PDA

View Full Version : ரயில்



ஆதி
16-01-2010, 12:21 AM
இதழ்களின் இரைச்சல்
தண்டவளத்தில் நசிய
புறப்படுகிறது ரயில்

இரையும் உதடுகளின் ஓசையில்

கண்கள் ததும்பும்
ஒரு விடைபெறுதலோ

ஒரு தீர்ப்புக்கான மறு விசாரணையோ..

ஒரு மரணத்திற்கான அவசர ஆறுதலோ

ஒரு இளம்பெண்ணின் இதமான புன்னகையோ

ஒரு குழந்தையின் பால்வாசனையான அழுகையோ

என
எதுவும் இருக்கலாம்..


ஆனாலும்
எதையும் பொருட்படுத்தாமல்
விரைகிறது ரயில்
தன் இலக்கை நோக்கி
மீண்டும்
துவங்கிய இடத்திற்கே திரும்ப....

சுகந்தப்ரீதன்
16-01-2010, 02:44 AM
மனிதவாழ்வும் ரயிலைப்போலத்தான்... எதையுமே பொறுப்படுத்தாமல் இலக்கென்று எதையெதையோ தப்பாய் கற்பிதம் செய்துக்கொண்டு விரைந்து சென்று அடைகிறது துவங்கிய இடத்தையே மீண்டும்..!!

நாமெல்லாம் பயணியாய் உணர்வதைவிட இரயிலாய் ஓடுகிறோம் அப்படித்தானே ஆதன்..?!

muthuvel
16-01-2010, 04:17 AM
மனிதா ,என்னை ரசித்தால் நீ சமத்து,
குறிகிட்டால் விபத்து ...

சிவா.ஜி
16-01-2010, 06:39 AM
இரயில் புறப்பாடு....உணர்த்தும் உண்மைகளை அழகான வரிகளால் செதுக்கிய ஆதனுக்கு அன்பான வாழ்த்துகள்.

இளசு
19-01-2010, 07:56 PM
காமிரா கண்களும்
கவித்துவ நெஞ்சமும்
இணைந்தால் பிறக்கும்
இவ்வகைக் கவிதை..


ஆதனுக்கு அன்பு..

முத்துவேலின் நறுக் வரி நன்று!

இன்பக்கவி
23-01-2010, 02:26 PM
ஒரு ரயிலின் புறபாட்டை கூட எவ்வளவு அழகா சொல்லி இருகின்றீர்கள்
வாழ்த்துக்கள்