PDA

View Full Version : சிறகுணர்ந்து பற



naan naanillai
16-01-2010, 08:00 AM
சிறகுணர்ந்து பற...



இயந்திரங்களுக்கு விடை சொல்லி
அது போன்ற இதயங்களுக்கும்..
அவற்றின் எண்ணங்களுக்கும்..

சிறகுணர்ந்து பற...
மனமே..
இதய அறைகளில்
கவலை குடியிருக்க கிடைத்த
கண்ணீர் வாடகையை
இனி மேக பஞ்சுகள்
துடைகட்டும்.

சிறகுணர்ந்து பற...

உடலுகுள் மனதை
சிறைவைத்தது போதும்...
வளர்ந்த பின்னும் குஞ்சுகள்
கோழியின் சிறகுக்குள் அடைகாக்க படுவதில்லை...
காற்றை போன்றது மனம்
அதையும் கடந்து செல்லும்...

சிறகுண்ர்ந்து பற...
காற்றலைகளில் சிறகு தோனிகளை அசைத்து பற..

மேக தேரில் ஊர்வலம் நடத்து...

சிறகு படாத இடங்கள் இந்த
வானத்தில் இருக்கவேண்டாம்.
வண்ணத்து பூச்சியின்
கூட்டம் சேர்த்து
நீலத்தை நிறம் மாற்று...

சிறகுணர்ந்து பற...
எப்படியும் நேரும் மரணம்
அதுவே இப்படி இருக்க்ட்டும்...
சூரியனை தீண்டு ...
உலகிற்கு சேவகம் செய்ததிற்க்கு
நீ ஏதேனும் செய்..
சிறகு கொண்டு சாமரம் வீசு ..

சூரியனின் மத்தியில் பாரதியின் முகத்தில் மீசை போல் சிறகு விரி

அங்கிருந்து நிலவுக்கு வா
பாதியாய் இருக்குமதற்க்கு மீதியாய் இணை...
முழுமையாய் காட்டு

சிறகுணர்ந்து பற...
உன்னைத் தேடி வரும் மரணத்தையும்
மூச்சிறைக்க செய்.

தேவைபட்டால் உன் அலகு கொண்டு வானம் கிழித்து பயணப்படு...

சிறகுணர்ந்து பற...

ஜனகன்
16-01-2010, 08:30 AM
அருமையான கவிதை வடித்துள்ளீர்கள் நான் நானில்லை (அவனில்லை).

உங்களை அறிமுகம் செய்துவிட்டு, படைப்புகளை பதிவு போடலாமே????????

சிவா.ஜி
16-01-2010, 09:19 AM
உற்சாகமூட்டும் அருமையான வரிகள். அதிலும்..

"சிறகு படாத இடங்கள் இந்த
வானத்தில் இருக்கவேண்டாம்.
வண்ணத்து பூச்சியின்
கூட்டம் சேர்த்து
நீலத்தை நிறம் மாற்று..."

இந்தவரிகள் மிக அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள் கவிஞரே...(பெயரை எப்படி சொல்வது என்ற தயக்கம். பயணர் பெயரை தேர்வு செய்யும்போது சற்று யோசித்து தேர்ந்தெடுத்தால் அழைக்க வசதியாக இருக்கும்)

விக்ரம்
16-01-2010, 12:19 PM
வாழ்த்துக்கள் கவிஞரே...நல்ல கவிதை