PDA

View Full Version : தம்பி’ பத்திரமாக இருக்கின்றார்rajkulan
14-01-2010, 02:14 PM
தம்பி’ பத்திரமாக இருக்கின்றார் காலம்வரும் போது அயமமயடு அரn வாழழnசுரஎயயச என்ற இனிப்பான செய்தியோடு இந்த தை முதல் திங்களை வரவேற்கக் காத்திருந்த எம் இனிய உலகத் தமிழர்களிற்கு தித்திப்பூட்டும் வகையில் காதிற்கினிய மேலும் ஒரு செய்தி எம்மை எட்டியுள்ளது.


உலகத்தமிழர்களை உவகை கொள்ளச் செய்யும் விதமான ஒரே செய்தி என்றால் அது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பான செய்தியாகவே இருக்க முடியும்.

அந்தவகையில் எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை விம்மியழ நேரமில்லை வீரர்படை தோற்பதில் என்ற பாடல் வரிகள் மூலமாக உலகத்தமிழர்களை தெம்பூட்டிவந்த பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் வீர வரிகளை உயிர்ப்பித்திருக்கின்றார் அன்னை பார்வதி அம்மாள்.

எமது தேசியத் தலைவர் தொடர்பாக பல்வேறு செய்திகள் கடந்த மே.18ம் நாள் முதல் வெளியாகி வந்த வேதனைப்படுத்தி வந்தவேளை எமது உலகத் தமிழ்ச் சொந்தங்களிற்கு ஆறுதல் அளிக்கக்கூடியவாறும் அதேவேளை உண்மையுள்ளதாகவும் அமையக் கூடியவாறாக தகவல்கள் எதுவும் வெளிவராது இருந்துவந்தது.

எட்டு மாதங்கள் எட்டு யுகங்களாக கடந்துவிட்ட நிலையில் துயரம் போக்கி புதிய தமிழ் புத்தாண்டுப் பிறப்போடு அன்னை பார்வதி அம்மாள் ஊடாக வந்த அச்செய்தி உலகத்தமிழர்களது காதுகளினூடே பாய்ந்து உடலை சிலிர்க்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது.

‘தம்பி’ பத்திரமாக இருக்கின்றார் காலம் வரும் போது மக்கள் முன் ஈழத்தில் தோன்றுவார் என உறுதிபடத் தெரிவித்த பார்வதி அம்மாள் டென்மார்க்கில் உள்ள மகனிடமும் (தலைவரது தமயனாரிடம்) ‘தம்பி’ பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முன்னர் குறிப்பிட்டது போன்று “மா”தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது மரணத்தின் மூலம் மகத்தான பணியினை ஆற்றி வீர வரலாறாகியுள்ளார்.

முதுமையின் பிடியிலும் அதோடிணைந்த நோய்களின் ஆக்கிரமிப்பிலும் சிக்கித் தவித்துவந்த அன்னை பார்வதி அம்மாள் கொடிய சிங்களவனது கொடுங் கரங்களிற்குள் சிறைப்பட்டு இருந்த வேளை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உலக நாடுகளது முகத்திலறைவது போன்று துணைவியரை மீட்டு உறவுகளின் கைகளில் ஒப்படைப்பதற்கு தன்னுயிரை ஆயுதமாக்கி தனி ஒருவராக போராடியுள்ளார் 86வயது போராளி திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்கள.

மௌனத்தின் மூலம் சிங்களத்தின் அத்துமீறல்களுக்கு அங்கீகாரம் கொடுத்து வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளையும் பொருட்படுத்தாது தம்முயிர் போக்கி துணைவியரை உறவுகளின் கைகளில் ஒப்படைத்ததன் மூலம் உலகத் தமிழர்களுக்கு உயிர் கொடுத்துள்ளார் “மா”தந்தை.

தலைவன் இருக்கின்றான்.அமைய பத்திரமாக இருக்கின்றான். முள்ளிவாய்க்காலில் வைத்து எம் இனத்திற்கு வரலாற்றுத் துயரத்தை தந்த சிங்களத்திற்கு பதிலடி கொடுக்க தானை தலைவன் உள்ளான். இந்த சேதி கேட்டு உலகத் தமிழர்கள் எவ்வாறு உவகை பெற்றனரோ அந்தளவிற்கு சிங்களமும் அதோடிணைந்து தமிழின அழிப்புக்களத்தில் கரம் கோர்த்த காந்தி தேசத்திற்கும் பேரிடியாகவே அமைந்திருக்கும்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எமது மக்களே! எமக்கான பணியை விரைந்து முன்னெடுக்க முன்வாருங்கள். எதிர்வரும் நாட்களில் லநநசஅயni சுவிளா நெதர்லாந்து இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் வட்டுக்கோட்டை தீர்மாணத்தை மீள் உறுதி செய்து கொள்வதற்கான தேர்தல்களில் முழுமையாக பங்குபற்றி வரலாறு காணாத தீர்ப்பினை வழங்கி தமிழீழ தனியரசே தமிழர்களது உறுதியானதம் இறுதியானதுமான தீர்ப்பு என்பதனை உறுதிப்படுத்துங்கள்

அதுவே 86 வயதிலும் தம்முயிர் போக்கி சிங்கள கொடுங்கரங்களில் இருந்து எமது அன்னையை விடுவித்து எமக்கெல்லாம் உத்வேகத்தை தந்துள்ள தலைவன் இருப்பு தொடர்பான செய்தியை உறுதிப்பத்தி வீர வரலாறாகிப் போயுள்ள “மா”தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.


குறிப்பு...

தமிழீழத் தேசியத் தலைவர் பாதுகாப்புடனும் புலிகளினது முக்கிய படையணிகளுடனும் பாதுகாப்பாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பிரபாகரன் என்னை கனடாவில் வந்து சந்திப்பார் என்று திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக திருமாவளவனிடம் கேட்பதற்கு ஈழதேசம் இணையம் முயட்சி மேற்கொண்டுள்ளது.

எமக்கு வல்வையில் இருந்து கிடைத்த செய்தியின் படி அண்ணா எப்படி இருக்கார் என்று திருமா அவர்கள் பார்வதி அம்மாவை கேட்டதாகவும் அதற்கு அவர் ஓம் தம்பி கவலைப்படாதிங்க தம்பி(பிரபாகரன்) பாதுகாப்போடும் பலத்துடனும் இருக்கிறார் காலம் வரும் போது ஈழத்தில் மக்கள் முன் தோன்றுவார் என்றே தெரிவித்ததாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தலைவர் அவர்கள் பார்வதி அம்மாவை கனடாவில் வந்து சந்திப்பதாக இந்திய இணையங்களால் வெளியிடப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் இவ்வாறு திருமா அவர்கள் செய்தியை வெளியிட்டாரா அல்லது பார்வதி அம்மா அவர்கள் நாம் மேல்குறிப்பிட்ட வாறு திருமா அவர்களிடம் தெரிவித்ததை அவர் ஊடகங்களுக்கு வெளியிடும் பொது ஊடகங்கள் அந்தச்செய்தியை மாற்றி வெளியிட்டதா என்பது தொடர்பாக இன்னும் சில நட்களில் நாம் உறுதிப்படுத்துவோம்.


நன்றி

ஈழதேசம்

சிவா.ஜி
14-01-2010, 02:56 PM
எல்லாம் இழந்தபோதும் உடனிருப்பது நம்பிக்கை மட்டுமே....நம்புவோம்.

ஜனகன்
14-01-2010, 08:29 PM
rajkulan, உங்கள் வார்த்தை என் காதுகளில் தேனாக வந்து பாய்ந்தது.
நம்பிக்கையுடன் இருக்கின்றேன் அவர் எம்முன் வந்து காட்சி தரும்வரை.

Mano.G.
15-01-2010, 04:01 AM
பொங்கல் நன்நாளிள்,
எனது காதுக்கு கிடைத்த
இனிப்பான செய்தியாக இதை கருதுகிரேன்,
தலைவரின் தோன்றுதலையும் எதிர்பார்க்கின்றேன்