PDA

View Full Version : முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளவும்



ரங்கராஜன்
16-01-2010, 01:17 PM
முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளவும்

என்னுடைய அலுவலக வேலையில் நான் பார்த்து சிரித்த ரசித்த மனதை பாதித்த நிகழ்ச்சிகளை சொல்ல இருக்கிறேன், ஆனால் ஒரே பிரச்சனை இருக்கிறது. இதில் நான் யாரை பற்றி
சொல்லப்போகிறனோ அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அறிமுகமான மிக பிரபலமானவர்கள். அதனால் அவர்களை நேராக சொல்லாமல் மறைமுகமாக சொல்கிறேன். முடிந்தால் கண்டுபிடித்து
கொள்ளவும். இங்கு நான் பதிக்கும் செய்திகள் எல்லாம் நான் கண்கூடாக பார்த்து, மற்றும் அனுபவித்தது. அதனால் இதில் ஏதும் கற்பனை இல்லை.


1. சமீபத்தில் திரைப்பட உலகத்தையே புரட்டிப் போட்ட பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் மோதலுக்கு காரணமாக இருந்த பிரபல நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நாள் அது. நான்
அலுவலகத்தில் இருக்கும் பொழுது எங்கள் தலைக்கு இந்த செய்தி வந்தது. உடனடியாக அவர் யூனிட்டுக்கு தயார் செய்யச் சொன்னார். எந்த ரிப்போர்டர் என்று பேச்சு வருகையில் அனைவரும்
என்னை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். காரணம் புரியவில்லை ஆனால் நான் போகும் வரை என்னை பார்த்து சிரித்தனர். நான் ஸ்டேஷன் போய் இறங்கினேன், அனைத்து பத்திரிக்கை, ஊடகங்களில்
இருந்தும் அனைவரும் வந்து இருந்தனர். நடிகையை உள்ளே வைத்து இருந்தனர், இவரின் தரிசனத்திற்கு பலர் காத்து இருந்தனர். பலர் தங்கள் தலையை சீவிக் கொண்டு இருந்தனர், சிலர் பாட்டிலில்
இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு இருந்தனர். போலீஸார் பர்தாவை அணிவித்தபடி நடிகையை அழைத்து வந்தனர். உடன் சில கைது செய்யப்பட்ட பெண்களும் தலையை குனிந்த படி இருந்தனர் இதில் யார் நடிகை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் போலீஸை பார்த்து

"என் சார் உள்ள துணிக்கடை எதாவது வச்சி இருக்கீங்களா இத்தனை பேருக்கும் அழகா பர்தா கொடுத்து இருக்கீங்களே, எங்களுக்கும் இரண்டு சட்டை குடுங்க?"

"இல்ல சார் நாங்க குடுக்கல, அவங்களே எடுத்து வந்தாங்க சார்"

யாரு இதுல நடிகை என்று அனைவரும் குழம்பிக் கொண்டு இருக்கும் வேலையில், நான் அந்த கூட்டத்தை நோக்கி அந்த நடிகையின் பெயரை சொல்லி

".................. உங்க வக்கீல் வந்து இருக்கார் பாருங்க" என்று சும்மா சொன்னேன், உடனே அந்த நடிகை தன்னுடைய பர்தாவை தூக்கி குரல் வந்த இடத்தை நோக்கி பார்த்தார், உடனே எங்க ஜாதிக்காரர்கள்
இவங்களை காமிராவால் சுட்டு தள்ளிவிட்டனர். வேனில் ஏறி அமர்ந்ததில் இருந்து அந்த நடிகை என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.

இந்த பிரச்சனையை குறித்து அடுத்த நாள் பூ என்று முடியும் ஒரு பத்திரிக்கையில் நடிகைகளில் ரேட் வாரியாக கட்டுரை எழுத பிரச்சனை வெடிக்க தொடங்கியது. உண்மையில் அந்த தகவலை
அந்த நடிகை போலீஸில் சொன்னது தான்.

"என்னை மட்டும் ஏன் கைது செய்றீங்க..............................", என்று வரிசையாக சில நடிகைகளில் பெயரை சொல்லி அவர்களின் ரேட்டையும் சொன்னார் அவர். இந்த பிரச்சனை சம்பந்தமாக
நாங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்த பொழுது, தடாலடியாக உள்ளே புகுந்த நாட்டாமை குணச்சித்திர நடிகர்

"இப்ப நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுக்குறீங்களா இல்லை, நான் அருவா எடுத்து அவனை ஒரே போடு போடட்டுமா?" என்றார் கன்னங்கள் துடிக்க. இதை கேட்டு அலட்டிக்காத
கமிஷனர் தன்னுடைய நெற்றியை சுருக்கிக் கொண்டு சொன்னார்.

"நீங்க பேசறது சினிமா கமிஷனரிடம் இல்லை, நிஜ கமிஷனர். உன்னையே அக்குயூஸ்டா புடுச்சி உள்ளே தள்ளிடுவேன், போயா வெளியே". நாட்டாமை ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.

இப்போ அந்த நடிகை ஒரு கட்சியில் மகளிர் அணி மாநில செயலாளர் பதவியில் இருக்கிறார், பிரபல நிறுவனத்தின் உயர் அதிகாரி போஸ்டும் அந்த கட்சி தலைவர் நடிகைக்கு தந்து இருக்காராம். தமிழகத்தில் மட்டும் தான் இந்த கருமாந்திர எழவு எல்லாம் நடக்கும். ஆனால் இந்த நடிகையுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விபச்சார வழக்கு போட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வெளியில் அவர்கள் செய்த இந்த தொழிலை இப்போழுது சிறைக்குள் வருமானம் இல்லாமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம்

சசிதரன்
16-01-2010, 01:33 PM
ஹா ஹா ஹா... டக்ஸ்... நீங்க சொல்றது யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு...

அவனுக்கு ஆரும் தண்ணி கொடுக்க கூடாது... அவன் கூட ஆரும் பேச கூடாது... அவன இந்த ஊர விட்டு தள்ளி வெக்கறேண்டா...:D

கடைசில நாட்டாமைக்கு தீர்ப்ப மாத்தி சொல்லிட்டாங்களே...:D

சிவா.ஜி
16-01-2010, 01:52 PM
பாவம் அந்த அழகிகள். இப்ப புழல்சிறையில் வருமானம் இல்லாம....தேய்மானம் ஆகிக்கிட்டிருக்காங்க.

என்ன சசி....தீர்ப்பை நம்ம மதி சொல்லிட்டாரா....இல்ல மாத்தி சொல்லிட்டாங்களா?...ஹி...ஹி..

நல்ல அனுபவம்தான் தக்ஸ்....இன்னும் நிறைய சொல்லு. திரைமறைவு செய்திகளைத் தெரிஞ்சிக்கறதுன்னா ரொம்ப ஆவல்.....நான் பக்கா தமிழன்ப்பா....

சசிதரன்
16-01-2010, 02:01 PM
என்ன சசி....தீர்ப்பை நம்ம மதி சொல்லிட்டாரா....இல்ல மாத்தி சொல்லிட்டாங்களா?...ஹி...ஹி..



ஆஹா... அண்ணா... பப்ளிக் பப்ளிக்...:D

ரங்கராஜன்
16-01-2010, 06:07 PM
ஒரு பிரபலமான கட்சியின் தலைவரை பேட்டி எடுக்க சென்று இருந்தேன். பல முறை முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தலைவர் அங்கே இருக்கார், இங்கே இருக்கார், விமான நிலையத்தில் இருக்கார், காரில் போறார் ..........கட்டையில் போறார் என்று பலவிதமான டபாய்புகளை தாண்டி அவரை சந்தித்தேன். அதற்கு முன் சில விஷயங்கள் இந்த மாதிரி பெரிய ஆட்களை சந்திக்கும் பொழுது அவர்களின் இந்த பி.ஏ க்களை பற்றி சொல்லியாக வேண்டும். அவர்களை பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கும் அப்படி பிடித்தாலும் அவர்களிடத்தில் அனைத்து விஷயங்களையும் சொல்ல வேண்டும். நம் வீட்டில் தண்ணீர் பிரச்சனை, பால்காரன் சரியான நேரத்திற்கு வருவது கிடையாது முதற்கொண்டு அனைத்தையும் சொல்லியாக வேண்டும். அவர்களை அதை கேட்கும் விதம் இருக்கிறதே அப்படியே மனிதவெடிகுண்டாக மாறி அவர்களை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது போல கோபம் வரும். முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு வயிறு சரியில்லாதவர்களை போல விஷயங்களை கேட்டார்கள். நானும் மூளை சரியில்லாதவன் போல பதில் சொல்வேன். அமைச்சார்களின் சொத்தில் சரி பாதி சொத்து இவர்களிடத்தில் தான் இருக்கும். அப்படி பல தடைகளை தாண்டி அந்த தலைவரிடத்து பேட்டி எடுக்க சென்று இருந்தேன். அப்பொழுது அந்த பி.ஏ என்னிடத்தில் எப்படி அவரிடம் பேச வேண்டும், எப்படி அவரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லினார்.

தலைவர் வரும் பொழுது நீங்க வணக்கம் சொல்லுங்க

அதை கண்டிப்பா சொல்லுவேங்க

பின்ன உலகமே மதிக்கும் தலைவர் இல்லையா

இல்லையே

என்னது

இல்லையா பின்ன

அவரிடம் கேட்கும் கேள்விகளை கவனமா கேளுங்க, கோபம் வராத மாதிரி கேளுங்க.

ம்ம்

என்ன கேட்பீங்க

கேள்வி தான்

சொல்லுங்க

சிரித்தேன்.

சரி தலைவர் வரும் பொழுது கொஞ்சம் மரியாதையா நடந்துக்கொங்க.

நான் சிரி்த்துக் கொண்டு "வேணும்னா சட்டையை அவுத்து என் அக்குலில் வச்சிக்கவா"

என்னது

பின்ன என்ன உங்க வேலையை நீங்க பாருங்க என் வேலையை என்ன பார்க்கவிடுங்க. என்று நான் முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டு சொல்ல. பி.ஏ இருண்ட முகத்துடன்

அடுத்த வாட்டி பேட்டினு கேட்டு வந்துடாதே.

கண்டிப்பா வரமாட்டேன், நீ இந்த மாசம் உள்ள போயிடுவ, உனக்கு ஆர்டர் ரெடியாகிக் கொண்டு இருக்கு. வேற பி.ஏ தான் இருப்பார் அடுத்த மாசம் என்று சொன்னேன்.

என்னது என்னது......... அவன் திணறுவதற்குள் தலைவர்............. சாரி கட்சி தலைவர் உள்ளே வந்தார்.

நான் வணக்கம் சொல்லவில்லை, அவரும் சொல்லவில்லை. காமிராவை ரெடி செய்து கொண்டு கேள்வியை கேட்க ஆரம்பித்தேன்.

சார் உங்கள் மீது போடப்பட்டு இருக்கும் வழக்கு, பல வருடங்களாக வாய்தாவிலே போவதற்கு காரணம்.

ஆளுங்கட்சியின் சதி தான், நான் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடக்கூடாது என்பதால் அவர்களின் கீழ்தனமான வேலைகளில் இதுவும் ஒன்று.

சரி நீங்கள் அதனால் தான் தலைமறைவாக இருக்கறீர்களா

அவரின் முகம் மாறுகிறது, யார் சொன்னா நான் தலைமறைவாக இருக்கிறேன் என்று.

இல்ல பல நாளா மீடியாவின் கண்ணிலே படாமல் இருக்கீங்களே அதனால் தான்

ஓ அப்ப தினமும் உங்களை சந்திக்காதவங்க எல்லாம் தலைமறைவா இருக்காங்கன்னு அர்த்தமா

அப்படியில்லங்க ஒரு பிரபலமான கட்சியின் தலைவர் நீங்க, மக்கள் எல்லாருக்கும் உங்களை தெரியும், நீங்கள் காணவில்லை என்று மக்கள் கவலைப்படவாங்களே அதனால் தான்.......... என்று ஒரு பிட்டை போட்டேன்.............. அவர் இதில் குஷியாகி விட்டார்.

நான் தொடர்ந்தேன்.

சரிங்க சார் உங்கள் மீது போடப்பட வழக்கு இன்று வரை உங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லையே ஏன்.

அதான் முதலிலே சொல்லிட்டேனே இது ஆளுங்கட்சியின் சதி என்று, கையாளாகாத தலைவரின் அரசாங்க ஜால்ராக்கல் தான் நீதித்துறையில் அதிகமாக இருக்கிறார்கள், அதனால் தமிழனுக்காக போராடும் என்னை போன்றவர்களை இந்த ஆட்சியில் யாரும் ஆதரிக்க மாட்டார்கள். ............ என்று காரசாரமாக பேசினார். எனக்கு தேவையான வார்த்தைகள் கிடைத்து விட்டது.

சார் இதை அப்படியே போடட்டுமா

போடு தம்பி யாருக்கு நான் பயப்படவேண்டும்

சந்தோஷம் சார், நான் வரேன்.

உங்க செல் நம்பரை குடுத்துட்டு போங்க தம்பி

ஏற்கனவே குடுத்து இருக்கேன் உங்க பி.ஏ கிட்ட.

அப்ப சரி அப்ப சரி.

கொஞ்ச நேரத்தில் என்னுடைய செல் நம்பருக்கு கால் வந்தது

நான் தான் தம்பி, ...................... பேசறேன்

சொல்லுங்க சார்,

தம்பி பேட்டியை ஏத்தியாச்சா, கொஞ்சம் நாம் பேச வேண்டும் அதை பத்தி தம்பி

சார் நான் இப்ப நீயூஸ் ரன்டவுனில் இருக்கேன் அப்புறம் கூப்பிடுகிறேன். என்று போனை கட் செய்தேன். என் எடிட்டரிடம் சென்று

சார் அந்த ஆளு போன் பண்றான் சார் என்ன செய்வது.

பேசு என் சொல்கிறார் என்று கேள் ........... என்றார், அதற்குள் இவர் பலமுறை என் செல்லுக்கு போன் செய்துக் கொண்டே இருந்தார். நான் கட் செய்து கொண்டே இருந்தேன். ஒரு மெசெஜ் வந்தது.

தயுவு செய்து போனை எடுக்கவும் அவசரமான விஷயம் என்று அந்த வீரத்தலைவர் அனுப்பி இருந்தார். நான் அவருக்கு போன் செய்தேன்.

தம்பி தயுவு செய்து நான் பேட்டியில் பேசியதில் ஆளுங்கட்சியின் சதி என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள்

சார் இது பேப்பர் இல்ல சார் விசுவல் மீடியா எப்படி எடுக்க முடியும் ஜம்ப் கட் ஆகிடும் சார்

தம்பி இங்க என் லைபே கட் ஆகிடும் தயவு செய்து அந்த வார்த்தையை எடுத்துவிடு. அப்புறம் கையாளாகாத தலைவரின் என்ற வார்த்தையும் எடுத்து விடு தம்பி

சார் என்ன சார் இது

புரிஞ்சிக்கோ தம்பி ப்ளீஸ்

ம்ம் அப்புறம்

நீதித்துறை ஜால்ராக்கல் என்ற வார்த்தையையும்

எல்லாத்தையும் எடுத்து விட்ட உங்க படம் மட்டும் தான் நீயூஸ்ல இருக்கும், அப்புறம் என்னத்த சொல்றது

அதான் தம்பி இந்த பேட்டியை போடாதே நாளைக்கு வா நான் சரியான வார்த்தையை பயன்படுத்தி பேசுறேன், இப்ப எதோ கோவத்துல பேசிட்டேன் ................ என்றார் கடைசியாக.

நான் என் எடிட்டரிடம் போய் சொன்னேன்.......... சார் இந்தாளு தண்டகருமாந்திரம் சார், உட்ட அழுதுடுவான் போல இருக்கு என்றேன். அவரும் சரி விடு என்றார்.

அடுத்த இரண்டாவது நாள் செய்திதாளில் அவரின் பெயரை போட்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கபட்டார் என்று இருந்தது. இந்த பேட்டியை ஒளிபரப்பி இருந்தால் தலைவருக்கு பல வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை தான்

மதி
16-01-2010, 06:19 PM
ஆஹா..பல மேட்டர் வெளிவரும் போலிருக்கே..!!!! கலக்கு தக்ஸ்... கொஞ்சம் ஜாக்கிரதை...!!

சிவா.ஜி
17-01-2010, 04:12 AM
ஆமா....எச்சரிக்கையா இருந்துக்கோ தக்ஸ்....அழுக்கை துவைக்க துணிந்தாலும், அந்த அழுக்கின் சக்தியையும் கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த ஆள் வடிவேலு ரேஞ்சுக்கு இறங்கிவந்து கெஞ்சுனது செம சிரிப்பு. கலக்கு தக்ஸ்.

தாமரை
18-01-2010, 11:45 AM
தமிழ்மன்ற அட்ரஸ் அவங்களுக்குத் தெரியாதில்ல..

த.ஜார்ஜ்
18-01-2010, 03:05 PM
தொழில் ரகசியம் மக்கா..
சுவாரசியமா இருக்குங்கிறதுக்காக... தொடரணுமா.

பா.ராஜேஷ்
18-01-2010, 03:18 PM
அடேங்கப்பா ! இவ்வளவு பிக்கல், பிடுங்கல்களா?? உங்களுக்கு ரொம்பதான் தைர்யம் தக்ஸ். பகிர்விற்கு நன்றிகள்.

என்னவன் விஜய்
18-01-2010, 10:33 PM
தக்ஸ் பதிவுகள் இரண்டும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.
உங்கள் பதிவுகள் தொடர்ந்தால் இந்த திரி செஞ்சரி அடிக்கும்.

cmn_raj
19-01-2010, 05:15 AM
இந்த பிரச்சனை சம்பந்தமாக
நாங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்த பொழுது, தடாலடியாக உள்ளே புகுந்த நாட்டாமை குணச்சித்திர நடிகர்

"இப்ப நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுக்குறீங்களா இல்லை, நான் அருவா எடுத்து அவனை ஒரே போடு போடட்டுமா?" என்றார்

நம்முளுக்கும் தெரிஞ்சு போச்சுங்கோ !

" ஆரும் அவங்கூட அன்னம் தண்ணி பொழங்க கூடாதாமா! சொல்லிபோட்டேன் " என்னறா பாக்கறே .. வண்டிய பூட்டுறா சண்முகா..:icon_ush:

நேசம்
19-01-2010, 06:13 AM
இருந்தாலும் உங்களுக்கு ஒர்ம்ப தைரியம் தக்ஸ்.உங்கள் பதிவை படிப்பத்தில் மிக்க மகிழ்ச்சி

பூமகள்
01-04-2010, 02:55 AM
தமிழ்மன்ற அட்ரஸ் அவங்களுக்குத் தெரியாதில்ல..
நான் கேக்க நினைத்ததை தாமரை அண்ணா கேட்டுட்டார்..

தக்ஸ்..
நலமா?? புது வேலையில் கலக்கறீங்க போல.. வாழ்த்துகள்.

சில விசயங்கள் பொதுவில் பேசும் போது எச்சரிக்கையா இருங்க.. எங்களுக்கு நடப்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி.. உண்மைகள் பல வெளியே வருகின்றன.. ஆனால், எங்களுக்கு நீங்களும் முக்கியம். பாதுகாப்பு, எச்சரிக்கை இரண்டையும் மறந்துடாதீங்க தக்ஸ்.

விகடன்
02-04-2010, 09:30 AM
தக்ஸ்..
உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்திதான். இருந்தாலும் சற்று புத்திசாதுர்ஜமாக செய்திகளை போடுங்கள்.

ரங்கராஜன்
06-04-2010, 03:40 PM
புத்திசாதுர்ஜமாக செய்திகளை போடுங்கள்.

அர்த்தம் புரியவில்லை தலைவரே விளக்கம் தேவை

விகடன்
06-04-2010, 04:08 PM
போடப்படும் செய்திகளால் உங்களுக்கு பாதகமான விளைவுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவந்தேன்.

பா.சங்கீதா
07-04-2010, 06:00 AM
இதை போல் இன்னும் பல உண்மைகளை கண்டுபிடிக்க வாழ்த்துகள் தக்ஸ்....:)

sarcharan
13-04-2010, 12:15 PM
வாழ்த்துகள் தக்ஸ்....

govindh
13-04-2010, 01:46 PM
வாழ்த்துக்கள் தக்ஸ்....!