PDA

View Full Version : அது ஒரு மழைக்காலம்... (புதிய அகநானூறு வரிசையில்..)



gans5001
15-01-2010, 11:44 AM
உனக்கு நினைவிருக்கிறதா?
அன்றொரு நாள் விருந்தினனாய்
உங்கள் வீட்டில் நான்..

மெல்லிய மழையில் நனைந்து
நான் இரவெல்லாம் ஜலதோசித்துக் கொண்டிருக்க
இருளில் யாருமறியாமல்
நீ இதமாய் தடவிய விக்ஸ்..

இப்போதெல்லாம்
மழையும், ஜலதோசமும் மட்டுமே
மிஞ்சி நிற்கின்றன..
உனது விரல்கள் வெகு தூரம்
சென்று விட்டதால்!

சிவா.ஜி
15-01-2010, 12:08 PM
ஒருநாள் விரல் ஸ்பரிசமே....நனையும் மழையிலும், வரும் தும்மலிலும் விரல் நினைவை விதைத்துவிட்டது.

ஆழப்பதிந்த காதல் நினைவு அழகான வரிகளால் செதுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துகள் கன்ஸ் அவர்களே.

பாரதி
15-01-2010, 03:30 PM
விரல்கள்தான் மருந்தெனில் விக்ஸ் எதற்கு நண்பரே...??

புதிய அகநானூறு கண்டு நான் அகம் மகிழ்கிறேன்.
தொடரட்டும் கவிப்பூக்கள்.

gans5001
18-01-2010, 08:47 AM
ஊக்கமளிக்கும் சிவா.ஜிக்கும், பாரதிக்கும் நன்றி.

இளசு
19-01-2010, 07:28 PM
சாலப் பரிந்தூட்டுவதில்
மழைக்கும் தாய்க்கும் அடுத்து
மனம் இணைந்தவள்..

மழைக்கால இரவில்
பரிவை அனுபவித்து,
பிரிவில் கரையா
நினைவில் இலயித்து.....


தைபிறந்து வழி பிறந்து
தொடரும் அகநானூற்றுக்கு
அகம்நிறை வாழ்த்துகள் நண்பா..

gans5001
21-01-2010, 09:40 AM
நன்றிகள் பல கருத்துகள் தெரிவித்தவர்கட்கு.
தை பிறந்ததால் மட்டுமல்ல இளசு... இருநாட்கள் அலுவலக விடுப்பும் கிடைத்தது