PDA

View Full Version : சிறை சாலை அன்றும் ,இன்றும் ..

muthuvel
15-01-2010, 03:25 AM
அன்று தியாகிகள்,
இன்று யோகிகள்,
போலிச்சாமியார் பாலியல் வழக்கில் ...

அன்று தேச தலைவர்கள்,
இன்று அரசியல் தலைவர்கள்,
ஊழலில் ....

அன்று தேச சுதந்திரத்திற்காக,
இன்று சுய விளம்பரத்திற்காக,
அரசியல் தலைவர்கள் ...

அன்று நீதி தவறிய மன்னர்கள் ,
இன்று நிதி மோசடி கள்ளர்கள் ...

அன்று தேசபிதா
இன்று DHA DHA .. ....

அன்று கப்பல் ஒட்டிய தமிழன் ,
இன்று மப்பில் வாகனம் ஒட்டிய தமிழன் ..

அன்று செய்த தவறுக்கு ,
இன்று தவறு செய்வதற்கு ..

அக்னி
15-01-2010, 07:06 AM
விளாசுகின்றது ஒப்பீடு...

இறுதிவரிகளிற் தெரிகின்றது தவறுகளின் ஆரம்பப்புள்ளி...

தவறுகளைத் திருத்திக்கொள்ளத்தான் சிறைச்சாலை
என்றிருந்தது,
தவறுகளைத் தெரிந்துகொள்ள
என்றானது யார் தவறு...

தேவை இன்று,
சிறைச்சாலைக்கும் ஒரு சிறைச்சாலை...

பாராட்டுக்கள்...

muthuvel
15-01-2010, 07:11 AM

உங்க பாராட்டுக்கு ரோம்ப நன்றி அண்ணா , இந்த உற்சாகம் மேலும் என்னை ஊகமளிகிறது..

அக்னி
15-01-2010, 07:16 AM
உங்க பாராட்டுக்கு ரோம்ப நன்றி அண்ணா , இந்த உற்சாகம் மேலும் என்னை ஊகமளிகிறது..
:sprachlos020::sprachlos020::sprachlos020:
என்ன...
அண்ணாவா...
ஓவியன், அன்பு, அமரன், ஆதி, விராடன், செல்வா...
எல்லாரும் ஓடியாங்கோ தம்பி ஒருத்தன் மாட்டீட்டான்...

சிவா.ஜி
15-01-2010, 07:50 AM
பிரமாதம் முத்துவேல்...எழுத்துக்களில் கனம் கூடுகிறது. சந்தோஷம்.

ஒப்பீடு அருமை. சிறைச்சாலைகள் சிலருக்கு இப்போது நிஜமான மாமியார்வீடுதான், அத்தனை வசதிகளும் கிடைக்கும் அரசாங்க தங்கும் விடுதி.
சிறைக்குச் சென்றவனின் குடும்பம் என்ற தூற்றல் அப்போது...
சிறைக்குச் சென்றவனின் குடும்பம் என்ற போற்றல் இப்போது....

வாழ்த்துகள் முத்துவேல்.

சிவா.ஜி
15-01-2010, 07:52 AM
:sprachlos020::sprachlos020::sprachlos020:
என்ன...
அண்ணாவா...
ஓவியன், அன்பு, அமரன், ஆதி, விராடன், செல்வா...
எல்லாரும் ஓடியாங்கோ தம்பி ஒருத்தன் மாட்டீட்டான்...

எல்லாருக்கும் தம்பியாவே எத்தனைநாள் இருப்பீங்க....அண்ணனாகவும் ஆகித்தானே ஆகனும்....!!!

ஜனகன்
15-01-2010, 08:47 AM
சமூக சிந்தனையுடன், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திய கவிதை வரிகள்.
அதை வடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

jayashankar
15-01-2010, 08:47 AM
தகுந்த பாதுகாப்போடு அரசாங்கத்தாலேயே கேளிக்கை விடுதியாக்கப் பட்டிருக்கும் சிறையைப் பற்றி அருமையாக கவிதை வரிகளில் படைத்திருக்கின்றீர்கள் முத்து மிகவும் அருமை.

அதுவும் அந்தக் கடைசி இரண்டு வரிகள்

அன்று செய்த தவறுக்கு ,
இன்று தவறு செய்வதற்கு ..

முத்தாய்ப்பான வரிகள்....

ஆதி
15-01-2010, 10:44 AM
எல்லோரும் குறிப்பிட்டிருப்பது போல் எழுத்து மெருகேறி வருகிறது முத்துவேல்..

கவிதையில் சிட இடங்கள் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ ?

//அன்று தேச தலைவர்கள்,
இன்று ராஜ மந்திரிகள்,
ஊழலில் ....

அன்று நீதி தவறிய மன்னர்கள் ,
இன்று நிதி மோசடி மன்னர்கள் ...

அன்று கப்பல் ஒட்டிய தமிழன் ,
இன்று மப்பில் ஒட்டிய குடிமகன் ..
//

வெளுப்புத் துறைகளாக இருக்க வேண்டிய சிறைச்சாலைகள்
அழுக்கு கறைகளை பெற்றெடுக்கும் பிரசவ சாலைகளாக
மாறிவிட்டன இன்று..

பாராட்டுக்கள் முத்துவேல்..

சிவா.ஜி
15-01-2010, 10:55 AM
ஆதனின் பரிந்துரை வரிகள் கவிதையை மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்த்துகள் ஆதன்.

பா.ராஜேஷ்
15-01-2010, 11:02 AM
தண்டனைகள் கடுமையாய் இல்லாவிட்டால் குற்றங்கள் குறையாது.
சிறைச்சாலையும் ஒரு பொழுது போக்கு இடமாய் மாறினால் வேதனைதான் !

muthuvel
15-01-2010, 11:35 AM
எல்லோரும் குறிப்பிட்டிருப்பது போல் எழுத்து மெருகேறி வருகிறது முத்துவேல்..

கவிதையில் சிட இடங்கள் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ ?

//அன்று தேச தலைவர்கள்,
இன்று ராஜ மந்திரிகள்,
ஊழலில் ....

அன்று நீதி தவறிய மன்னர்கள் ,
இன்று நிதி மோசடி மன்னர்கள் ...

அன்று கப்பல் ஒட்டிய தமிழன் ,
இன்று மப்பில் ஒட்டிய குடிமகன் ..
//

வெளுப்புத் துறைகளாக இருக்க வேண்டிய சிறைச்சாலைகள்
அழுக்கு கறைகளை பெற்றெடுக்கும் பிரசவ சாலைகளாக
மாறிவிட்டன இன்று..

பாராட்டுக்கள் முத்துவேல்..

ரோம்ப நன்றி நண்பரே , என் பேனா முனையை கூர்மை ஆகியதற்கு ...

அக்னி
15-01-2010, 11:43 AM
எல்லாருக்கும் தம்பியாவே எத்தனைநாள் இருப்பீங்க....அண்ணனாகவும் ஆகித்தானே ஆகனும்....!!!
சரிங்க தாத்தா... :cool:

சிவா.ஜி
15-01-2010, 11:58 AM
சரிங்க தாத்தா... :cool:

இப்படியும் ஒருநாள் ஆகித்தானே ஆகனும் அக்னி தாதா.(தாத்தா இல்லை தாதா...)

அக்னி
15-01-2010, 12:02 PM
இப்படியும் ஒருநாள் ஆகித்தானே ஆகனும் அக்னி தாதா.(தாத்தா இல்லை தாதா...)
கையை நீட்டுங்க... கொள்ளிக்கட்டையே தாறன்.

சிவா.ஜி
15-01-2010, 12:10 PM
கையை நீட்டுங்க... கொள்ளிக்கட்டையே தாறன்.

அதான் அவதார்லயே வெச்சு பயமுறுத்துறீங்களே....இன்னும் கையில் வேற தரனுமா...?

muthuvel
27-02-2010, 02:46 AM
நேற்றுகூட ஒரு கைதி சிறையில் மரணம்