02-2010, 01:55 PM
சுனாமி, மீனா, சஸ்பெண்டு (டிஸ்மிஸ் அல்ல :) ) , ஆஸ்திரேலியாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, வண்டுகளின் கொண்டாட்டம் , தமிழன் , பால்தாக்ரேவே சரணம் ,வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது, தொழில் இடர், இந்தியா,.

பின்னூட்டம் தாங்க .நானும் கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் கவிதைக்கு தலைப்பு கொடுத்து இருக்கிறேன்.. :)

யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள் ஏனெனில் அதில் நீங்கள் ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவீர்கள் , தோற்றால் ஒரு நன்பனை இழப்பீர்கள்
எனக்கு பிடிச்ச வாசகம்

muthuvel
17-02-2010, 01:07 PM
விளக்கத்திற்கு நன்றி

govindh
07-03-2010, 07:34 PM
கல்லறையில் என் மீது பூக்கள்...
மனதை..அழுத்தும்..வரிகள்..

muthuvel
12-03-2010, 05:36 AM
பழம் பழுத்தும் ,
விதை மட்டும் ,
நஞ்சில் ,
தீவிரவாதம் ...


மேகத்தை கைகளால் ,
துவட்டுகிறாள் ,
அவள் கூந்தல் ..

சாமியார், ஆத்திகம் ,
"சாமி" யார் ? நாத்திகம் ..


ஆசிரமம் அன்று ,
"ஆ" சிரமம் இன்று ,நடிகையின் வயிற்றில்
,பம்பரம் விடுகிறான் ,
மகளிர் இடஒதுக்கீடு ..


கூலியோடு கரும்பு,
தேர்தல் ஓட்டு...

muthuvel
12-03-2010, 06:42 AM
பாராட்டுக்கு நன்றி

muthuvel
12-03-2010, 01:39 PM
பழம் பழுத்தும் ,
விதை மட்டும் ,
நஞ்சில் ,
தீவிரவாதம் ...


மேகத்தை கைகளால் ,
துவட்டுகிறாள் ,
அவள் கூந்தல் ..

சாமியார், ஆத்திகம் ,
"சாமி" யார் ? நாத்திகம் ..


ஆசிரமம் அன்று ,
"ஆ" சிரமம் இன்று ,நடிகையின் வயிற்றில்
,பம்பரம் விடுகிறான் ,
மகளிர் இடஒதுக்கீடு ..


கூலியோடு கரும்பு,
தேர்தல் ஓட்டு...

aren
12-03-2010, 01:41 PM
உங்களுடைய ஹைக்கூ கவிதைகள் அனைத்தையும் ஒரே திரியில் பதிவு செய்யுங்கள்.

muthuvel
13-03-2010, 07:04 AM
உங்களுடைய ஹைக்கூ கவிதைகள் அனைத்தையும் ஒரே திரியில் பதிவு செய்யுங்கள்.

சரிங்க