PDA

View Full Version : பள்ளி செல்லும் குழந்தை



muthuvel
17-01-2010, 03:34 PM
சுமை ,படிப்பிலும் ,
பயணத்திலும் ..

அளவுக்கு மீறிய பாரம் ,
ஏற்படுத்தியது கோரம் ,
ஆட்டோ விபத்து ...

குழந்தைக்கு ,எடை குறைவு ,
எடை தராசில் ,
புத்தகம் மறுமுனையில் ...


பிறக்கும் முன் என்னையும் ,
பிறந்த பின் என் புத்தகத்தையும் ,
என் தாய் ...


மகன் தேர்வானான் ,
தந்தை பரீட்சை எழுதி,
பள்ளி சேர்க்கை ......


இன்று பிறக்கும் பிள்ளை ,
நாளை பொதி சுமக்கும் கிள்ளை ....

வாரிசுக்காக ,
வருசையில் பெற்றோர் ,
பள்ளி சேர்கை ...

என் "அம்மா "அழகில்லை ,
அழகு என்" மம்மி" தான் ,
ஆங்கில மோகம் .....

பிள்ளையிடம் ,
கார்பரேஷன் பள்ளி கொடுப்பது சீருடையை ,
கான்வென்ட் பள்ளி பிடுங்குவது சில்லறையை ...

ஜனகன்
17-01-2010, 10:29 PM
அன்றாடம் நம் நாட்டில் நடக்கும் சம்பவத்தை,சமூகத்தின் இழிவை எடுத்துக்காட்டும் கவிதை வரிகள்.நீங்கள் ஒரு நல்ல கவிஞன் என்று ஒவ்வொரு கவிதைகளிலும் நிருபிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

muthuvel
18-01-2010, 04:26 AM
நன்றி நன்றி கோடான கோடி நன்றி ...உங்கள் பாதம் தொட்ட நன்றி